Meena: எனக்கு மீனா தான் வேண்டும்! அடம்பிடித்த 63 வயது நடிகரை அசிங்கப்படுத்தினாரா கண்ணழகி? கொதிக்கும் ரசிகர்கள்
தன்னுடைய 47 வயதிலும், ரசிகர்களை கவர்ந்திழுக்கும் பேரழகியாய் இருக்கும் நடிகை மீனாவை ஹீரோயினாக நடிக்க வைக்க, 63 வயது நடிகர் முயற்சி செய்த நிலையில் அந்த வாய்ப்பை ஏற்க மீனா மறுத்துவிட்டதாக கூறப்படுகிறது.
Meena
தமிழ் சினிமாவில் 80-களில் குழந்தை நட்சத்திரமாக நடித்து, பின்னர் ஹீரோயினாக மாறியவர் பிரபல நடிகை மீனா. தெலுங்கில் கடந்த 1990-ல் வெளியான 'நவயுகம்' படத்தில் ஹீரோயினாக அறிமுகமான இவர், இதை தொடர்ந்து தமிழில் அதே ஆண்டு, 'ஒரு புதிய கதை' படத்தில் நாயகியாக நடித்தார்.
Meena
முதல் படம் சுமாரான வெற்றியை பெற்றாலும், இதை தொடர்ந்து இவர் நடித்த 'என் ராசாவின் மனசிலே', 'எஜமான்' போன்ற படங்களுக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்தது. ரஜினிகாந்த் - மீனாவின் காம்போ முதல் படத்தில் சில விமர்சனங்களுக்கு ஆளான போதிலும், பல ரசிகர்களை கவர்ந்தது.
Meena
இதை தொடர்ந்து மிக குறுகிய காலத்தில் முன்னணி நடிகைகள் பட்டியலில் இணைந்த மீனா, அஜித், கமல், அர்ஜுன், விஜயகாந்த், சத்யராஜ், போன்ற பல முன்னணி நடிகர்களுடன் நடித்தார். 30 வயதை கடந்த பின்னர் இவரின் மார்க்கெட் டல்லடிக்க துவங்கியது. எனவே வீட்டில் தன்னுடைய பெற்றோர் பார்த்த மாப்பிள்ளையான வித்யா சாகர் என்பவரை திருமணம் செய்து கொண்டு, மகள் நைனிகா பிறந்த பின்னர் மீண்டும் ரீ-என்ட்ரி கொடுத்தார்.
Meena
மலையாளம், தெலுங்கு, போன்ற மொழிகளில் கதைக்கு முக்கியத்துவம் கொடுத்து எடுக்கப்படும் படங்களில் முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக நடித்து வருகிறார் மீனா. தமிழில் கடைசியாக சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான அண்ணாத்த படத்தில் நடித்திருந்தார். இதை தொடர்ந்து தற்போது ரவுடி பேபி என்கிற படம் ஒன்றிலும் நடித்து வருகிறார்.
இந்நிலையில் இவரை தன்னுடைய படத்தில் கமிட் செய்ய, நடிகர் ராமராஜன் தூது அனுப்பிய நிலையில், நடிக்க முடியாது என கூறி மீனா அசிங்கப்படுத்திவிட்டதாக ஒரு தகவல் சமூக வலைத்தளத்தில் தீயாக பரவி வருகிறது.
ramarajan
நடித்தால் ஹீரோவாக தான் நடிப்பேன், என்று அடம்பிடித்து பல வருடங்களுக்கு பின் 'சாமானியன்' படத்தின் மூலம், மீண்டும் ஹீரோ அவதாரம் எடுத்துள்ளார் ராமராஜன். இப்படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து ஒரு வருடம் ஆகும் நிலையில், இன்னும் வெளியாகாமல் உள்ளது. மீண்டும் இப்படத்தின் இயக்குனர் இயக்கத்தில் நடிக்க போவதாகவும் தெரிவித்துள்ளார் ராமராஜன்.
மேலும் புதுமுக இயக்குனர் கார்த்தி என்பவர் இயக்கத்தில் 'உத்தமன்' என்கிற படத்தில் நடிக்க கமிட்டாகி ஆகியுள்ளார். இந்த படத்தில் ராமராஜன் வழக்கறிஞராக நடிக்கவுள்ள நிலையில், தனக்கு ஜோடியாக மீனா தான் நடிக்க வேண்டும் என ராமராஜன் முடிவு செய்து, இயக்குனர் மூலம் அவரை அணுகியுள்ளார். ஆனால் மீனா... ஏதேதோ காரணங்களை சொல்லி இந்த படத்தில் நடிக்க முடியாது என கூறிவிட்டாராம்.
ரஜினி - கமல் போன்ற முன்னணி இடத்தில் இருக்க வேண்டிய ஒரு நடிகருக்கு ஜோடியாக நடிக்க முடியாது என மீனா ஒதுக்கியது ராமராஜன் ரசிகர்களை கொந்தளிக்க செய்துள்ளது.