Samuthirakani : காசு கொடுத்து இதை நானும் வாங்குனேன்! விஷாலை தொடர்ந்து சமுத்திரக்கனி முன்வைத்த குற்றச்சாட்டு!
விஷாலை தொடர்ந்து, அரசு சான்றிதழ் வாங்க பணம் கொடுத்ததாக நடிகர் சமுத்திரக்கனி செய்தியாளர் சந்திப்பில் கூறியுள்ள தகவல் தற்போது திரையுலகினர் மத்தியில், பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Nila Soru Press Meet
சேலம் மாவட்டத்தில் நடந்த 'நிலா சோறு' என்கிற நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட நடிகர் சமுத்திரக்கனி நிகழ்ச்சிக்கு பின்னர் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது அவரிடம் பல்வேறு கேள்விகள் கேட்டகப்பட்டது.
Cavery Problem:
நடிகர் சித்தார்த், 'சித்தா' [படத்தின் ப்ரோமோஷன் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட போது காவிரி பிரச்னை காரணமாக அவர், பாதியில் இருந்து வெளியேற்றப்பட்டது குறித்தும், ஏன் தமிழ் நடிகர்கள் யாரும் காவிரி பிரச்சனைக்கு குரல் கொடுக்கவில்லை என்கிற கேள்வி முன் வைக்கப்பட்ட போது, எனக்கு என்ன பிரச்சனை நடந்து கொண்டிருக்கிறது என்பது தெரியாது. பல ஆண்டுகளாக இந்த காவிரி பிரச்சனை நடந்து கொண்டுள்ளது. அவர்களே இந்த பிரச்னையை முடித்து கொண்டு வருவார்கள். இத்ற்கு முடிவெல்லாம் இல்லை. இதை தான் வேறு ஏதாவது பிரச்சனை இருந்தால் பேசுவோம் என கூறினார்.
samuthirakani
இதை தொடர்ந்து, விஷால் மும்பையில் சென்சார் அதிகாரிகள் சான்றிதழ் வழங்க பணம் கேட்டதாக கூறினார். உங்களுக்கு அப்படி ஏதாவது அனுபவம் உள்ளதா? என கேட்கப்பட்டதற்கு, "நான் இதுவரை 5 படங்களை தயாரித்துள்ளேன். 15 படங்களை இயக்கி உள்ளேன். ஆனால் எனக்கு இது போல் எந்த ஒரு அனுபவமும் நடந்தது இல்லை. ஆனால் அப்பா திரைப்படத்திற்கு டேக்ஸ் ப்ரீ வாங்குவதற்கு நான் பணம் கொடுத்துள்ளேன். அப்பா போன்ற படங்களை, அரசே எடுக்க வேண்டிய படத்தை நான் செலவழித்து எடுத்தும் பணம் கொடுத்து டேக்ஸ் ப்ரீ வாங்கியது வருத்தம் அளிக்கிறது என குற்றச்சாட்டை முன் வைத்தார்.
லியோ ஆடியோ லான்ச் ரத்து செய்யப்பட்டது குறித்து கேள்வி எழுப்பியதற்கு, அதற்கான காரணம் தனக்கு தெரியாது என்றும், சமீப காலமாக திரைப்படங்கள் குறித்து வரும் விமர்சனங்கள் பற்றி கேள்வி எழுப்பியதற்கு, இப்போது செல்போன் வைத்திருக்கும் அனைவருமே ரீவ்யூ சொல்ல துவங்கி விட்டனர். எனவே நல்ல படம் என்றால், யார் என்ன சொன்னாலும் ஓடும். அதற்க்கு போர் தொழில் படம் ஒரு சிறந்த எடுத்துக்காட்டு என தெரிவித்திருந்தார்.
விஷாலை தொடர்ந்து, அரசு சான்றிதழுக்கு... சமுத்திரக்கனியும் பணம் வழங்கியதாக கூறியுள்ள தகவல் திரையுலகில் மீண்டும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. விஷாலின் புகாரை தொடர்ந்து, மும்பை சென்சார் போர்டு மீது, எப்படி நடவடிக்கை பாய்ந்தது அதே போல் சமுத்திரக்கனியின் குற்றச்சாட்டு மீதும் நடவடிக்கை எடுக்கப்படுமா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.