MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Gallery
  • ரஜினி படத்தை விட டபுள் மடங்கு வசூல்... தமிழ்நாடு பாக்ஸ் ஆபிஸில் தரமான சாதனை படைத்த மஞ்சும்மல் பாய்ஸ்

ரஜினி படத்தை விட டபுள் மடங்கு வசூல்... தமிழ்நாடு பாக்ஸ் ஆபிஸில் தரமான சாதனை படைத்த மஞ்சும்மல் பாய்ஸ்

மஞ்சும்மல் பாய்ஸ் திரைப்படம் ரஜினி படத்தால் கூட எட்டமுடியாத வசூல் சாதனையை தமிழ்நாட்டில் நிகழ்த்தி வியப்பில் ஆழ்த்தி இருக்கிறது.

2 Min read
Author : Ganesh A
Published : Mar 17 2024, 11:28 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
14
Manjummel boys

Manjummel boys

தமிழ் சினிமாவிற்கு 2024-ம் ஆண்டு மிகவும் சோகமான ஆண்டாகவே அமைந்துள்ளது. இந்த ஆண்டு தமிழில் வெளியான படங்களில் பிளாக்பஸ்டர் ஹிட் என சொல்லும் அளவுக்கு ஒரு படம் கூட வசூலை வாரிக்குவிக்கவில்லை. இத்தனைக்கு ரஜினிகாந்த், சிவகார்த்திகேயன், தனுஷ் போன்ற முன்னணி நடிகர்களின் படங்கள் ரிலீஸ் ஆகியும் இந்த நிலைமையில் தத்தளித்து வந்தது தமிழ் சினிமா. இதனால் தியேட்டர்களும் கூட்டமின்றி காத்துவாங்கின.

24
Manjummel boys collection

Manjummel boys collection

இந்த நிலையில், தமிழ்நாட்டு திரையரங்க உரிமையாளர்களுக்கு வரப்பிரசாதமாக வந்த திரைப்படம் தான் மஞ்சும்மல் பாய்ஸ். குணா குகையில் நடந்த உண்மை சம்பவத்தை மையமாக வைத்து எடுக்கப்பட்ட இப்படத்தில் பெரும்பாலான காட்சிகளில் தமிழ் வசனங்கள் தான் இடம்பெற்றிருந்தது. இதனால் நேரடி தமிழ் படத்துக்கு நிகராக மஞ்சும்மல் பாய்ஸ் படம் டப்பிங் செய்யாமல் அப்படியே ரிலீஸ் செய்யப்பட்டது. இப்படத்திற்கு வரவேற்பு அதிகரிக்க அதிகரிக்க தியேட்டர்களின் எண்ணிக்கையும் அதிகரித்தது.

இதையும் படியுங்கள்... 14 ஆண்டுகளுக்கு பின் தன்னுடைய கோட்டைக்கு செல்லும் விஜய்... தளபதியை தடபுடலாக வரவேற்க தயாராகும் ரசிகர்கள்

34
Manjummel Boys Tamilnadu Box Office

Manjummel Boys Tamilnadu Box Office

தமிழ்நாட்டில் நடந்த உண்மை சம்பவத்தை அடிப்படையாக வைத்து எடுத்தது மற்றும் கமல்ஹாசனின் குணா படத்தின் கனெக்‌ஷன் ஆகியவை இப்படத்திற்கு மிகப்பெரிய பிளஸ் ஆக அமைந்ததால் தமிழ்நாட்டு ரசிகர்கள் மஞ்சும்மல் பாய்ஸை தலையில் தூக்கி வைத்து கொண்டாடி வருகின்றனர். மூன்று வாரங்களைக் கடந்து வெற்றிநடை போட்டு வரும் இப்படம் பாக்ஸ் ஆபிஸிலும் வசூல் சாதனை படைத்த வண்ணம் உள்ளது.

44
Manjummel Boys crosses 50 crore collection in Tamilnadu

Manjummel Boys crosses 50 crore collection in Tamilnadu

உலகளவில் ரூ. 175 கோடிக்கு மேல் வசூலித்துள்ள இப்படம் தற்போது தமிழ்நாட்டில் மட்டும் ரூ.50 கோடிக்கு மேல் வசூலித்து சாதனை படைத்துள்ளது. தமிழ்நாட்டில் இந்த மைல்கல்லை எட்டிய முதல் மலையாள படம் மஞ்சும்மல் பாய்ஸ் தான். அதுமட்டுமின்றி இந்த ஆண்டு ரஜினி நடிப்பில் வெளிவந்த லால் சலாம் படம் தமிழ்நாட்டில் வெறும் ரூ.20 கோடி மட்டுமே வசூலித்து இருந்த நிலையில், தற்போது மஞ்சும்மல் பாய்ஸ் அதைவிட டபுள் மடங்கு வசூலித்து மாஸ் காட்டி உள்ளது.

இதையும் படியுங்கள்... பிக்பாஸ் டூ சினிமா.. ஹீரோ, ஹீரோயினாக அறிமுகமாகும் விஷ்ணு & மாயா! அடுத்தடுத்து வந்த அப்டேட்; ஆடிப்போன ரசிகர்கள்

About the Author

GA
Ganesh A
இவர் பொறியியல் பட்டதாரி. செய்தி எழுதுவதில் 7 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் உள்ளவர். இவர் கடந்த 3 ஆண்டுகளாக ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா பற்றி நன்கு அறிந்தவர் மற்றும் அதில் அனுபவமும் பெற்றவர். சினிமா மற்றும் பொழுதுபோக்கு செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.

Latest Videos
Recommended Stories
Recommended image1
தளபதி விஜய்யிடம் இந்த கெட்ட பழக்கம் இருக்கு; இயக்குனர் கூறிய சீக்ரெட்..!
Recommended image2
சங்கீதாவோடு தளபதி 'GOAT' படம் பார்த்தார் என சொல்வது பொய்யா; உண்மையில் நைட் ஷோ யாருடன் பார்த்தார் தெரியுமா?
Recommended image3
குளிக்கும் நீரில் 'இத' கலந்து குளிங்க.. பருவகால நோய்கள் உங்கள தாக்காது!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved