- Home
- Gallery
- Pugazh : நீண்ட நாள் காத்திருப்பு.. கதையின் நாயகனாகும் புகழ் - வெளியானது Mr Zoo Keeper படத்தின் ரிலீஸ் தேதி!
Pugazh : நீண்ட நாள் காத்திருப்பு.. கதையின் நாயகனாகும் புகழ் - வெளியானது Mr Zoo Keeper படத்தின் ரிலீஸ் தேதி!
Actor Pugazh : சின்னத்திரை கலக்கியது மட்டுமல்லாமல், வெள்ளித்தறையில் பல முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடித்து வந்த புகழ், இப்பொது நாயகனாக நடித்துள்ள திரைப்படம் விரைவில் வெளியாக உள்ளது.

KPY Pugazh
தமிழ் திரையுலகில் ஒரு மிகச்சிறந்த நட்சத்திரமாக மாற வேண்டும் என்ற ஆசையோடு, சென்னையில் கிடைத்த வேலைகளை எல்லாம் செய்து பிரபல விஜய் டிவியில் ஒளிபரப்பான கலக்கப்போவது யாரு என்கின்ற நிகழ்ச்சியின் மூலம் அறிமுகமானவர் தான் புகழ். தொடக்கத்தில் பல சருக்கல்களை சந்தித்தாலும், குக் வித் கோமாளி என்கின்ற நிகழ்ச்சி இவருக்கு தமிழக மக்கள் மத்தியில் மிகப் பிரம்மாண்டமான வரவேற்பை கொடுத்தது என்றால் அது மிகையல்ல.
Actor Pugazh
குக் வித் கோமாளி நிகழ்ச்சி கொடுத்த அந்த வாய்ப்பை சரியாக பயன்படுத்திக் கொண்ட நடிகர் புகழ், தொடர்ச்சியாக பல்வேறு ரியாலிட்டி ஷோக்களிலும் பங்கேற்று மக்களை மகிழ்விக்க தொடங்கினார். வெள்ளி திரையிலும் நல்ல பல கதாபாத்திரங்கள் ஏற்று நடித்து வந்த புகழ் தற்போது நாயகனாக மாறி இருக்கிறார்.
Pugazh movie
பிரபல நடிகர் மாதவன் நடிப்பில் வெளியான "என்னவளே" படத்தின் இயக்குனர் சுரேஷ் அவர்கள், ஒரு நீண்ட இடைவெளிக்கு பிறகு இயக்குகின்ற திரைப்படம் தான் Mr. Zoo Keeper. பிரபல இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா இசையில் இந்த திரைப்படம் உருவாகியுள்ளது குறிப்பிடத்தக்கது. வருகின்ற மே மாதம் 3ம் தேதி Mr. Zoo Keeper திரைப்படம் உலக அளவில் வெளியாக உள்ளது.
Nabha Natesh: நடிகர் நிகில் நடிப்பில் உருவாகும் ‘சுயம்பு’ படத்தில் இணைந்தார் நடிகை நபா நடேஷ்!