- Home
- Gallery
- ஜோராக முடிந்த மகளின் கல்யாண வைபோகங்கள்.. அப்பா அம்மாவோடு ஸ்வீட் கொண்டாட்டம் - அசத்தும் அனிதா! Viral Pics!
ஜோராக முடிந்த மகளின் கல்யாண வைபோகங்கள்.. அப்பா அம்மாவோடு ஸ்வீட் கொண்டாட்டம் - அசத்தும் அனிதா! Viral Pics!
Anitha Vijayakumar : தமிழ் சினிமாவின் மிக மூத்த நடிகர்களில் ஒருவர் தான் விஜயகுமார். இவர் குடும்பத்தில் உள்ள பலரும் திரைத்துறையில் பயணித்து வருகின்றனர்.

vijayakumar
தமிழ் திரையுலகில் இளம் வாலிபனாக கடந்த 1961ம் ஆண்டு அறிமுகமாகி, கிட்டத்தட்ட 63 ஆண்டுகளாக இந்த கோலிவுட் உலகில் பயணித்து வரும் மூத்த நடிகர் தான் விஜயகுமார் அவருக்கு வயது 80.
actor vijayakumar
இவருடைய இரண்டாவது மனைவியும் பிரபல நடிகையுமான மஞ்சுளா, உடல்நல குறைவு காரணமாக சில வருடங்களுக்கு முன்பு காலமானார். இப்பொது அவருடைய முதல் மனைவி முத்துக்கண்ணு அவர்களுடன் தான் வசித்து வருகிறார் விஜயகுமார். இந்த தம்பதிக்கு பிறந்த குழந்தைகள் தான் அனிதா விஜயகுமார், கவிதா விஜயகுமார் மற்றும் அருண் விஜய்.
Anitha
இந்த மூன்று பேரில் திரைத்துறைக்கு வராமல் வெளிநாட்டில் மருத்துவராக பணிபுரிந்து கொண்டு, தனது கணவர் மற்றும் குழந்தைகளோடு வாழ்ந்து வருபவர் தான் விஜயகுமாரின் மூத்த மகள் அனிதா விஜயகுமார்.
Anitha vijayakumar
கடந்த பிப்ரவரி மாதம் 19ம் தேதி அனிதா விஜயகுமாரின் மகள் தியாவிற்கு திருமணம் நடந்து முடிந்தது. பிறகு வெளிநாட்டில் அவருக்கு திருமண வரவேற்பு விழாவும் ஜோராக நடந்தது.
kavitha
இந்த நிலையில் மகளின் திருமணத்தை மகிழ்ச்சிகரமாக நிறைவு செய்துள்ள டாக்டர் அனிதா விஜயகுமார், தற்பொழுது தனது தாய் மற்றும் தந்தையோடு சென்னையில் நேரத்தை செலவிட்டு வருகிறார்.