- Home
- Gallery
- ஆரம்பித்து வைத்த தல.. சிறப்பாய் செயல்படுத்தி மாஸ் காட்டும் மஞ்சு - சேரும் சகதியுமாய் வெளியிட்ட வைரல் பிக்ஸ்!
ஆரம்பித்து வைத்த தல.. சிறப்பாய் செயல்படுத்தி மாஸ் காட்டும் மஞ்சு - சேரும் சகதியுமாய் வெளியிட்ட வைரல் பிக்ஸ்!
Manju Warrier : பிரபல நடிகை மஞ்சு வாரியர் தல அஜித் குமார் ஸ்டைலில், தனது நண்பர்களோடு இணைந்து பைக் ரைட் செல்ல துவங்கியுள்ளார். அந்த புகைப்படங்கள் வைரலாகி வருகின்றது.

Manju Bike ride
தற்பொழுது 45 வயதாகும் பிரபல நடிகை மஞ்சு வாரியர், கடந்த 1995ம் ஆண்டு வெளியான ஒரு மலையாள திரைப்படத்தின் மூலம் தனது கலை உலக பயணத்தை தொடங்கினார். கடந்த 29 ஆண்டுகளுக்கும் மேலாக அவர் திரைத்துறையில் பயணித்து வருகிறார்.
புற்றுநோயால் பாதிக்கப்பட்ட பாலிவுட் நடிகை ஹினா கான் வெளியிட்ட புகைப்படம்.. நெட்டிசன்கள் ஆதரவு!
Actress Manju Warrier
சினிமாவில் சுமார் 24 ஆண்டுகள் பயணித்த பிறகு தான் பிரபல நடிகை மஞ்சு வாரியர், தமிழ் மொழி படங்களில் நடிக்க ஆரம்பித்தார். 2019ம் ஆண்டு தனுஷ் நடிப்பில் வெளியான "அசுரன்" திரைப்படம் அவர் தமிழில் நடித்த முதல் படம்.
Actress Manju
அதன் பிறகு கடந்த 2023 ஆம் ஆண்டு பிரபல நடிகர் அஜித் நடிப்பில் வெளியான "துணிவு" திரைப்படத்தின் மூலம் அவர்கள் இருவரிடையே நல்ல நட்பு ஏற்பட்டது. அஜித்திற்கு மிகவும் பிடித்த பைக் பயணம், மஞ்சுவையும் ஈர்த்தது.
Manju Warrier
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் "வேட்டையன்" திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரம் ஏற்று நடித்துள்ள மஞ்சு வாரியர், தனது நண்பர்களுடன் இணைந்து பைக் பயணம் செய்ய துவங்கியுள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்ட பதிவில், இப்பொது தான் கொஞ்சம் கொஞ்சம் இதை கற்றுகொண்டுருக்கிறேன் என்று கூறியுள்ளார். அவர் வெளியிட்ட புகைப்படங்கள் பெரிய அளவில் வைரலாக பகிரப்பட்டு வருகின்றது.