மலையாள சினிமாவில் எண்ட்ரி கொடுக்கும் அனுஷ்கா.. முதல் படத்திற்கே இத்தனை கோடி சம்பளமா?
ஃபேன்டஸி த்ரில்லர் படமாக உருவாக உள்ள கத்தனார்-தி வைல்ட் சோர்சரர் படத்தின் மூலம் அனுஷ்கா மலையாள சினிமாவில் நுழைந்துள்ளார்.

தமிழ் தெலுங்கில் ஏராளமான ரசிகர்களை கொண்ட அனுஷ்கா அருந்ததி, பாகுபலி, பாகமதி என பல ஹிட் படங்களை கொடுத்துள்ளார். தென்னிந்திய சினிமாவின் முன்னணி நடிகைகளில் ஒருவரான அனுஷ்கா அதிக சம்பளம் வாங்கும் நடிகையாகவும் மாறினார். எனினும் சில தனிப்பட்ட காரணங்களுக்காக சினிமாவில் இருந்து ஒதுங்கிய அவர் மிஸ் ஷெட்டி, மிஸ்டர் பாலி ஷெட்டி மூலம் தெலுங்கி மீண்டும் கம்பேக் கொடுத்தார்.
இப்படம் விமர்சன ரீதியில் நல்ல வரவேற்பை பெற்ற நிலையில், சைரா நரசிம்ம ரெட்டி மற்றும் நிசப்தம் ஆகிய தோல்விப் படங்களுக்கு பிறகு அனுஷ்கா லாபம் தரும் நடிகையாக மாறவும் உதவியது.. இந்த நிலையில் அனுஷ்கா மலையாள திரையுலகில் எண்ட்ரி கொடுக்க உள்ளார். ஃபேன்டஸி த்ரில்லர் படமாக உருவாக உள்ள கத்தனார்-தி வைல்ட் சோர்சரர் படத்தின் மூலம் அனுஷ்கா மலையாள சினிமாவில் நுழைந்துள்ளார்.
Anushka Shetty
75 கோடி ரூபாய் முதலீட்டில் இந்த படம் மலையாள சினிமா வரலாற்றில் அதிக பட்ஜெட்டில் உருவாகும் படமாக உள்ளது. உள்ளது. இந்த படத்திற்காக படக்குழு சமீபத்தில் 45,000 சதுர அடி பரப்பளவில் ஒரு பரந்த ஸ்டுடியோ தளத்தின் கட்டுமானத்தை நிறைவு செய்துள்ளது, ரோஜின் தாமஸ் இயக்கும் இப்படத்தில் ஜெயசூர்யாவும் முக்கிய ரோலில் நடிக்கிறார்.
இந்த படத்திற்கு அனுஷ்கா ரூ.5 கோடி சம்பளம் வாங்கி உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அதுகுறித்த அதிகாரபூர்வ தகவல் எதுவும் இதுவரை வெளியாகவில்லை. பாகுபலி 1, 2 படங்களுக்கு பிறகு இந்தியா முழுவதும் பிரபலமான நடிகையாக அனுஷ்கா மாறினார்.
Anushka Shetty
அந்த வகையில் அவருக்கு கேரளாவில் அதிக ரசிகர்கள் உள்ளனர். பாகுபலிக்கு முன் ஒரு படத்துக்கு ரூ.3 கோடி வரை சம்பளம் வாங்கியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. மிஸ் ஷெட்டி, மிஸ்டர் பாலி ஷெட்டி படத்திற்காக அனுஷ்கா ரூ.6 கோடி பெற்றதாக தகவல் வெளியாகியுள்ளது. பாகுபலி 2 படத்திற்கு பிறகு அனுஷ்கா பெற்றுள்ள அதிகபட்ச தொகை இதுவாகும் என்று கூறப்படுகிறது.
கத்தனார்-தி வைல்ட் சோர்சரர் படத்தில் அனுஷ்கா வன தேவதையாக நடிக்கவுள்ளதாக கூறப்படுகிறது. VFX-ஐ அதிக அளவில் பயன்படுத்தும் இந்தப் படம், பான் இந்தியா அளவில் வெளியாக உள்ளது. இதுவரை படத்தின் மூன்று கட்ட படப்பிடிப்புகள் நிறைவடைந்துள்ளன் என்பது குறிப்பிடத்தக்கது..