MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Gallery
  • கோலிவுட் பிளாஷ்பேக்... ஜீன்ஸ் மற்றும் கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன் படங்களுக்கு இப்படி ஒரு ஒற்றுமை இருக்கிறதா?

கோலிவுட் பிளாஷ்பேக்... ஜீன்ஸ் மற்றும் கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன் படங்களுக்கு இப்படி ஒரு ஒற்றுமை இருக்கிறதா?

நடிகர் அஜித் நடிப்பில் வெளிவந்த கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன் படத்துக்கும் பிரசாந்த் நடித்த ஜீன்ஸ் படத்துக்கும் உள்ள ஒற்றுமை பற்றி பார்க்கலாம்.

2 Min read
Author : Ganesh A
Published : Feb 24 2024, 03:57 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
14
Kandukonden Kandukonden, jeans

Kandukonden Kandukonden, jeans

1990-களில் கோலிவுட்டில் டிரெண்டிங் பாய்ஸ் ஆக வலம் வந்தவர்கள் என்றால் அது விஜய், அஜித், பிரசாந்த் தான். இதில் அஜித் மற்றும் பிரசாந்திற்கு ரசிகைகள் அதிகம். இதனால் இருவருமே தொடர்ந்து காதல் கதையம்சம் கொண்ட படங்களை தேர்ந்தெடுத்து நடித்து வந்தனர். இதில் பிரசாந்துக்கு மிகப்பெரிய திருப்புமுனையை ஏற்படுத்திய படம் என்றால் அது ஜீன்ஸ் தான். ஷங்கர் இயக்கத்தில் பிரம்மாண்டமாக உருவான இப்படத்தில் இரட்டை வேடத்தில் நடித்திருந்தார் பிரசாந்த்.

24
Prashanth, Aishwarya Rai

Prashanth, Aishwarya Rai

இப்படத்தில் பிரசாந்துக்கு ஜோடியாக ஐஸ்வர்யா ராய் நடித்திருந்தார். மாபெரும் வெற்றியை ருசித்த இப்படத்தில் முதலில் ஹீரோவாக நடிக்க இருந்தது பிரசாந்த் இல்லையாம். இப்படத்தின் கதையை இயக்குனர் ஷங்கர் முதன்முதலில் சொன்னது நடிகர் அஜித்திடம் தானாம். ஆனால் அவர் அந்த சமயத்தில் வேறு சில படங்களில் பிசியாக இருந்ததால் அவரால் ஜீன்ஸ் படத்துக்கு கால்ஷீட் கொடுக்கமுடியவில்லையாம். இதனால் அந்த வாய்ப்பு பிரசாந்துக்கு சென்றது.

இதையும் படியுங்கள்... சண்முகத்தின் தங்கைகளிடம் தர்ம அடி வாங்கிய முத்துப்பாண்டி - அண்ணா சீரியலில் அதிரடி திருப்பம்

34
Kandukonden Kandukonden

Kandukonden Kandukonden

இப்படி அஜித் நழுவவிட்ட வாய்ப்பை தட்டிதூக்கி பிரசாந்த் வெற்றி வாகை சூடியது போல், பிரசாந்தும் ஒரு பிளாக்பஸ்டர் ஹிட் படத்தில் நடிக்கும் வாய்ப்பை நழுவவிட்டு இருக்கிறார். பின்னர் அந்த வாய்ப்பு அஜித்துக்கு சென்று, அது அவரது கெரியரில் மிகப்பெரிய வெற்றிப்படமாக அமைந்தது. அது வேறு ஏதுமில்லை, ராஜீவ் மேனன் இயக்கத்தில் கடந்த 2000-ம் ஆண்டு வெளிவந்த கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன் திரைப்படம் தான். இதில் ஹீரோவாக நடிக்க ராஜீவ் மேனன் முதலில் அணுகியது பிரசாந்தை தான்.

44
Prashanth, Ajith

Prashanth, Ajith

ஆனால் அவர் விலகியதற்கு சில காரணங்கள் கூறப்படுகிறது. அதில் ஒன்று கால்ஷீட் பிரச்சனை மற்றொன்று, படத்தின் கதைப்படி அதில் பிரசாந்துக்கு ஜோடியாக தபு தான் நடிக்க இருப்பதாக ராஜீவ் மேனன் சொன்னாராம். ஆனால் பிரசாந்த், தனக்கு ஜோடியாக ஐஸ்வர்யா ராய் நடித்தால் தான் நடிப்பேன் என ஒற்றைக்காலில் நின்றதாகவும், அதற்கு ராஜீவ் மேனன் ஒத்துக்கொள்ளததால் அவர் இதில் இருந்து விலகியதாகவும் ஒரு தகவல் உண்டு. 

இப்படி பிரசாந்துக்கு வந்த வாய்ப்பு அஜித்துக்கும், அஜித்துக்கு வந்த வாய்ப்பு பிரசாந்துக்கும் மாறி மாறி சென்றாலும் இருவரும் அந்த வாய்ப்பை நன்றாக பயன்படுத்திக் கொண்டு வெற்றிவாகை சூடி உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படியுங்கள்...  ஐஸ்வர்யாவின் கர்ப்பத்தை கலைக்க முயற்சி... ராஜேஸ்வரியின் சதியில் சிக்கிய தீபா- கார்த்திகை தீபம் சீரியல் அப்டேட்

About the Author

GA
Ganesh A
இவர் பொறியியல் பட்டதாரி. செய்தி எழுதுவதில் 7 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் உள்ளவர். இவர் கடந்த 3 ஆண்டுகளாக ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா பற்றி நன்கு அறிந்தவர் மற்றும் அதில் அனுபவமும் பெற்றவர். சினிமா மற்றும் பொழுதுபோக்கு செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
இயக்குநர் ஷங்கர்
பிரசாந்த் (நடிகர்)

Latest Videos
Recommended Stories
Recommended image1
தளபதி விஜய்யிடம் இந்த கெட்ட பழக்கம் இருக்கு; இயக்குனர் கூறிய சீக்ரெட்..!
Recommended image2
சங்கீதாவோடு தளபதி 'GOAT' படம் பார்த்தார் என சொல்வது பொய்யா; உண்மையில் நைட் ஷோ யாருடன் பார்த்தார் தெரியுமா?
Recommended image3
குளிக்கும் நீரில் 'இத' கலந்து குளிங்க.. பருவகால நோய்கள் உங்கள தாக்காது!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved