Prashanth: விஜயை தொடர்ந்து... தூத்துக்குடி மக்களுக்கு உதவிய பிரஷாந்த்! அரசுக்கு வைத்த முக்கிய கோரிக்கை!
நடிகர் பிரஷாந்த் விஜய்யை தொடர்ந்து, மழையால் பாதிக்கப்பட்ட தூத்துக்குடி மக்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கியுள்ளார்.
actor Prashanth
தமிழ் சினிமாவில் 90-களில் முன்னணி ஹீரோவாக இருந்தவர் பிரஷாந்த். பல வெற்றி படங்களில் நடித்த இவரின் திரையுலக வாழ்க்கையில் தடுமாற்றத்தை ஏற்படுத்தியது இவரது சொந்த வாழ்க்கையில் நடந்த பிரச்சனைகள் தான்.
பிரசாந்தின் மனைவி கிரக லட்சுமிக்கும் இவருக்கு ஏற்பட்ட பிரச்சனை விவாகரத்து வரை சென்றதாலும், தன்னுடைய குழந்தையை பிரியும் சூழ்நிலை ஏற்பட்டதாலும் ஒரு கட்டத்தில் மொத்தமாக திரையுலகில் இருந்து விலகினார். இவர் கம் பேக் கொடுத்த படங்கள் அனைத்தும் பேக் டூ பேக் பிளாப் ஆனது.
விரைவில் இவர் ஹீரோவாக நடித்துள்ள 'அந்தகன்' திரைப்படம் வெளியாக உள்ளது. அதே போல் தளபதி விஜய் நடித்து வரும் GOAT படத்திலும் முக்கிய கதாபாத்திரத்தில் பிரஷாந்த் நடித்து வருகிறார். சமீபத்தில் விஜய் நெல்லை, தூத்துக்குடியில் மழையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நலத்திட்டங்கள் வழங்கிய நிலையில், அவரை தொடர்ந்து பிரஷாந்த் தற்போது வழங்கியுள்ளார்.
தூத்துக்குடி மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட நெல்லை தூத்துக்குடி மாவட்டங்களைச் சேர்ந்த ஆயிரம் பேருக்கு இன்று நடிகர் பிரசாந்த் நேரில் வந்து நலத்திட்ட உதவிகளை வழங்கினார் பாதிக்கப்பட்ட மக்களை நேரில் சந்தித்து உதவி செய்வது மகிழ்ச்சி அளிப்பதாக, கூறியுள்ளார்.
நடிகர் பிரசாந்த் சார்பில், மழையால் பாதிக்கப்பட்ட பொதுமக்கள் ஆயிரம் பேருக்கு அரிசி உடைகள் உள்ளிட்ட நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன. இதை தொடர்ந்து அவர் கூறுகையில், பாதிக்கப்பட்ட மக்களை நேரடியாக சந்தித்து உதவி செய்வது மகிழ்ச்சி அளிக்கிறது என்றும் கடவுள் அந்த பாக்கியத்தை எனக்கு அளித்திருக்கிறார்.
இதேபோன்று எல்லாரும் உதவி செய்வார்கள் இந்த மழை வெள்ளத்தில் காவல்துறையினர் உள்ளிட்ட அதிகாரிகள் தங்கள் குடும்பங்களை கூட மறந்து சிறப்பாக பணியாற்றி இருக்கிறார்கள். நமது நாடு மிகப்பெரிய நாடு அடுத்த பாதிப்பு ஏற்படாமல் இருப்பதற்காக குளங்களை முறையாக தூர்வார வேண்டுமென அரசுக்கு முக்கிய கோரிக்கை ஒன்றையும் விடுத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
ராதிகா நடித்து வரும் 'பொன்னி சி/ஓ ராணி' சீரியல் நடிகருக்கு திருமணம் முடிந்தது! வாழ்த்தும் ரசிகர்கள்!