காந்தாரா படத்தால் 25 மடங்கு உயர்ந்த சம்பளம்.. Kantara Chapter 1 - ரிஷப் ஷெட்டியின் சம்பளம் எவ்வளவு தெரியுமா?
Rishab Shetty Salary : கன்னட மொழி நடிகர் என்றபோது தமிழ் சினிமா ரசிகர்களின் உள்ளங்களை காந்தாரா என்ற ஒரே ஒரு படத்தில் வென்றுவிட்டார் ரிஷப் ஷெட்டி என்று கூறினால் அது மிகையாகாது.
Kantara
மங்களூருவில் பிறந்து இன்று கன்னட திரை உலகில் முன்னணியை இயக்குனராகவும், நடிகராகவும் மாறி உள்ளவர் தான் ரிஷப் ஷெட்டி. கடந்த 2012 ஆம் ஆண்டு வெளியான "துக்ளக்" என்கின்ற கன்னட திரைப்படத்தின் மூலம் நடிகராக தனது கலை பயணத்தை துவங்கிய ரிஷப் செட்டி, கடந்த 2016 ஆம் ஆண்டு வெளியான "ரிக்கி" என்கின்ற கன்னட திரைப்படத்தின் மூலம் இயக்குனராக களம் இறங்கினார்.
அதன்பின் பல திரைப்படங்களை இயக்கியும் நடித்தும் வரும் ரிஷப் செட்டி இந்திய சினிமாவின் பார்வையில் பட காரணமாக அமைந்தது கடந்த 2022 ஆம் ஆண்டு அவருடைய இயக்கம் மற்றும் நடிப்பில் வெளியான காந்தாரா என்கின்ற திரைப்படம். தனது சொந்த மண்ணின் பாரம்பரியத்தை பேசும் காந்தாரா திரைப்படம் கன்னட திரையுலகை தாண்டி இந்திய திரையுலகையே திரும்பி பார்க்க வைத்த திரைப்படமாக மாறியது. பல்வேறு திரைத்துறையை சேர்ந்த முன்னணி நடிகர்களும், இயக்குனர்களும் ரிஷப் ஷெட்டிக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வந்தனர்.
Rishab Shetty
இந்நிலையில் காந்தாரா படத்தின் தொடர்ச்சியாக வெளியாகவுள்ள Kantara Chapter 1 படத்தை இயக்க உள்ளார் ரிஷப் ஷெட்டி. இந்நிலையில் அவர் இந்த திரைப்படத்திற்கு வாங்கவிருக்கும் சம்பளம் குறித்த விவரங்கள் வெளியாகி உள்ளது. கடந்த 2022 ஆம் ஆண்டு வெளியான காந்தாரா திரைப்படம் உலக அளவில் சுமார் 400 கோடி ரூபாய் வசூல் செய்து மிகப் பெரிய வசூல் சாதனை செய்தது.
Kantara Chapter 1
அந்த திரைப்படத்திற்காக ரிஷப் செட்டிக்கு சுமார் 4 கோடி ரூபாய் சம்பளம் கொடுக்கப்பட்டதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. இந்நிலையில் காந்தாரா திரைப்படத்தின் உலகளாவிய மாபெரும் வெற்றியை தொடர்ந்து அவருடைய சம்பளம் தற்பொழுது 25 மடங்கு அதிகமாகி உள்ளதாக கூறப்படுகிறது. இந்நிலையில் காந்தாரா திரைப்படத்தின் சாப்டர் ஒன் பாகத்தை தயாரித்து வழங்கவிருக்கும் Hombale Films நிறுவனம் அவருக்கு இரண்டு தவணையாக சுமார் 100 கோடி ரூபாயை சம்பளமாக வழங்க உள்ளதாக கூறப்படுகிறது.