"பசங்களா கடவுள் பக்தி ரொம்ப முக்கியம்" மகன்களுடன் குலதெய்வம் கோவிலில் தனுஷ்!
Dhanush With His Sons : நடிகர் தனுஷ் தனது இரு மகன்களோடு சாமி தரிசனம் செய்து திரும்பிய புகைப்படங்கள் இப்பொது பெரிய அளவில் வைரலாகி வருகின்றது.
Dhanush
"ராயன்" திரைப்படம் இன்னும் சில நாள்களில் வெளியாகவுள்ள நிலையில், நடிகர் மற்றும் இயக்குனர் தனுஷ், தனது குலதெய்வம் கோவிலுக்கு சென்று சுவாமி தரிசம் செய்துள்ளார்.
நாங்க ரெடி.. நீங்க ரெடியா? Promotion பணிகளை துவங்கிய தங்கலான் டீம்!
dhanush two sons
மேலும் அவருடைய இந்த ஆன்மீக பயணத்தில் நடிகர் தனுஷின் இரண்டு மகன்களான லிங்கா மற்றும் யாத்திரா ஆகிய இருவரும் தந்தையோடு இணைந்து சென்றுள்ளனர். சொந்த ஊர் மக்களை சந்தித்த நடிகர் தனுஷ், அவர்களிடம் விசாரித்து மகிழ்ந்தார்.
dhanush son
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் மூத்த மகள் ஐஸ்வர்யா ரஜினிகாந்தை கடந்த 2004ம் ஆண்டு தனுஷ் திருமணம் செய்து கொண்ட நிலையில், அவர்களுக்கு இரண்டு ஆண் குழந்தைகள் பிறந்தனர். திருமணமாகி சுமார் 20 ஆண்டுகள் கழித்து தற்பொழுது அந்த ஜோடி பிரிந்து வாழ்ந்து வருவது குறிப்பிடத்தக்கது.
yatra raja
தனுஷ் மற்றும் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் ஆகிய இருவரும் பிரிந்து வாழ்ந்து வந்தாலும், யாத்ரா மற்றும் லிங்கா ஆகிய இருவரும் அப்பா மற்றும் அம்மா ஆகிய இருவரோடும் அன்போடு பயணித்து வருவது அனைவரும் அறிந்ததே.