Vishal Help: பொதுமக்கள் வைத்த கோரிக்கை..! கில்லியாக மாறி நிறைவேற்றிய விஷால்... குவியும் வாழ்த்து!
பொதுமக்கள் தண்ணீர் இல்லாமல் அவதி படுவதாக வைத்த கோரிக்கையை, நடிகர் விஷால் மிக விரைவாக நிறைவேற்றி வைத்துள்ள சம்பவம் மக்கள் மத்தியில் பாராட்டுகளை குவித்து வருகிறது.
Actor Vishal
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருப்பவர் விஷால், நடிப்பை தாண்டி இயக்கம், தயாரிப்பு, நடிகர் சங்கம், என பல்வேறு விஷயங்களில் கவனம் செலுத்தி வரும் இவர்... கடந்தமுறை சட்டமன்ற தேர்தலில் போட்டியிட, மனு தாக்கல் செய்ய சென்ற நிலையில் ஒரு சில காரணங்களால் இவரது மனு நிராகரிக்கப்பட்டது. பின்னர் அரசியலில் வெற்றி பெற துடிக்கும் இளைஞருக்கு உதவ உள்ளதாக தெரிவித்தார்.
விரைவில் விஷால் அரசியலில் குதித்தாலும், ஆச்சரியப்படுவதற்கு இல்லை என கூறப்படுகிறது. மேலும் அரசியல் ஆசையை வெளிப்படுத்துவதற்கு முன்பில் இருந்தே விஷால்... தன்னுடைய அம்மா பெயரில் இவர் நடத்தி வரும் தேவி அறக்கட்டளை மூலம் மக்களுக்கும், ஏழை மாணவர்களுக்கும் பல்வேறு உதவிகளை செய்து வருகிறார்.
இந்நிலையில் சமீபத்தில் தமிழர் திருநாளான பொங்கல் பண்டிகையை நடிகர் விஷால், மக்கள் நல இயக்கம் சார்பில் சென்னை கோடம்பாக்கத்தில் ஏற்பாடு செய்யப்பட்டு இருந்த சமத்துவ பொங்கல் விழாவில் பொதுமக்களுடன் கலந்துக்கொண்டு கொண்டாடினார். மக்களுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகளையும் வழங்கினார்.
vishal
இந்நிகழ்வில் கலந்து கொண்ட பொதுமக்கள், தங்களுக்கு கடந்த சில நாட்களாக குடிக்க தண்ணீர் கிடைக்கவில்லை மிகவும் சிரமமாக இருக்கிறது என்றும் குடிதண்ணீர் ஏற்பாடு செய்து தந்தால் நன்றாக இருக்கும் என கோரிக்கை வைத்தனர். இக்கோரிக்கையை கேட்டுக்கொண்டே நடிகர் விஷால் தனது மேலாளர் ஹரிகிருஷ்ணனிடம் உடனே கோரிக்கைகளை நிறைவேற்றும்படி கூறினார், அதன் தொடர்ச்சியாக கோடம்பாக்கத்தில் கோரிக்கை வைத்த மக்களுக்கு குடிநீர் ஏற்பாடு செய்து கொண்டு அவர்களின் கோரிக்கையை நிறைவேற்றியுள்ளளார் விஷால். மிக விரைவாக கில்லி போல் செயல்பட்டு பொதுமக்கள் கோரிக்கையை நிறைவேற்றிய விஷாலுக்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது.
விஜய் டிவியின் சூப்பர் ஹிட் தொடர்.. 'சிறகடிக்க ஆசை' சீரியலில் என்ட்ரி கொடுக்கும் சன் டிவி பிரபலம்!