- Home
- Gallery
- லாக் ஆகிட்டேன்! காதலரின் கையை பிடித்துக்கொண்டு புகைப்படம் வெளியிட்ட நடிகை சுனைனா.. குவியும் ரசிகர்கள் வாழ்த்து
லாக் ஆகிட்டேன்! காதலரின் கையை பிடித்துக்கொண்டு புகைப்படம் வெளியிட்ட நடிகை சுனைனா.. குவியும் ரசிகர்கள் வாழ்த்து
நடிகை சுனைனா, தன்னுடைய காதலரை அறிமுகப்படுத்தி.. காதலரின் கையை பிடித்திருக்கும் புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த போட்டோ வைரலாக பார்க்கப்பட்டு வருகிறது.

Sunainaa
ஆரம்பத்தில் ஹீரோயின் வாய்ப்பு கிடைக்கவில்லை என்றாலும், ஹீரோயின் தோழி, ஃபிரென்ட் போன்ற ரோல்களில் நடித்தார். அப்படியே ஹீரோயினாக நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. தெலுங்கு மொழி படங்களை தொடர்ந்து, தமிழில் கடந்த 2008 ஆம் ஆண்டு இயக்குனர் பி.வி. பிரசாத் இயக்கத்தில் சைக்கோலஜி திரில்லராக வெளியான 'காதலில் விழுந்தேன்' படத்தில் ஹீரோவாக அறிமுகமான நடிகர் நகுலுக்கு ஜோடியாக நடித்தார். வித்தியாசமான கதைக்களத்தில் எடுக்கப்பட்ட இப்படம் விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்றது.
Sunainaa
முதல் படத்திலேயே நகுல் - சுனைனா ஜோடி ரசிகர்கள் மத்தியில் அதிகம் ரசிக்கப்பட்ட இளம் ஜோடியாக இருந்த நிலையில், இதை தொடர்ந்து இரண்டாவது முறையாக 'மாசிலாமணி' படத்தில் ஒன்று சேர்ந்து நடித்தனர்.
Sunainaa
ஆனால் இப்படத்திற்கு பின்னர் மீண்டும் இருவரும் ஒரு படத்தில் கூட இணையவில்லை. தமிழ், தெலுங்கு என இரு மொழிகளிலும் கவனம் செலுத்தி வந்த சுனைனாவுக்கு சமீப காலமாக எதிர்பார்த்த அளவுக்கு வெற்றி படங்கள் எதுவும் அமையவில்லை.
Sunainaa
குறிப்பாக 'ரெஜினா' என்கிற படத்தில் கதையின் நாயகியாக சுனைனா நடித்தார். இப்படம் இவரின் கேரியரை மீண்டும் உயர்த்தும் என அவர் நம்பிய நிலையில்... அப்படம் படுத்து விட்டது. திரைப்படங்களை தொடர்ந்து தற்போது சில வெப் சீரீஸ்களில் கவனம் செலுத்தி வரும் சுனைனா, 35 வயதை ஏற்றிவிட்ட நிலையில் ஒருவழியாக திருமணத்திற்கு தயாராகி விட்டார்.
Actress Death: 39 வயதில்... பரிதாபமாக உயிரிழந்த பிரபல நடிகை! ரசிகர்கள் அதிர்ச்சி!
தன்னுடைய காதலரின் கையை பிடித்து கொண்டு, பூட்டு பூட்டப்பட்ட புகைப்படத்தை பதிவிட்டு.. விரைவில் வெட் லாக் போட உள்ள தகவலை புகைப்படத்துடன் வெளியிட்டுள்ளார். இந்த புகைப்படத்தில் இவரின் காதலர் முகத்தை வெளிப்படுத்தவில்லை என்றாலும், ரசிகர்கள் தொடர்ந்து தங்களின் வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.