விஜயகுமார் - மஞ்சுளா ஜோடி.. காதல் திருமணம் கைகூடியது எப்படி? முதலில் காதலை சொன்னது யார் தெரியுமா?
தமிழ் சினிமா, நல்ல பல குணச்சித்திர நடிகர்களை கொண்ட ஒரு திரையுலகம் என்றால் அது மிகையல்ல. அந்த வகையில், தமிழ் சினிமாவில் கடந்த 63 ஆண்டுகளாக இடைவிடாது நடித்து வரும் ஒரு ஒப்பற்ற நடிகர் தான் விஜயகுமார். ஸ்ரீ வள்ளி என்ற படம் துவங்கி மாமன்னன் திரைப்படம் வரை, இதுவரை 328 படங்களில் நடித்துள்ளார் நடிகர் விஜயகுமார்.
Vijayakumar
திரைத்துறையில் மிகப்பெரிய நடிகராக உருவெடுப்பதற்கு முன்னதாகவே கடந்த 1969 ஆம் ஆண்டு முத்துக்கண்ணு என்பவரை திருமணம் செய்துகொண்டார் பிரபல நடிகர் விஜயகுமார் அவர்கள். அதன் பிறகு 1970 ஆம் ஆண்டுகளில் தொடக்கத்தில் அவர் உச்ச நட்சத்திரமாக மாறத்துவங்கினார். தொடர்ச்சியாக பல திரைப்படங்களில் அவர் நடிக்க தொடங்கினார்.
Vijayakumar and Manjula
இன்னும் சரியாக சொல்லப்போனால், உறங்குவதற்கு கூட சரியாக நேரம் கிடைக்காமல், கிடைக்கும் நேரத்தில் படபிடிப்பு தளத்திலேயே சிறிது நேரம் ஓய்வெடுத்து விட்டு அடுத்தடுத்த படபிடிப்பு பணிகளை துவங்குவாராம் விஜயகுமார். அதேபோல அவருடைய இரண்டாவது மனைவியான நடிகை மஞ்சுளா அவர்களும் 70களுடைய துவக்கத்தில் தெலுங்கு மற்றும் தமிழ் ஆகிய இரு மொழிகளிலும் உச்சகட்ட நடிகையாக திகழ்ந்து வந்தார்.
Manjula
இந்த சூழலில் தான் 1975 ஆம் ஆண்டு ஒரு படப்பிடிப்பில் விஜயகுமார் மற்றும் மஞ்சுளா ஆகிய இருவரும் சந்தித்துக் கொள்கின்றனர். படப்பிடிப்பில் கிடைக்கும் சில இடைவேளைகளில் இருவரும் ஒன்றாக அமர்ந்து பேசுவதை வழக்கமாகக் கொண்டுள்ளனர். நாட்கள் அப்படியே நகர அந்த படத்தின் சூட்டிங் முடிவடையும் தருவாயில், ஒரு நாள் சட்டென்று மஞ்சுளாவிடம் சென்ற நடிகர் விஜயகுமார், என்னை திருமணம் செய்து கொள்ள சம்மதமா? என்று பட்டென்று கேட்டுள்ளார்.
உடனே குழப்பமுற்ற முகத்தோடு அவரை உற்றுப் பார்த்த மஞ்சுளா, பதில் ஏதும் சொல்லாமல் அங்கிருந்து நகர்ந்து உள்ளார். அதன் பிறகு ஒரு நாட்கள் கழித்து மீண்டும் படபிடிப்பு தளத்தில் அவரை சந்தித்த பொழுது நான் கேட்டதற்கு என்ன பதில் என்று அவர் கேட்க, இதில் என்னுடைய விருப்பம் ஒன்றும் இல்லை, நேரடியாக என் தாய் தந்தையரிடம் வந்து பேசுங்கள் என்று கூறியுள்ளார்.
Manjula and Vijayakumar
உடனே மகிழ்ச்சியோடு அவரது தாய் தந்தையை சந்தித்து பேசிய விஜயகுமாருக்கு கிடைத்தது கிறீன் சிக்னல். அதன் பிறகு 1976 ஆம் ஆண்டு நடிகர் விஜயகுமார் அவர்கள், நடிகை மஞ்சுளாவை திருமணம் செய்து கொண்டார். இது ஒரு தலை காதலாக இருந்த பொழுதும். விஜயகுமாரை முழுமனதோடு காதலித்து தான் மஞ்சுளா அவர்களும் ஏற்றுக் கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது. கடந்த 2013 ஆம் ஆண்டு நடிகை மஞ்சுளா அவர்கள் உடல்நல குறைவு காரணமாக தனது 59 ஆவது வயதில் காலமானார்.