MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Gallery
  • விவாகரத்தில் முடிந்த முதல் திருமணம்; கல்யாணத்துக்கு முன் கர்ப்பமான இந்த நடிகை யார் தெரியுமா? ஆனா ஸ்ரீதேவி இல்ல

விவாகரத்தில் முடிந்த முதல் திருமணம்; கல்யாணத்துக்கு முன் கர்ப்பமான இந்த நடிகை யார் தெரியுமா? ஆனா ஸ்ரீதேவி இல்ல

முதல் திருமணம் விவாகரத்தில் முடிந்ததை அடுத்து மறுமணத்துக்கு முன்பே கர்ப்பமான பிரபல நடிகை பற்றி இந்த தொகுப்பில் விரிவாக பார்க்கலாம்.

2 Min read
Author : Ganesh A
| Updated : May 21 2024, 04:04 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
17
amala paul Rare Photos

amala paul Rare Photos

கேரள மாநிலம் எர்ணாகுளத்தில் பிறந்தவர் அமலா பால். ஆலுவாவில் உள்ள நிர்மலா பள்ளியில் பள்ளி படிப்பை முடித்த அவர், கொச்சியில் உள்ள தெரசா கல்லூரியில் மேற்படிப்பை முடித்தார். படித்து முடித்ததும் சினிமாவில் நடிக்க உள்ளதாக சொன்ன அமலா பாலுக்கு அவரது தந்தை கடும் எதிர்ப்பு தெரிவித்து இருக்கிறார். பின்னர் அவரது அண்ணன் அவருக்கு சப்போர்ட் செய்ததால் வேறுவழியின்றி மகளின் சினிமா எண்ட்ரிக்கி க்ரீன் சிக்னல் காட்டி இருக்கிறார்.

27
amala paul in school days

amala paul in school days

கடந்த 2009-ம் ஆண்டு வெளிவந்த நீலத்தாமரா என்கிற மலையாள படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானார் அமலா பால். அப்படத்தில் அவருக்கு சைடு ரோல் தான் கிடைத்தது. அதன்பின்னர் 2010-ம் ஆண்டு வெளிவந்த வீரசேகரன் என்கிற படம் தான் அமலா பால் முதன்முதலில் ஹீரோயினாக நடித்த படமாகும். பின்னர் தமிழில் அதே ஆண்டில் திரைக்கு வந்த சிந்து சமவெளி படத்தில் மாமனார் உடன் கள்ளத்தொடர்பில் இருக்கும் பெண்ணாக சர்ச்சைக்குரிய கதாபாத்திரத்தில் நடித்து இருந்தார் அமலா பால்.

37
AL vijay, Amala Paul

AL vijay, Amala Paul

சிந்து சமவெளி படத்துக்கு பின்னர் பிரபுசாலமன் இயக்கத்தில் அவர் நடித்த மைனா திரைப்படம் அமலா பாலுக்கு மிகப்பெரிய திருப்புமுனையாக அமைந்தது. அப்படம் மிகப்பெரிய வெற்றியை ருசித்ததோடு, அதில் அமலா பாலின் நடிப்புக்கும் பாராட்டுக்கள் குவிந்தன. பின்னர் ஏ.எல்.விஜய் இயக்கிய தெய்வத் திருமகள் படத்தில் நடித்த அமலா பால், அப்படத்தில் நடித்தபோது இயக்குனர் ஏ.எல்.விஜய் மீது காதல் வயப்பட்டார்.

இதையும் படியுங்கள்... அன்று திருமணமான நடிகருடன் காதல்.. இன்று இரட்டை குழந்தைகளுக்கு அம்மா - யார் இந்த நடிகை தெரிகிறதா?

47
amala paul photos

amala paul photos

பின்னர் தலைவா படத்திலும் அவருடன் சேர்ந்து பணியாற்றிய அமலா பால், அப்படம் ரிலீஸ் ஆன அடுத்த ஆண்டே இயக்குனர் ஏ.எல்.விஜய்யை திருமணம் செய்துகொண்டார். திருமணத்துக்கு பின்னரும் தொடர்ந்து சினிமாவில் நடித்து வந்ததால் அமலா பாலுக்கும் இயக்குனர் ஏ.எல்.விஜய்க்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டது. இதனால் கடந்த 2017-ம் ஆண்டு இருவரும் விவாகரத்து செய்து பிரிந்தனர்.

57
Amala Paul Jagat desai

Amala Paul Jagat desai

முதல் திருமணம் விவாகரத்தில் முடிந்ததை அடுத்து சினிமாவில் கவனம் செலுத்த தொடங்கிய அமலா பால் ஆடை என்கிற திரைப்படத்தில் நிர்வாணமாக நடித்து அதிர்ச்சி கொடுத்தார். ஆடை படம் வெற்றியடைந்தாலும் அப்படத்துக்கு பின்னர் அவருக்கு கோலிவுட்டில் பட வாய்ப்புகள் குறையத் தொடங்கின. இதனால் சொந்தமாக தயாரிப்பு நிறுவனம் தொடங்கி, கடாவர் என்கிற படத்தை தயாரித்தார் அமலாபால்.

67
Amala Paul Pregnant

Amala Paul Pregnant

பின்னர் மலையாளத்தில் ஆடுஜீவிதம், இந்தியில் போலா என பிறமொழிகளில் கவனம் செலுத்த தொடங்கிய அமலா பாலுக்கு கடந்த ஆண்டு இரண்டாம் திருமணம் ஆனது. அவர் ஜெகத் தேசாய் என்பவரை காதலித்து திருமணம் செய்துகொண்டார். நவம்பர் மாதம் இவர்களது திருமணம் நடைபெற்ற நிலையில், அடுத்த சில மாதங்களிலேயே தான் கர்ப்பமாக இருப்பதாக அறிவித்தார். அதன் பின்னர் தான் அவர் திருமணத்துக்கு முன்பே கர்ப்பம் ஆனது தெரியவந்தது.

77
amala paul childhood photo

amala paul childhood photo

தற்போது நிறைமாத கர்ப்பிணியாக இருக்கும் அமலா பாலுக்கு விரைவில் குழந்தை பிறக்க உள்ளது. இந்த நிலையில், அவரின் குழந்தைப்பருவ புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது. அவர் அச்சு அசல் அவரது அம்மா போலவே இருப்பதாக நெட்டிசன்கள் ஒப்பிட்டு கமெண்ட் செய்து வருகின்றனர்.

இதையும் படியுங்கள்... 

Garudan: விடுதலை நாயகனின் அடுத்த சம்பவம்; கருடன் படத்தில் ஆக்‌ஷன் ஹீரோவாக மிரட்டு சூரி - மெர்சலான ட்ரைலர் இதோ

About the Author

GA
Ganesh A
இவர் பொறியியல் பட்டதாரி. செய்தி எழுதுவதில் 7 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் உள்ளவர். இவர் கடந்த 3 ஆண்டுகளாக ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா பற்றி நன்கு அறிந்தவர் மற்றும் அதில் அனுபவமும் பெற்றவர். சினிமா மற்றும் பொழுதுபோக்கு செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
தமிழ் சினிமா

Latest Videos
Recommended Stories
Recommended image1
தளபதி விஜய்யிடம் இந்த கெட்ட பழக்கம் இருக்கு; இயக்குனர் கூறிய சீக்ரெட்..!
Recommended image2
சங்கீதாவோடு தளபதி 'GOAT' படம் பார்த்தார் என சொல்வது பொய்யா; உண்மையில் நைட் ஷோ யாருடன் பார்த்தார் தெரியுமா?
Recommended image3
குளிக்கும் நீரில் 'இத' கலந்து குளிங்க.. பருவகால நோய்கள் உங்கள தாக்காது!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved