நடிகை ஷாலின் சோயா தன் காதலரான டிடிஎஃப் வாசனுக்கு ஆதரவாக இன்ஸ்டாகிராமில் உருகி உருகி பதிவு ஒன்றை எழுதியிருக்கிறார்.

யூடியூப்பர் டிடிஎஃப் வாசன் அதிவேகமாக பைக் ஓட்டுவது, பைக்கில் சாகசம் செய்வது போன்ற வித்தைகள் காட்டி, அதை வீடியோ எடுத்து யூடியூபில் வெளியிடுபவர். அடிக்கடி ஏதாவது சர்ச்சையில் சிக்கி சின்னபின்னமாகும் அவர், சென்ற வருடம் காஞ்சிபுரம் அருகே சாலையில் ஆபத்தான முறையில் பைக் சாகசம் செய்து போலீசில் மாட்டிக்கொண்டார்.

இது தொடர்பான வழக்கில் ஜெயிலுக்கும் போன அவர், ஜாமீனில் வெளியே வந்தார். அவரது ஓட்டுநர் உரிமமும் ரத்து செய்யப்பட்டது. இவருடைய யூடியூப் சேனலையே பிளாக் செய்ய வேண்டும் என நீதிமன்றம் கண்டித்தது. பிறகும் திருந்தாத வாசன் காரில் போன் பேசியபடியே வேகமாகச் சென்று மற்றொரு வழக்கில் சிக்கினார். இந்த வழக்கில் நீதிமன்றம் அவரைக் கண்டித்து ஜாமீன் கொடுத்தது.

நண்பர்கள் சிலர் நல்ல புத்தி சொன்னதை அடுத்து அவர்களுடன் சேர்ந்து ஒரு பிசினஸ் தொடங்கி இருப்பதாகச் சொல்லபடுகிறது. இதனிடையே ‘மஞ்சள் வீரன்’ என்ற படத்தில் ஹீரோவாக நடிக்கிறார் என்றும் தகவல் வெளியாகியுள்ளது.

வயசு ஏறிட்டே போகுது... திருமணம் செய்து வைக்காத விரக்தியில் பாட்டியை அடித்துக் கொன்ற பேத்தி!

View post on Instagram

இச்சூழலில் டிடிஎஃப் வாசனுடன் நெருக்கமாகப் பழகி வந்த நடிகை ஷாலின் ஜோயா இன்ஸ்டாகிராமில் இருவரும் இன்றாக இருக்கும் சில படங்களைப் பதிவிட்டு, பிறந்தநாள் வாழ்த்து கூறினார். அதிலிருந்து இருவரும் காதலிக்கிறார்கள் என்று நெட்டிசன்கள் மத்தியில் தகவல் பரவியது.

'ராஜா மந்திரி', 'கண்ணகி' போன்ற தமிழ்ப் படங்களில் நடித்துள்ள நடிகை ஷாலின் சோயா டிடிஎஃப் வாசனுக்கு ஆதரவாக இன்ஸ்டாகிராமில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். தாறுமாறாக பைக் ஓட்டி படுகாயம் அடைந்த வாசன், தொடர்ச்சியாக போலீஸ் கேசிலும் சிக்கி நொந்து போயிருக்கிறார். சமூக ஆர்வலர்கள் பலரும் வாசனின் பைக் சாகச அடாவடியைக் கண்டித்துள்ளனர்.

இந்நிலையில், "நான் சந்தித்த மிகச் சிறந்த மனிதர் அவர். அவர் யாரையும் காயப்படுத்தவில்லை, அவர் யாரையும் காயப்படுத்த மாட்டார் என்று நான் நம்புகிறேன். இந்த இளம் வயதில், வெளி உலகத்தில் யாருக்கும் தெரியாமல் பல உயிர்களை அவர் கவனித்து வருகிறார். எனக்கு கொஞ்ச காலமாகத்தான் அவரைத் தெரியும். அவர் மிகவும் கனிவானவர், அப்பாவி பையன் என்று எனக்குத் தெரியும்" என்று இன்ஸ்டாவில் உருகி உருகி எழுதியிருக்கிறார் ஷாலின்.

மேலும், "அனைவரும் அவரிடம் அன்பாக இருக்குமாறு கேட்டுக்கொள்கிறேன். அவருக்கு எந்த கெட்ட எண்ணமும் இல்லை. அவரைப் போன்ற மனிதர்கள் ரொம்ப அபூர்வம். மிகவும் விலைமதிப்பற்றவர். இவரைப் போன்றவர்களை என்ன ஆனாலும் கைவிடக் கூடாது. அன்புள்ள வாசா, நீ உண்மையிலேயே ஒரு ஜெம்" என்றும் கூறியுள்ளார்.

படிச்சது 10வது தான்... டம்மி ஐ.டி. கம்பெனியை தொடங்கி லட்ச லட்சமாக அபேஸ் செய்த ஆசாமிகள்!