MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Gallery
  • Vijay Antony: நிறைய காயம்... மரத்துப் போனதுபோல் மாறிவிட்டேன்! மகளின் இழப்பு குறித்து மனம் திறந்த விஜய் ஆண்டனி!

Vijay Antony: நிறைய காயம்... மரத்துப் போனதுபோல் மாறிவிட்டேன்! மகளின் இழப்பு குறித்து மனம் திறந்த விஜய் ஆண்டனி!

'ரத்தம்' படத்தின் செய்தியாளர் இசை வெளியீட்டு விழாநேற்று நடந்த நிலையில், தன்னுடைய மகளுடன் கலந்து கொண்டார் விஜய் ஆண்டனி. அதில் முதல் முறையாக மகள் மீராவின் இழப்பு குறித்து, பேசிய தகவல்கள் தற்போது வைரலாக பார்க்கப்பட்டு வருகிறது.

2 Min read
Author : manimegalai a
| Updated : Sep 29 2023, 01:25 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
15
Vijay Antony Cinema Carrier:

Vijay Antony Cinema Carrier:

இசையமைப்பாளரும், நடிகருமான விஜய் ஆண்டனி... தமிழில், கடந்த 2005 ஆம் ஆண்டு இயக்குனரும் தளபதி விஜய்யின் தந்தையுமான எஸ்.ஏ.சி இயக்கத்தில் வெளியான 'சுக்ரன்' திரைப்படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமாகி, 2006 ஆம் ஆண்டு வெளியான 'கிழக்கு கடற்கரை சாலை' படத்தில் கேமியோ ரோலில் நடித்து, பின்னர் 2012 ஆம் ஆண்டு வெளியான 'நான்' படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமானார்.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
25
Vijay Antony Movies

Vijay Antony Movies

முதல் படத்திலேயே எதார்த்தமான நடிப்பார் ரசிகர்கள் கவனத்தை ஈர்த்த விஜய் ஆண்டனி, இதை தொடர்ந்து இந்தியா பாகிஸ்தான், பிச்சைக்காரன்,  சைத்தான், எமன், அண்ணாதுரை, காளி என அடுத்தடுத்து பல படங்களில் ஹீரோவாக நடித்தார். இவர் நடித்த படங்களும் முதலுக்கு மோசம் இல்லாமல் வசூல் செய்தது. குறிப்பாக கடந்த மே மாதம் விஜய் ஆண்டனி நடித்து, இயக்கி, இசையமைத்திருந்த 'பிச்சைக்காரன் 2' திரைப்படம் தமிழ் - தெலுங்கு ஆகிய மொழிகளில் வெளியாகி சூப்பர் ஹிட் வெற்றி பெற்றது. ஏற்கனவே தன்னை ஒரு சிறந்த இசையமைப்பாளராகவும், நடிகராகவும் நிரூபித்த விஜய் ஆண்டனி இந்த படத்தின் மூலம், இயக்குனராகவும் நிரூபித்தார்.

Prabhu Deva: பிரபுதேவா நடிக்கும் 'முசாசி'படக்குழுவினர் இலங்கை பிரதமருடன் திடீர் சந்திப்பு!

35
Vijay Antony Daughter Meera Death:

Vijay Antony Daughter Meera Death:

எவ்வளவு பிசியாக நடித்து கொண்டிருந்தாலும், தன்னுடைய குடும்பத்தினருடன் நேரம் செலவிடுவதை அதிகம் விரும்பும் விஜய் ஆண்டனி வாழ்க்கையில், கடந்த இரண்டு வாரங்களுக்கு முன் நடந்த சம்பவம்... அவரின் வாழ்க்கையில் ஈடுகட்டமுடியாதத இழைப்பாக மாறியது. சர்ச் பார்க் பள்ளியில் 12-ஆம் வகுப்பு படித்து வந்த, விஜய் ஆண்டனியின் மூத்த மகளான மீரா, மன அழுத்தம் காரணமாக தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதை தொடர்ந்து தென்னிந்திய திரையுலகை சேர்ந்த பலர் நேரடியாக சென்று மீராவின் உடலுக்கு அஞ்சலி செலுத்தினர்.

45
Raththam Audio Launch:

Raththam Audio Launch:

தற்போது வரை இந்த இழப்பில் இருந்து மீண்டு வர முடியாமல் தவித்து வரும் விஜய் ஆண்டனி, அவர் நடிப்பில் அக்டோபர் 6 ஆம் தேதி வெளியாக உள்ள, 'ரத்தம்' படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவில் தன்னுடைய இளைய மகள் லாராவுடன் கலந்து கொண்டார். இந்த இசை வெளியீட்டு விழாவில், இந்த படம் குறித்தும், இயக்குனர் அமுதன் குறித்தும் பேசிய விஜய் ஆண்டனி, சுமார் 10 வருடங்கள் காத்திருந்து இந்த படத்தின் நடிப்பதாக தெரிவித்தார்.

சும்மா தடாலடியா இருக்கே! சன் டிவி சீரியலை பின்னுக்கு தள்ளிய விஜய் டிவி தொடர்! டாப் 5 சீரியல் TRP லிஸ்ட் இதோ!

55
Vijay Antony About Meera Death:

Vijay Antony About Meera Death:

பின்னர் செய்தியாளர்களிடம் "மகளின் இழப்பு குறித்து பேசுகையில், 'நான் வாழ்க்கையில் சிறுவயதில் இருந்தே நிறைய பிரச்சனைகளை சந்தித்து விட்டேன். என்னுடைய நோக்கம் அடுத்தவர்களை மகிழ்விப்பது ஒன்று தான். நிறைய காயம் பட்டு பட்டு மரத்துப் போனது போல் மாறிவிட்டேன். ஒரு அப்பாவாக தங்கள் பிள்ளைகளை பார்த்துக் கொள்ள வேண்டும் என நினைப்பது இயல்பு ஆனால் அனைத்திற்கும் அனுபவம் தேவை. வாழ்க்கையின் எல்லா திசைகளையும் நான் பார்த்து விட்டேன். வாழ்க்கையில் எந்த ஒரு விஷயத்தையும் மறக்க வேண்டிய அவசியமில்லை மறக்க யோசிக்க வேண்டாம் நம் வாழ்க்கையே ஞாபகம் தான் நான் எதையும் மறக்க முயற்சி செய்ய மாட்டேன் வலி ஏற்பட்டால் கூட அந்த வலியோடு வாழ நினைப்பேன்’ என பேசி பேசியுள்ளார்".

About the Author

MA
manimegalai a
மணிமேகலை ஐடி துறையில் இளங்கலை பட்டப்படிப்பும், புதுவை பல்கலைக் கழகத்தில் எலக்ட்ரானிக் மீடியா துறையில் முதுகலை பட்டப்படிப்பையும் முடித்துள்ளார். சுமார் 10 வருடங்கள், மீடியா துறையில் பணியாற்றி வருகிறார். இதுவரை ஜீ தமிழ், இந்தியா கிளிட்ஸ் போன்ற நிறுவனங்களில் பணியாற்றி உள்ளார். பல பிரபலங்களை பேட்டி கண்டுள்ளார். தற்போது ஏசியா நெட் தமிழில், சப் எடிட்டராக 8 வருடங்களாக பணியாற்றி வருகிறார். சினிமா மற்றும் லைப் ஸ்டைல் செய்திகளை எழுதி வருகிறார்.
விஜய் ஆண்டனி

Latest Videos
Recommended Stories
Recommended image1
தளபதி விஜய்யிடம் இந்த கெட்ட பழக்கம் இருக்கு; இயக்குனர் கூறிய சீக்ரெட்..!
Recommended image2
சங்கீதாவோடு தளபதி 'GOAT' படம் பார்த்தார் என சொல்வது பொய்யா; உண்மையில் நைட் ஷோ யாருடன் பார்த்தார் தெரியுமா?
Recommended image3
குளிக்கும் நீரில் 'இத' கலந்து குளிங்க.. பருவகால நோய்கள் உங்கள தாக்காது!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved