"மனைவி சொன்னா போனில் கூட படமெடுப்பேன்" - சுகாசினியுடன் ரோம் நகரில் மணிரத்னம் - வைரல் கிளிக்ஸ்!
மதுரை மண்ணில் பிறந்து சினிமா துறையில் சாதித்த பலரில் முக்கியமானவர் தான் இயக்குனர் மணிரத்தினம். தனித்துவமான திரைப்படங்களை இயக்குவதில் பெயர் பெற்ற மணிரத்தினம், கடந்த 1988 ஆம் ஆண்டு நடிகை சுகாசினியை திருமணம் செய்துகொண்டார்.
Maniratnam
"பல்லவி அணு பல்லவி" என்கின்ற திரைப்படத்தின் மூலம் கடந்த 1983 ஆம் ஆண்டு இயக்குனராக கன்னட திரை உலகில் களமிறங்கியவர் மணிரத்தினம் என்பது குறிப்பிடத்தக்கது. தமிழில் இவர் எழுதி, இயக்கி வெளியிட்ட முதல் திரைப்படம் 1985 ஆம் ஆண்டு நடிகர் முரளி நடிப்பில் வெளியான பகல் நிலவு தான்.
விஜயகுமார் - மஞ்சுளா ஜோடி.. காதல் திருமணம் கைகூடியது எப்படி? முதலில் காதலை சொன்னது யார் தெரியுமா?
Suhashini Rome
அதன் பிறகு கடந்த 1986 ஆம் ஆண்டு பிரபல நடிகர் மோகன் மற்றும் ரேவதி நடிப்பில் வெளியான "மௌன ராகம்" என்கின்ற திரைப்படம் மணிரத்தினம் அவர்களுடைய புகழை தமிழகம் எங்கும் பரவச் செய்தது என்றால் அது மிகையல்ல.
Suhashini
அதனைத் தொடர்ந்து 1987 ஆம் ஆண்டு உலக நாயகன் கமல்ஹாசன் நடிப்பில் வெளியான "நாயகன்" என்ற திரைப்படம் தமிழ் திரை உலகை தாண்டி, இந்திய திரை உலகத்தையே மணிரத்தினத்தை நோக்கி திரும்பச் செய்தது. இந்தப் படத்திற்கு பிறகு தான் நடிகர் கமல்ஹாசனின் உறவினரான நடிகை சுகாசினியை இருவீட்டார் சம்மதத்தோடு 1988 ஆம் ஆண்டு மணிரத்தினம் திருமணம் செய்து கொண்டார்.
Suhashini Maniratnam
கடந்த ஆகஸ்ட் மாதம் 29ஆம் தேதி மணிரத்தினம் மற்றும் சுகாசினி தம்பதியினர் தங்களுடைய 35 ஆம் ஆண்டு திருமண நாளை பெரிய அளவில் விமர்சையாக கொண்டாடினர். இந்நிலையில் ரோம் நகரில் அவர்கள் இருவரும் தங்கள் விடுமுறையை சந்தோஷமாக கழித்து வருகின்றனர்.