MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Gallery
  • கங்குவா பணிகள் முடியப்போகுது.. தன் பணிகளை துவங்கும் சுதா - "புறநானூறு"-க்கு ரெடியாகும் சூர்யா! நியூ அப்டேட்!

கங்குவா பணிகள் முடியப்போகுது.. தன் பணிகளை துவங்கும் சுதா - "புறநானூறு"-க்கு ரெடியாகும் சூர்யா! நியூ அப்டேட்!

Suriya Next Movie : சூர்யாவின் திரை பயணத்தில் அதிக பட்ஜெட்டில் உருவாகும் படமாக மாறியுள்ளது கங்குவா. விரைவில் அப்பட பணிகள் முழுமை பெற உள்ளது.

1 Min read
Author : Ansgar R
Published : Feb 24 2024, 04:58 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
13
Actor Suriya

Actor Suriya

ஆரம்ப காலத்தில் தனது நடிப்பிற்காக பெரிய அளவில் விமர்சிக்கப்பட்டாலும், தன்னைத்தானே செதுக்கிக் கொண்டு இன்று தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்கள் வரிசையில் இடம் பிடித்திருக்கிறார் நடிகர் சூர்யா. கடந்த சில வருடங்களாக மிக நேர்த்தியாக தான் நடிக்கும் திரைப்படங்களின் கதை அம்சங்களை தேர்வு செய்து நடித்து வருகிறார்.

கோலிவுட் பிளாஷ்பேக்... ஜீன்ஸ் மற்றும் கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன் படங்களுக்கு இப்படி ஒரு ஒற்றுமை இருக்கிறதா?

23
Kanguva

Kanguva

இந்த சூழலில் சூர்யாவின் திரை வரலாற்றிலேயே மிகப்பெரிய பட்ஜெட்டில் உருவாகும் படமாக மாறி உள்ளது "கங்குவா". இந்த திரைப்படத்தை பிரபல இயக்குனர் சிறுத்தை சிவா இயக்கி வருகின்றார். ஏற்கனவே இந்த திரைப்படத்தில் தனது பணிகளை முடித்திருக்கும் சூர்யா, தற்பொழுது அப்படத்திற்கான தனது டப்பிங் பணிகளை துவங்கியுள்ளார். இந்நிலையில் விரைவில் இந்த திரைப்படத்திற்கான முழு பணியும் முடிவடைந்து, இவ்வருட இறுதிக்குள் இந்தப் படம் திரையரங்களில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

33
Purananuru

Purananuru

மேலும் பாலிவுட் உலகில் "கர்ணா" என்கின்ற திரைப்படத்தில் நடிக்க உள்ள சூர்யா, அதற்கு இடையில் மீண்டும் இயக்குனர் சுதா கொங்காரவின் இயக்கத்தில் ஒரு திரைப்படத்தில் நடிக்கவிருக்கிறார். ஏற்கனவே இந்த திரைப்படத்தின் டாக் லைன் "புறநானூறு" என்று அறிவிக்கப்பட்ட நிலையில் இந்த படத்தின் தலைப்பு பெரிய எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில் மார்ச் மாதம் நடுப் பகுதியில் இருந்து மதுரை, திருச்சி மற்றும் சிதம்பரம் உள்ளிட்ட பகுதிகளில் இந்த படத்திற்கான படப்பிடிப்பு துவங்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த திரைப்படத்தில் பிரபல மலையாள நடிகர் துல்கர் சல்மான், மலையாள நடிகை நஸ்ரியா உள்ளிட்டோர் நடிக்க உள்ளனர். இந்த திரைப்படத்திற்கு ஜிவி பிரகாஷ் குமார் இசையமைக்கின்றார்.

சண்முகத்தின் தங்கைகளிடம் தர்ம அடி வாங்கிய முத்துப்பாண்டி - அண்ணா சீரியலில் அதிரடி திருப்பம்!

About the Author

AR
Ansgar R
சூர்யா

Latest Videos
Recommended Stories
Recommended image1
தளபதி விஜய்யிடம் இந்த கெட்ட பழக்கம் இருக்கு; இயக்குனர் கூறிய சீக்ரெட்..!
Recommended image2
சங்கீதாவோடு தளபதி 'GOAT' படம் பார்த்தார் என சொல்வது பொய்யா; உண்மையில் நைட் ஷோ யாருடன் பார்த்தார் தெரியுமா?
Recommended image3
குளிக்கும் நீரில் 'இத' கலந்து குளிங்க.. பருவகால நோய்கள் உங்கள தாக்காது!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved