- Home
- Gallery
- Amala Paul : செம க்யூட்.. மகன் பிறந்த பிறகு முதன்முறையாக ஃபேமிலி போட்டோவை வெளியிட்ட அமலா பால், ஜெகத் தேசாய்..
Amala Paul : செம க்யூட்.. மகன் பிறந்த பிறகு முதன்முறையாக ஃபேமிலி போட்டோவை வெளியிட்ட அமலா பால், ஜெகத் தேசாய்..
நடிகை அமலா பாலுக்கு கடந்த மாதம் ஆண் குழந்தை பிறந்த நிலையில், தற்போது முதன்முறையாக அமலா பாலின் குடும்ப போட்டோ இணையத்தில் வெளியாகி உள்ளது.

Amala Paul
சிந்து சமவெளி படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமானவர் அமலா பால். பின்னர் மைனா படத்தின் மூலம் பிரபலமானார். இதை தொடர்ந்து பட வாய்ப்புகள் அவருக்கு குவிந்த நிலையில், விஜய், தனுஷ், சூர்யா என முன்னணி நடிகர்களுடன் ஜோடி சேர்ந்தார். சினிமாவில் அறிமுகமான குறுகிய காலத்திலேயே கோலிவுட்டின் முன்னணி நடிகைகளில் ஒருவராக மாறினார் அமலா பால்.
Amala Paul
இதனிடையே இயக்குனர் ஏ.எல். விஜய்யை காதலித்து வந்த அவர் 2014-ம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார் அமலா பால். ஆனால் இந்த திருமணம் நீண்ட காலம் நீடிக்கவில்லை. இருவருக்கும் ஏற்பட்ட மனக்கசப்பு காரணமாக 2016-ம் ஆண்டில் இருவரும் விவாகரத்து பெற்று பிரிந்து விட்டனர்.
Amala Paul
இதை தொடர்ந்து தமிழ் மட்டுமின்றி, தெலுங்கு, மலையாளம் படங்களிலும் கவனம் செலுத்தி வந்தார். மேலும் ஆடை படத்தில் ஆடையின்றி நடித்து பரபரப்பை ஏற்படுத்தினார். அமலா பால் நடிப்பில் கடைசியாக பிருத்விராஜின் ஆடு ஜீவிதம் படத்தில் நடித்திருந்தார். இந்த படம் விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்றது.
Amala Paul with husband
கடந்த ஆண்டு நவம்பர் மாதம் ஜெகத் தேசாய் என்பவரை அமலா பால் திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதி அவ்வப்போது சமூக வலைதளங்களில் போட்டோக்கள், வீடியோக்களை பதிவிட்டு வந்தனர். மேலும் தான் கர்ப்பமாக இருப்பதையும் அமலா பால் அறிவித்தார்.
Amala Paul photos
அமலாபால் கர்ப்பிணியாக இருக்கும் போட்டோக்கள் மற்றும் வீடியோக்களை தொடர்ந்து பதிவிட்டு வந்தார். அமலா பால். நிறைமாத கர்ப்பிணியாக இருந்த போது கூட அவர், பேபி காம் டவுன் பாடலுக்கு நடனமாடி வீடியோவை வெளியிட்டார். .
Amala Paul with baby
இந்த சூழலில் அமலா பாலுக்கு, ஜூன் 11ஆம் தேதி அமலா பாலுக்கு ஆண் குழந்தை பிறந்தது. தங்கள் குழந்தைக்கு இலை என்று பெயரிட்டுள்ளதால் அமலா பாலும் ஜெகத் தேசாயும் அறிவித்திருந்தனர். இதை தொடர்ந்து இந்த தம்பதிக்கு சமூக வலைதளங்களில் வாழ்த்துக்கள் குவிந்தன.
Amala Paul with baby
இந்த நிலையில் மகன் பிறந்த பிறகு முதன்முறையாக அமலா பாலின் குடும்ப போட்டோ இணையத்தில் வெளியாகி உள்ளது. எனினும் மற்ற பிரபலங்களை போலவே அமலா பால் - ஜெகத் தேசாய் தம்பதியும் குழந்தையின் முகத்தை வெளியிட விரும்பவில்லை என்று தெரிகிறது. எனவே அந்த போட்டோவில் குழந்தையின் முகத்தை காட்டவில்லை. சமூக வலைதளத்தில் வைரலாகி வரும் அந்த போட்டோவுக்கு லைக்களும் கமெண்ட்களும் குவிந்து வருகின்றன.