Malayalam English Kannada Telugu Tamil Bangla Hindi Marathi
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Gallery
  • Actress Meena on 2nd Marriage : பிரபல நடிகருடன் 2-வது திருமணமா? நடிகை மீனா கொடுத்த தரமான பதிலடி..

Actress Meena on 2nd Marriage : பிரபல நடிகருடன் 2-வது திருமணமா? நடிகை மீனா கொடுத்த தரமான பதிலடி..

நடிகை மீனா தனது 2-வது திருமணம் குறித்து வெளியான தகவல்களுக்கு கண்டனம் தெரிவித்துள்ளார். இது

Ramya s | Published : Mar 27 2024, 04:19 PM
2 Min read
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • Google NewsFollow Us
18
Meena

Meena

நடிகர் சிவாஜி கணேசனின் நெஞ்சங்கள் படத்தின் மூலம் திரையுலகில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானவர் மீனா. இதை தொடர்ந்து சிவாஜி கணேசன் நடித்த பல படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்து வந்தார். அன்புள்ள ரஜினிகாந்த் படத்தின் மூலம் சிறுவயதிலேயே பிரபலமானார்.

28
Meena

Meena

பின்னர் ராஜ்கிரணின் என் ராசாவின் மனசிலே படத்தின் மூலம் ஹீரோயினாக அறிமுகமானார். இதை தொடர்ந்து 90களில் முன்னணி நடிகையாக மாறினார் மீனா. தமிழ், தெலுங்கு, கன்னடம் உள்ளிட்ட பல மொழிகளில் அடுத்தடுத்து படங்களில் நடிக்க கமிட்டானார். 

38
Meena

Meena

தொடர்ந்து எஜமான், முத்து, நாட்டாமை, சேதுபதி ஐபிஎஸ், அவ்வை சண்முகி, பாரதி கண்ணம்மா, பொற்காலம், வெற்றிக்கொடி கட்டு, வானத்தை போல், ரிதம், ஆனந்த பூங்காற்றே, சிட்டிசன் என பல படங்களில் நடித்து ரசிகர்களின் மனதில் நீங்கா இடம்பிடித்தார். . 

48
Asianet Image

கடந்த 2009-ம் ஆண்டு பெங்களூருவை சேர்ந்த வித்யாசாகர் என்பவரை மீனா திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதிக்கு நைனிகா என்ற மகள் உள்ளார். இவர் விஜய்யின் தெறி படத்தின் விஜய்யின் மகளாக நடித்தார்.

 

58
Asianet Image

இதனிடையே மீனாவின் கணவர் 2022-ம் ஆண்டு உடல்நலக்குறைவால் காலமானார். இதனால் மன உளைச்சலில் இருந்த மீனா சிறிது காலம் வெளியே வராமல் இருந்த அவர் தற்போது மீடியாவில் வர ஆரம்பித்திருக்கிறார். மேலும் சில படங்களிலும் நடித்து வருகிறார்.

68
Asianet Image

இந்த சூழலில் நடிகை மீனா விரைவில் நடிகர் ஒருவரை திருமணம் செய்ய உள்ளதாக சமூக வலைதலங்களில் வதந்தி பரவியது. 2-வது திருமணம் பற்றி தான் சிந்திக்கவில்லை என்று மீனா விளக்கமளித்த போதிலும் இந்த வதந்திகள் ஓய்ந்த பாடில்லை.. 

78
Asianet Image

இந்த நிலையில் நடிகை மீனா தனது 2-வது திருமணம் குறித்து வெளியான தகவல்களுக்கு கண்டனம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து பேட்டியளித்த அவர் “ சமூக வலைதலங்களில் உண்மைகளை சொல்லுங்கள். அதுதான் நல்லது. நாட்டில் என்னை போல் தனிமையில் வாழும் பெண்கள் பலர் இருக்கின்றனர்.

 

88
Asianet Image

அந்த பெண்களின் பெற்றோர், குழந்தைகள் பற்றி யோசியுங்கள். இப்போதைக்கு எனது இரண்டாவது திருமணம் பற்றி எனக்கு எந்த சிந்தனையும் இல்லை. எதிர்கால முடிவு குறித்து இப்போது எப்படி சொல்ல முடியும். எனவே எனது 2வது திருமணம் குறித்து சமூக வலைதளங்களில் வெளியாகும் வதந்திகளை யாரும் நம்ப வேண்டாம்” என்று தெரிவித்தார்

Ramya s
About the Author
Ramya s
விஷுவல் கம்யூனிகேஷனில் இளங்கலை பட்டம் பெற்றுள்ள இவர் 2011 முதல் செய்தி ஊடகத்துறையில் பணியாற்றி வருகிறார். பல முன்னணி செய்தி சேனல்கள் மற்றும் டிஜிட்டல் செய்தி தளங்களில் பணியாற்றிய அனுபவம் இவருக்கு உள்ளது. தற்போது ஏசியா நெட் தமிழ் செய்தி இணையதளத்தில் மூத்த துணை ஆசிரியராக பணியாற்றி வருகிறார். லைஃப்ஸ்டைல், வணிகம், வேலைவாய்ப்பு, சினிமா ஆகிய தலைப்புகளில் மிகுந்த ஆர்வம் இருக்கும் இவர் வாசகர்களை ஈர்க்கும் வகையில் செய்திகளை எழுதி வருகிறார். Read More...
 
Recommended Stories
Top Stories