MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Gallery
  • அவங்க மேல இப்பவும் கிரஷ்.. அந்த நடிகையை சைட் அடிப்பதற்காகவே ஓட்டலுக்கு போவேன் - நடிகர் கார்த்தி சொன்ன சீக்ரெட்

அவங்க மேல இப்பவும் கிரஷ்.. அந்த நடிகையை சைட் அடிப்பதற்காகவே ஓட்டலுக்கு போவேன் - நடிகர் கார்த்தி சொன்ன சீக்ரெட்

தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வரும் கார்த்தி, பிரபல நடிகை ஒருவர் மீது தனக்கு சிறுவயதில் இருந்து கிரஷ் இருப்பதாக கூறி இருக்கிறார்.

2 Min read
Author : Ganesh A
| Updated : Mar 17 2024, 03:43 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
14
Actor Karthi

Actor Karthi

தமிழ் திரையுலகில் செம்ம பிசியான நடிகராக வலம் வருபவர் கார்த்தி. அவர் நடிப்பில் தற்போது ஒரே நேரத்தில் வா வாத்தியாரே மற்றும் மெய் அழகன் ஆகிய இரு படங்கள் தயாராகி வருகிறது. இதில் வா வாத்தியாரே திரைப்படத்தை நலன் குமாரசாமி இயக்குகிறார். அதேபோல் மெய் அழகன் படத்தை 96 படத்தின் இயக்குனர் பிரேம்குமார் இயக்கி வருகிறார். இந்த இரண்டு படங்களின் ஷூட்டிங்கும் இறுதிக்கட்டத்தை எட்டி இருக்கிறது. 

24
Karthi says about crush on Amala

Karthi says about crush on Amala

இதுதவிர லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கைதி இரண்டாம் பாகம், ஹெச்.வினோத் இயக்கத்தில் தீரன் 2ம் பாகம், பி.எஸ்.மித்ரன் இயக்கத்தில் சர்தார் இரண்டாம் பாகம் மற்றும் பா இரஞ்சித், மாரி செல்வராஜ் ஆகியோருடன் தலா ஒரு படம் என நடிகர் கார்த்தியின் லைன் அப் நீண்டு கொண்டே செல்கிறது. இந்த நிலையில், நடிகர் கார்த்தி, தனக்கு நடிகை ஒருவர் மீது சிறுவயதில் இருந்து மிகப்பெரிய கிரஷ் இருப்பதாக பேட்டி ஒன்றில் பேசி இருக்கிறார்.

இதையும் படியுங்கள்... Goundamani : ‘ஒத்த ஓட்டு முத்தையா’ படத்திற்காக 8 மணி நேரம் டப்பிங் பேசி அசர வைத்த கவுண்டமணி

34
Amala Akkineni

Amala Akkineni

அதன்படி கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் காஃபி வித் டிடி நிகழ்ச்சியில் கலந்துகொண்ட நடிகர் கார்த்தியிடம் உங்களது கிரஷ் பற்றி சொல்லுங்கள் என டிடி கேட்க, இதற்கு நடிகர் கார்த்தி சட்டென சொன்ன பெயர் தான் அமலா. நடிகை அமலா மீது தனக்கு சிறுவயதில் இருந்தே மிகப்பெரிய கிரஷ் உண்டு என பேசிய கார்த்தி, இப்ப வரைக்கும் அது இருப்பதாக கூறி இருக்கிறார். அதோடு ஒரு சுவாரஸ்ய சம்பவத்தையும் கார்த்தி பகிர்ந்து கொண்டார்.

44
Nagarjuna wife Amala

Nagarjuna wife Amala

அதன்படி நடிகை அமலா தமிழ் சினிமாவில் உச்சத்தில் இருந்த சமயத்தில் சென்னை அடையாறு அருகே ஓட்டல் ஒன்றை நடத்தி வந்தாராம். அப்போது அவரது ஓட்டலில் சென்று பார்சல் வாங்க வீட்டில் இருந்து டிரைவரை அனுப்புவார்களாம். இரவு நேரத்தில் அமலா அங்கு இருப்பார் என்பதை அறிந்த நடிகர் கார்த்தியும் டிரைவருடன் ஓட்டலுக்கு சென்று அமலாவை சைட் அடிப்பாராம். தனக்கு அமலா மீது கிரஷ் இருப்பதை எங்குவேண்டுமானாலும் கூச்சமே இல்லாமல் சொல்வேன் என்றும் அந்த நேர்காணலில் கூறி இருக்கிறார் கார்த்தி.

இதையும் படியுங்கள்...  ரஜினி படத்தை விட டபுள் மடங்கு வசூல்... தமிழ்நாடு பாக்ஸ் ஆபிஸில் தரமான சாதனை படைத்த மஞ்சும்மல் பாய்ஸ்

About the Author

GA
Ganesh A
இவர் பொறியியல் பட்டதாரி. செய்தி எழுதுவதில் 7 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் உள்ளவர். இவர் கடந்த 3 ஆண்டுகளாக ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா பற்றி நன்கு அறிந்தவர் மற்றும் அதில் அனுபவமும் பெற்றவர். சினிமா மற்றும் பொழுதுபோக்கு செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
கார்த்தி (நடிகர்)
கார்த்தி (நடிகர்)

Latest Videos
Recommended Stories
Recommended image1
தளபதி விஜய்யிடம் இந்த கெட்ட பழக்கம் இருக்கு; இயக்குனர் கூறிய சீக்ரெட்..!
Recommended image2
சங்கீதாவோடு தளபதி 'GOAT' படம் பார்த்தார் என சொல்வது பொய்யா; உண்மையில் நைட் ஷோ யாருடன் பார்த்தார் தெரியுமா?
Recommended image3
குளிக்கும் நீரில் 'இத' கலந்து குளிங்க.. பருவகால நோய்கள் உங்கள தாக்காது!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved