- Home
- Gallery
- Rajisha Vijayan : சூர்யா பட நடிகைக்கு விரைவில் திருமணம்.. பிரபல ஒளிப்பதிவாளர் தான் மாப்பிள்ளை..
Rajisha Vijayan : சூர்யா பட நடிகைக்கு விரைவில் திருமணம்.. பிரபல ஒளிப்பதிவாளர் தான் மாப்பிள்ளை..
பிரபல நடிகை ரஜிஷா விஜயன், பிரபல ஒளிப்பதிவாளரும் காதலித்து வந்த நிலையில் இருவரும் விரைவில் திருமணம் செய்து கொள்ள உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

lovefully yours vedha malayalam movie sreenath bhasi rajisha vijayan
மலையாள டிவி சேனல்களில் தொகுப்பாளினியாக இருந்த ரஜிஷா விஜயன் 2016-ம் ஆண்டு வெளியான அனுராகா கரிக்கின் வெல்லம் என்ற படத்தின் மூலம் மலையாள திரையுலகில் எண்ட்ரி கொடுத்தார். தனது முதல் படத்திலேயே கேரள அரசின் சிறந்த நடிகைக்கான விருதை வென்றார் ரஜிஷா.
rajisha vijayan
இதை தொடர்ந்து அவருக்கு மலையாளத்தில் பட வாய்ப்புகள் குவிய தொடங்கியது. ஜார்ஜேட்டன்ஸ் பூரம், ஒரு சினிமாக்காரன், ஜூன், ஃபைனல்ஸ், ஸ்டாண்ட் அப், லவ் என பல மலையாள படங்களில் நடித்து பிரபலமானார்.
Rajisha Vijayan
கடந்த 2021-ம் ஆண்டு மாரி செல்வராஜ் இயக்கத்தில் வெளியான கர்ணன் படத்தின் மூலம் தமிழில் எண்ட்ரி கொடுத்தா ரஜிஷா, இப்படத்தில் தனுஷுக்கு ஜோடியாக நடித்த அவர் , முதல் படத்திலேயே தன்னுடைய யதார்த்தமான நடிப்பால் கவனம் ஈர்த்தார்.
rajisha vijayan
இதை தொடர்ந்து ஜெய் பீம் படத்தில் ஒரு கதாப்பாத்திரத்தில் அவர் நடித்திருந்தார்.. இதன்பின்னர் நடிகர் கார்த்திக்கு ஜோடியாக சர்தார் திரைப்படத்தில் நடித்திருந்தார்.
Rajisha Vijayan
மீண்டும் மலையாள படங்களில் கவனம் செலுத்திய அவர் கடைசியாக மதுர மனோகர மோகம், அமலா ஆகிய படங்களில் நடித்திருந்தார். இதனிடையே ரஜிஷாவும் மலையாள படங்களில் ஒளிப்பதிவாளராக பணியாற்றி வரும் டோபின் தாமஸ் என்பவரை காதலித்து வருவதாக ஏற்கனவே தகவல் வெளியானது.
இந்த ஜோடி தாங்கள் இருவரும் ஒன்றாக எடுத்துக்கொண்ட புகைப்படங்களை சமூக வலைதளங்களில் பதிவிட்டு தங்கள் காதலை உறுதி செய்தனர். இந்த நிலையில் டோபின் தாமஸ் ரஜிஷா உடன் இருக்கும் புகைப்படத்தை தனது இன்ஸ்டா பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதற்கு ரஜிஷாவும் முடிவற்ற காதலை நோக்கி என்று கமெண்ட் செய்திருந்தார்.
rajisha vijayan
இந்த ஜோடி விரைவில் திருமணம் செய்து கொள்ள உள்ளதாக கூறப்படுகிறது. எனினும் இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்னும் வெளியாக வில்லை. விரைவில் இதுகுறித்த அறிவிப்பை ரஜிஷா டாபின் ஜோடி வெளியிடுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.