நாங்க ரெடி.. நீங்க ரெடியா? Promotion பணிகளை துவங்கிய தங்கலான் டீம்!
Thangalaan Promotion : பிரபல நடிகர் விக்ரம் நடிப்பில் வெளியாகவுள்ள "தங்கலான்" திரைப்படத்திற்கான பிரமோஷன் பணிகளில் இப்போது படக்குழுவினர் ஈடுபட்டு வருகின்றனர்.

pa ranjith
முதல் முறையாக பிரபல இயக்குனர் பா. ரஞ்சித் இயக்கத்தில், தமிழ் சினிமாவின் மூத்த நடிகர் விக்ரம் நடித்துள்ளாள் திரைப்படம் தான் "தங்கலான்". இதுவரை தமிழ் திரையுலகில் சொல்லப்படாத ஒரு கதைக்களத்தை இந்த திரைப்படம் விவரிக்க உள்ளது.
மன நிம்மதியை தேடி சுவாமி தரிசனம்.. தனிமையில் அமர்ந்திருக்கும் தனுஷ்!
vikram
சுமார் 150 கோடி ரூபாய் பட்ஜெட்டில், கடந்த ஆண்டு இந்த திரைப்படத்திற்கான பணிகள் துவங்கியது. இடையில் விக்ரமுக்கு ஏற்பட்ட எலும்பு முறிவு காரணமாக, சில காலம் இந்த திரைப்படத்தின் படப்பிடிப்பு பணிகள் தடைப்பட்டது குறிப்பிடத்தக்கது.
thangalaan
இந்நிலையில் அனைத்து பணிகளும் முடிந்து, வருகின்ற ஆகஸ்ட் மாதம் 15ம் தேதி சுதந்திர தினத்தன்று இந்த திரைப்படம் வெளியாகவுள்ள நிலையில், படத்தின் பிரமோஷன் பெரிய அளவில் செய்யப்பட உள்ளது. இந்த திரைப்படத்தை ஸ்டுடியோ கிரீன் நிறுவனம் தயாரித்துள்ளது.
malavika
இந்த திரைப்படத்தில் நடித்துள்ள பிரபல நடிகை பார்வதி, தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பட குழுவோடு எடுத்துக்கொண்ட புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். இப்போது அந்த புகைப்படங்கள் வைரலாகி வருகிறது.
கங்குலியோடு காதல் வயப்பட்டேனா? மனம் திறந்த நடிகை நக்மா - ஒரு Flashback!