MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Gallery
  • Arjun Meet Modi: பாஜக கட்சியில் இணைந்தது உண்மையா? மோடியை சந்தித்து அர்ஜுன் வைத்த கோரிக்கை.!

Arjun Meet Modi: பாஜக கட்சியில் இணைந்தது உண்மையா? மோடியை சந்தித்து அர்ஜுன் வைத்த கோரிக்கை.!

பிரதமர் மோடியை நடிகர் அர்ஜுன் சந்தித்து பேசிய நிலையில், அவர் பாஜக கட்சியில் இணைந்து விட்டதாக தகவல்கள் வெளியான நிலையில் இதுகுறித்து அவரே தற்போது விளக்கம் கொடுத்துள்ளார். 

2 Min read
Author : manimegalai a
Published : Jan 20 2024, 12:35 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
15

பாரத பிரதமர் மோடி, 3 நாள் சுற்றுப்பயணமாக தமிழகம் வந்துள்ள நிலையில், நேற்று மாலை சென்னை நேரு ஸ்டேடியத்தில் நடைபெறும் 'கோலோ இந்தியா' விளையாட்டு போட்டிகளை தொடங்கி வைத்தார். இந்த நிகழ்ச்சியில் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி, முதல்வர் முக ஸ்டாலில் உட்பட பல அரசியல் தலைவர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
 

25

நிகழ்ச்சி துவங்கி வைத்த பின்னர், கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையில் பிரதமர் தங்குவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்த நிலையில், பல அரசியல் தலைவர்கள் மற்றும் பிரபலங்கள் பிரதமரை நட்பு ரீதியாகவும், மரியாதை ரீதியாகவும் சந்தித்து பேசினர். அந்த வகையில், மோடியை சந்திக்க பிரபல நடிகர் ஆக்ஷன் கிங் அர்ஜுன் அனுமதி கேட்ட நிலையில், மோடி அனுமதி கொடுத்ததை தொடர்ந்து இந்த சந்திப்பு நடந்துள்ளது.

 


 

35

நடிகர் அர்ஜுன் திடீர் என பிரதமரை சந்தித்து பேசியதை தொடர்ந்து... அர்ஜுன் பாஜக கட்சியில் இணைந்து விட்டதாக செய்திகள் பரவின. இதை தொடர்ந்து பிரதமரை சந்தித்த பின்னர் செய்தியாளர்களை சந்தித்து பேசிய அர்ஜுன், இதுகுறித்த கேள்விகளுக்கு விளக்கம் கொடுத்துள்ளார். 
 

45

இதுதொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய அர்ஜூன் , பிரதமரை என்னுடைய கோவிலுக்கு வருமாறு அழைப்பு விடுத்தேன். கூடிய சீக்கிரத்தில் வருவேன் என்று அவரும் சொல்லியிருக்கிறார். இது சும்மா கேஷுவலாக நடந்த சந்திப்பு தான். இப்போது தான், முதல் முறையாக மோடியை சந்திக்கிறேன். எங்களுக்கு ரொம்ப பிடித்த ஒரு மனிதர். எங்கள் வீட்டில் எல்லாருக்கும் மோடியை பிடிக்கும். அவர் இன்று இங்கே வந்திருப்பதாக தகவல் கிடைத்தது. இதனால் உங்களை சந்திக்க வேண்டும் என்று அப்பாயிண்ட்மெண்ட் கேட்டோம். அவரும் உடனே கொடுத்துவிட்டார். இப்போது சந்தித்துவிட்டு வந்திருக்கிறோம்." என தெரிவித்தார்.
 

55

இதை தொடர்ந்து, "பா.ஜ.க கட்சியில் நீங்கள் இணைந்து விட்டதாக செய்திகள் பரவி வருகிறதே... அது உண்மையா என செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த அர்ஜுன், 'அப்படியெல்லாம் இல்லை... அரசியல் எனக்கு தெரியாது" என்று கூறி இது மரியாதை நிமித்தமான சந்திப்பு என்பதை உறுதி செய்தார்.

About the Author

MA
manimegalai a
மணிமேகலை ஐடி துறையில் இளங்கலை பட்டப்படிப்பும், புதுவை பல்கலைக் கழகத்தில் எலக்ட்ரானிக் மீடியா துறையில் முதுகலை பட்டப்படிப்பையும் முடித்துள்ளார். சுமார் 10 வருடங்கள், மீடியா துறையில் பணியாற்றி வருகிறார். இதுவரை ஜீ தமிழ், இந்தியா கிளிட்ஸ் போன்ற நிறுவனங்களில் பணியாற்றி உள்ளார். பல பிரபலங்களை பேட்டி கண்டுள்ளார். தற்போது ஏசியா நெட் தமிழில், சப் எடிட்டராக 8 வருடங்களாக பணியாற்றி வருகிறார். சினிமா மற்றும் லைப் ஸ்டைல் செய்திகளை எழுதி வருகிறார்.
பிரதமர் மோடி

Latest Videos
Recommended Stories
Recommended image1
தளபதி விஜய்யிடம் இந்த கெட்ட பழக்கம் இருக்கு; இயக்குனர் கூறிய சீக்ரெட்..!
Recommended image2
சங்கீதாவோடு தளபதி 'GOAT' படம் பார்த்தார் என சொல்வது பொய்யா; உண்மையில் நைட் ஷோ யாருடன் பார்த்தார் தெரியுமா?
Recommended image3
குளிக்கும் நீரில் 'இத' கலந்து குளிங்க.. பருவகால நோய்கள் உங்கள தாக்காது!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved