MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Gallery
  • 12 வயதிலேயே இப்படி ஒரு பக்குவமா? முதல் சம்பளம் ரூ.1 கோடியை நன்கொடையாக கொடுத்த மகேஷ் பாபு மகள் சித்தாரா!

12 வயதிலேயே இப்படி ஒரு பக்குவமா? முதல் சம்பளம் ரூ.1 கோடியை நன்கொடையாக கொடுத்த மகேஷ் பாபு மகள் சித்தாரா!

பிரபல தெலுங்கு நடிகர் மகேஷ் பாபுவின் மகள் சித்தாரா, விளம்பரப்படம் மூலம் சம்பாதித்த ரூ.1 கோடி பணத்தை, தொண்டு நிறுமணத்திற்கு கொடுத்து அனைவரையும் ஆச்சர்யப்படுத்தியுள்ளார். 

2 Min read
manimegalai a
Published : Jun 05 2024, 06:09 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
16

தமிழ் தளபதி விஜய் ரேஞ்சுக்கு, அதிக அளவிலான ரசிகர்களை கொண்டவர் தான் மகேஷ் பாபு. இவர் தெலுங்கு நடிகர் மற்றும் அரசியல்வாதி கட்டமனேனி கிருஷ்ணாவின் மகன் ஆவார். எனவே சிறு வயதிலேயே திரைப்படங்களில் நடிக்க துவங்கிய மகேஷ் பாபு, பின்னர் ஹீரோவாக மாறி இன்று தெலுங்கு திரையுலகின் வசூல் மன்னனாக உயர்ந்துள்ளார்.
 

26

மகேஷ் பாபு, நடிகை நம்ரதாவை 2005-ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்ட நிலையில் இவர்களுக்கு கௌதம் கட்டமனேனி  என்கிற மகன் மற்றும் சித்தாரா கட்டமனேனி என்கிற மகள் ஒருவரும் உள்ளனர். 

Actress Death: 39 வயதில்... பரிதாபமாக உயிரிழந்த பிரபல நடிகை! ரசிகர்கள் அதிர்ச்சி!
 

36

12 வயதே ஆகும் சித்தாரா... இளம் வயதிலேயே மாடலிங் துறையில் அடியெடுத்து வைத்து அனைவரையும் பிரமிக்க வைத்தார். சமூக வலைத்தளத்திலும் படு ஆக்ட்டிவாக இருக்கும் இவரை ஏகப்பட்ட ரசிகர்கள் ஃபாலோ செய்து வருகிறார்கள்.
 

46

சமீபத்தில் பிரபல நகை கடை நிறுவனத்தில் விளம்பரத்தில் நடித்தார் சித்தாரா. அதற்கு சம்பளமாக இவர் ரூ.1 கோடியை பெற்ற நிலையில், அதனை எவ்வித தன்னலமும் இன்றி யோசித்து.. தொண்டு திருமணம் ஒன்றிற்கு, நன்கொடையாக அளித்து பலருக்கு உதவி செய்துள்ளார். சீதாராவின் இந்த செயல் அனைவரது பாராட்டுகளையும் குவித்து வருகிறது.

ஆனந்தி கழுத்தில் தாலி கட்டினானா நந்தா? சிங்கப்பெண்ணே சீரியலில் நடந்த எதிர்பாராத ட்விஸ்ட்.! பரபரப்பான அப்டேட்!
 

56

ரசிகர்களும் மக்களும், 12 வயதிலேயே இப்படி ஒரு பக்குவமா? இந்த குழந்தைக்கு என ஆச்சர்யத்துடன் கேள்வி எழுப்பி வருகிறார்கள். சித்தாரா பன்முக திறமையாளராக பார்க்கப்பட்டு வருகிறார். சிறு வயதில் இருந்தே குச்சிப்புடி மற்றும் பாலேட் போன்ற நடனங்களை கற்று வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
 

66

தற்போது ஹைதராபாத்தில் உள்ள CHIREC இன்டர்நேஷனல் பள்ளியில் 7-ஆம் வகுப்பு படித்து வருகிறார் சித்தாரா. தனது கலை நோக்கங்களுக்கு அப்பால், வாசிப்பு, நீச்சல் மற்றும் கிட்டார் வாசிப்பதிலும் இவருக்கு ஆர்வம் அதிகம்.  இவரின் பெற்றோரும் சீதாராவின் திறமைக்கு தோல்கொடுத்து அவரின் முயற்சிக்கு தொடர்ந்து உறுதுணையாக இருந்து வருகிறார்கள்.
பிரேம்ஜி திருமணம் செய்து கொள்ளும் பெண் குறித்து பரவிய வதந்தி! முற்று புள்ளி வைத்த இயக்குனர் வெங்கட் பிரபு!

About the Author

MA
manimegalai a
மணிமேகலை ஐடி துறையில் இளங்கலை பட்டப்படிப்பும், புதுவை பல்கலைக் கழகத்தில் எலக்ட்ரானிக் மீடியா துறையில் முதுகலை பட்டப்படிப்பையும் முடித்துள்ளார். சுமார் 10 வருடங்கள், மீடியா துறையில் பணியாற்றி வருகிறார். இதுவரை ஜீ தமிழ், இந்தியா கிளிட்ஸ் போன்ற நிறுவனங்களில் பணியாற்றி உள்ளார். பல பிரபலங்களை பேட்டி கண்டுள்ளார். தற்போது ஏசியா நெட் தமிழில், சப் எடிட்டராக 8 வருடங்களாக பணியாற்றி வருகிறார். சினிமா மற்றும் லைப் ஸ்டைல் செய்திகளை எழுதி வருகிறார்.

Latest Videos
Recommended Stories
Related Stories
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2025 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved