- Home
- Gallery
- அன்று ரூ.500 தான் சம்பளம்.. விவாகரத்து சர்ச்சை.. இன்று ரூ.4 கோடி சம்பளம் வாங்கும் பான் இந்தியா நடிகை..
அன்று ரூ.500 தான் சம்பளம்.. விவாகரத்து சர்ச்சை.. இன்று ரூ.4 கோடி சம்பளம் வாங்கும் பான் இந்தியா நடிகை..
எந்தவொரு சினிமா பின்புலமும் இல்லாமல் தொழில்துறையில் தனக்கென ஒரு இடத்தைப் பிடித்து இன்று பான் இந்தியா நடிகையாக ஒருவர் மாறி உள்ளார்

எந்தவொரு சினிமா பின்புலமும் இல்லாமல் தொழில்துறையில் தனக்கென ஒரு இடத்தைப் பிடித்து இன்று பான் இந்தியா நடிகையாக ஒருவர் மாறி உள்ளார். இன்று நாட்டின் மிகவும் வெற்றிகரமான நடிகைகளில் ஒருவராக இருக்கும் அவர், நாடு முழுவதும் உள்ள மில்லியன் கணக்கான ரசிகர்களை உருவாக்கி உள்ளார். அவர் வேறு யாருமில்லை நடிகை சமந்தா தான்..
தமிழ் மற்றும் தெலுங்கில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் நடிகை சமந்தா. கடந்த 2010-ம் ஆண்டு விண்ணைத்தாண்டி வருவாயா என்ற படத்தின் மூலம் அறிமுகமான அவர் தொடர்ந்து பாணா காத்தாடி, நான் ஈ, அஞ்சான், கத்தி, தங்க மகன், 24, தெறி, இரும்புத்திரை என பல ஹிட் படங்களில் நடித்தார்.
திரை வாழ்க்கையில் வெற்றிகரமான நடிகையாக வலம் வந்தாலும், தனிப்பட்ட வாழ்க்கையில் பல சர்ச்சைகளில் சிக்கினார் சமந்தா. முதலில் நடிகர் சித்தார்த்தும், சமந்தாவும் காதலித்து வந்த நிலையில் பின்னர் இந்த ஜோடி பிரேக் அப் செய்து கொண்டனர்.
தன்னுடன் நடித்த சக நடிகரான நாக சைதன்யாவை காதலித்து வந்த சமந்தா அவரை கடந்த 2017-ம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார். இந்த திருமணமும் 4 ஆண்டுகளில் தோல்வியில் முடிந்தது. 2021-ம் ஆண்டு சமந்தா – நாக சைதன்யா இருவரும் தங்கள் பிரிவை அதிகாரப்பூர்வமாக அறிவித்தனர். இதனால் பல விமர்சனங்களை எதிர்கொண்டார் சமந்தா.
சமந்தா வேறொரு பிரபலத்துடன் தொடர்பில் இருந்ததாகவும், அவர் நாக சைதன்யாவுடன் குழந்தை பெற்றுக்கொள்ள மறுத்ததாகவும் கூட வதந்திகள் காட்டுத்தீ போல பரவியது.எனினும் சர்ச்சைகளையும் வதந்திகளையும் பொருட்படுத்தாமல் வெப் சீரிஸ், படங்கள் என படு பிசியாக வலம் வந்தார் சமந்தா.
இவர் கைவசம் தற்போது சிட்டாடல் என்ற வெப் சீரீஸ் மட்டுமே உள்ளது. இந்த சீரிஸ் விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.இந்த சூழலில் மீண்டும் சமந்தா நடிப்பதில் கவனம் செலுத்தி வருவதாக கூறப்படுகிறது.
தென்னிந்தியாவின் பணக்கார நடிகைகளில் நடிகை சமந்தாவும் ஒருவர். சமந்தா ஒரு படத்திற்கு ரூ 4 முதல் 5 கோடி வரை சம்பளம் வாங்குகிறார் என்று கூறப்படுகிறது. ஆனால் இன்று அதிக சம்பளம் வாங்கும் நடிகைகளில் ஒருவர் ஒரு காலத்தில் வெறும் 500 ரூபாய்க்கு ஹோட்டலில் அமர்த்தப்பட்டார் என்பது உங்களுக்குத் தெரியுமா?
இயக்குனர் அட்லீ அல்லு அர்ஜூனை வைத்து அடுத்த படத்தை இயக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்த படத்தின் ஹீரோயினாக சமந்தா தேர்வு செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
தனது சம்பளம் சமந்தாவே ஒருமுறை பேசி உள்ளார். இதுகுறித்து பேசிய அவர் “ ''என்னுடைய முதல் வருமானம் 500 ரூபாய். ஒரு ஹோட்டலில், 8 மணி நேர கான்பிரன்ஸுக்கு தொகுப்பாளினியாக இருந்தேன்... அப்போது நான் 10ம் வகுப்பு அல்லது 11ம் வகுப்பு படித்தேன்'' என்று தெரிவித்தார்.. 500 ரூபாய் சம்பளம் வாங்கிய சமந்தா இன்று, அதிக சம்பளம் வாங்கும் நடிகைகளில் ஒருவராக மாறி உள்ளார்.