MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Gallery
  • Dushara Vijayan: சினிமாவை விட்டு மொத்தமாக விலகி விடுவேன்! இப்போதே நாள் குறித்த துஷாரா.. இது தான் காரணமாம்!

Dushara Vijayan: சினிமாவை விட்டு மொத்தமாக விலகி விடுவேன்! இப்போதே நாள் குறித்த துஷாரா.. இது தான் காரணமாம்!

Dushara Vijayan Quits Cinema : நடிகை துஷாரா விஜயன் ராயன் பட விழாவின் கலந்து கொண்ட பின்னர், செய்தியாளர்களை சந்தித்து பேசியபோது, சினிமாவை விட்டு விலகுவது குறித்து பேசி அதிர்ச்சி கொடுத்துள்ளார். 

2 Min read
Author : manimegalai a
| Updated : Jul 09 2024, 07:55 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
17
Dushara Vijayan Quits Cinema

Dushara Vijayan Quits Cinema

தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் இளம் நடிகையாக உள்ளவர் துஷாரா விஜயன். பிற மாநிலங்களில் இருந்து கோலிவுட் திரையுலகில் அறிமுகமாகும் நடிகைகள் மத்தியில், திண்டுக்கல் மாவட்டம் தமிழ்நாட்டை சேர்ந்தவர் தான் துஷாரா. 

27
Dushara Vijayan Quits Cinema Field

Dushara Vijayan Quits Cinema Field

சிறு வயதில் இருந்தே நடிகையாக வேண்டும் என்கிற ஆசை மனதில் இருந்ததால், சென்னை வந்து தீவிர பட வேட்டையில் ஈடுபட்டார். ஆரம்பத்தில் இவரை பார்த்து பலர், நீ எல்லாம் ஹீரோயின் மெட்டீரியல் இல்லை என கூறிய நிலையில், மனதை தளர விடாமல் வாய்ப்பு தேட துவங்கினார்.

பிக்பாஸ் ராஜு ஹீரோவாக நடிக்கும் முதல் படத்துக்கே இவ்வளவு பில்டப்பா? 30 அடியில் பிரமிக்க வைத்த ஃபர்ஸ்ட் லுக்!

37
Dushara Vijayan Quits Cinema Industry

Dushara Vijayan Quits Cinema Industry

இதன் பலனாக கடந்த 2019 ஆம் ஆண்டு 'போதை ஏறி புத்தி மாறி' என்ற படத்தில் அறிமுகமாகும் வாய்ப்பு கிடைத்தது. இப்படம் எதிர்பார்த்த அளவுக்கு வெற்றி பெறாத நிலையில், இயக்குனர் பா.ரஞ்சித் இயக்கத்தில்,  ஆர்யாவுக்கு ஜோடியாக நடித்த 'சார்பாட்டா பரம்பரை'  திரைப்படம் அதிகம் பேசப்பட்டது. 

47
Dushara Vijayan Quits Cinema Industry

Dushara Vijayan Quits Cinema Industry

இப்படத்திற்கு பின்னர் ரசிகர்களால் கவனிக்கப்படும் நடிகையாக மாறிய துஷாரா, காளிதாஸ் ஜெயராம் ஜோடியாக 'நட்சத்திரம் நகர்கிறது', அருள்நிதி ஜோடியாக 'கழுவேத்தி மூர்க்கன்', அர்ஜுன் தாஸ் ஜோடியாக 'அநீதி' உள்ளிட்ட படங்களில் நடித்தார். இவர் நடித்த படங்கள் வசூல் ரீதியாக வெற்றிபெறவில்லை என்றாலும் விமர்சன ரீதியாக வெற்றி பெற்றது.

Maharaja OTT: மாஸ் ஹிட் அடித்து... 100 கோடி வசூல் மழை பொழுந்த மகாராஜா படத்தின் ஓடிடி ரிலீஸ் எப்போது தெரியுமா?

57
dushara vijayan

dushara vijayan

 அதே போல் துஷாரா விஜயனின் நடிப்பும் அதிகம் பேசப்பட்டது. தற்போது துஷாரா சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்துடன் 'வேட்டையன்' படத்தில் முக்கிய ரோலில் நடித்துள்ளார். அதே போல் தனுஷின் தங்கையாக 'ராயன்' படத்தில் நடித்துள்ளார். மேலும் விக்ரமுக்கு ஜோடியாக 'வீர தீர சூரன்' படத்தில் நடித்து வருகிறார். எனவே இந்த ஆண்டு இவர் நடிப்பில் 3 படங்கள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

67

அண்மையில் தனுஷின் ராயன் பட விழாவில் கலந்து கொண்ட துஷாரா, இப்படத்தில் நடித்த அனுபவம் குறித்தும் தனுஷ் இயக்கம் மற்றும் நடிப்பு அவர் வேலை வாங்கிய விதம் பற்றி புகழ்ந்து தள்ளினார். அதே போல் தன்னுடன் நடித்த சக நடிகர்கள் பற்றியும் பேசினார். 

ஊரே மெச்சும் படி மகள் திருமணத்தை நடத்திய நடிகர் சிவக்குமார்! சூர்யா - கார்த்தி சகோதரி பிருந்தா வெட்டிங் போட்டோ

77

விழா முடிந்த பின்னர், செய்தியாளர்களிடம் பேசிய துஷாரா, சினிமாவில் தன்னுடைய ரிட்டயர்மெண்ட் எப்போது என கூறி அதிர்ச்சி கொடுத்தார். தனக்கு 35 வது வயது ஆன பின்னர் முழுமையாக திரையுலகில் இருந்து விலகி விடுவேன் என துஷாரா கூறியுள்ளார். 35 வயதுக்கு பின்னர் உலகம் முழுவதும் சுற்றுப்பயணம் செய்ய வேண்டும் என்பதுதான் தன்னுடைய கனவு என்பது போல் துஷாரா கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது தற்போது துஷாராவுக்கு 26 வயதே ஆகும் நிலையில், இன்னும் 9 வருடங்கள் மட்டுமே நடிப்பார் என்பது தெரிகிறது. 

 

About the Author

MA
manimegalai a
மணிமேகலை ஐடி துறையில் இளங்கலை பட்டப்படிப்பும், புதுவை பல்கலைக் கழகத்தில் எலக்ட்ரானிக் மீடியா துறையில் முதுகலை பட்டப்படிப்பையும் முடித்துள்ளார். சுமார் 10 வருடங்கள், மீடியா துறையில் பணியாற்றி வருகிறார். இதுவரை ஜீ தமிழ், இந்தியா கிளிட்ஸ் போன்ற நிறுவனங்களில் பணியாற்றி உள்ளார். பல பிரபலங்களை பேட்டி கண்டுள்ளார். தற்போது ஏசியா நெட் தமிழில், சப் எடிட்டராக 8 வருடங்களாக பணியாற்றி வருகிறார். சினிமா மற்றும் லைப் ஸ்டைல் செய்திகளை எழுதி வருகிறார்.
ரஜினிகாந்த்
நடிகர் விக்ரம்
தனுஷ்

Latest Videos
Recommended Stories
Recommended image1
தளபதி விஜய்யிடம் இந்த கெட்ட பழக்கம் இருக்கு; இயக்குனர் கூறிய சீக்ரெட்..!
Recommended image2
சங்கீதாவோடு தளபதி 'GOAT' படம் பார்த்தார் என சொல்வது பொய்யா; உண்மையில் நைட் ஷோ யாருடன் பார்த்தார் தெரியுமா?
Recommended image3
குளிக்கும் நீரில் 'இத' கலந்து குளிங்க.. பருவகால நோய்கள் உங்கள தாக்காது!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved