MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Gallery
  • Shalini Ajith : காதலுக்காக சினிமாவையே உதறித்தள்ளியவர்... நடிகை ஷாலினியின் சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா?

Shalini Ajith : காதலுக்காக சினிமாவையே உதறித்தள்ளியவர்... நடிகை ஷாலினியின் சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா?

நடிகர் அஜித்குமாரின் மனைவி ஷாலினி சினிமாவை விட்டு விலகினாலும் அவருக்கு கோடிக்கணக்கில் சொத்துக்கள் இருக்கிறதாம். அதைப்பற்றி பார்க்கலாம்.

2 Min read
Author : Ganesh A
| Updated : Apr 02 2024, 12:52 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
15
Ajith Shalini

Ajith Shalini

தமிழ் மற்றும் மலையாளத்தில் வெளிவந்த ஏராளமான ஹிட் படங்களில்  குழந்தை நட்சத்திரமாக நடித்து பேமஸ் ஆனவர் ஷாலினி. இவர் பகத் பாசிலின் தந்தை பாசில் இயக்கத்தில் கடந்த 1997-ம் ஆண்டு வெளிவந்த ‘அனியாதி பிராவு’ என்கிற மலையாள படத்தின் மூலம் ஹீரோயினாக அறிமுகமானார். மலையாளத்தில் மாஸ் ஹிட் அடித்த இப்படம், அதே ஆண்டு தமிழில் காதலுக்கு மரியாதை என்கிற பெயரில் ரீமேக் செய்து வெளியிடப்பட்டது. தமிழிலும் சக்கைப்போடு போட்டப் இப்படத்தில் நடிகர் விஜய்க்கு ஜோடியாக நடித்திருந்தார் ஷாலினி.

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred
25
Ajith shalini marriage

Ajith shalini marriage

தமிழில் ஹீரோயினாக அறிமுகமான முதல் படத்திலேயே விஜய்யுடன் நடித்து வெற்றிகண்ட ஷாலினிக்கு, அடுத்ததாக அஜித்துக்கு ஜோடியாக நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. சரண் இயக்கிய அமர்களம் படத்தில் தான் அஜித்தும் ஷாலினியும் முதன்முறையாக ஜோடி சேர்ந்து நடித்தனர். ஷாலினியின் ரீல் மற்றும் ரியல் வாழ்க்கையில் மிகப்பெரிய திருப்புமுனையாக அமைந்தது இப்படம். ஏனெனில் அமர்களம் படத்தில் நடித்தபோது தான் அஜித்தும் ஷாலினியும் காதலிக்க தொடங்கினர். இப்பட ஷூட்டிங் சமயத்தில் மோதலில் தொடங்கிய இவர்களின் சந்திப்பு காதலில் முடிந்தது.

35
Ajith wife shalini

Ajith wife shalini

அமர்களம் படத்தில் நடித்து முடித்ததும் விஜய்க்கு ஜோடியாக கண்ணுக்குள் நிலவு படத்தில் நடித்தார் ஷாலினி. அதன்பின்னர் மணிரத்னம் இயக்கிய ரொமாண்டிக் ஹிட் திரைப்படமான அலைபாயுதே படத்தில் மாதவனுக்கு ஜோடியாக நடித்த ஷாலினி, அப்படத்தில் நடித்து முடித்த கையோடு, நடிகர் அஜித்தை திருமணம் செய்துகொண்டார். இவர்களது திருமணம் கடந்த 2000-ம் ஆண்டு நடந்தது. திருமணத்துக்கு பின்னர் பிரசாந்துக்கு ஜோடியாக பிரியாத வரம் வேண்டும் என்கிற ஒரே ஒரு படத்தில் மட்டும் நடித்த ஷாலினி, அத்துடன் சினிமாவை விட்டே விலகி விட்டார்.

இதையும் படியுங்கள்... Vanitha Son : பிரபல இயக்குனரின் படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமாகும் வனிதா விஜயகுமார் மகன் ஸ்ரீஹரி

45
Shalini Ajithkumar

Shalini Ajithkumar

டாப் ஹீரோயினாக இருக்கும்போதே திருமணம் செய்துகொண்டு சினிமாவை விட்டே விலகிய ஷாலினிக்கு, திருமணமாகி 8 ஆண்டுகள் கழித்து தான் முதல் குழந்தை பிறந்தது. அக்குழந்தைக்கு அனோஷ்கா என பெயரிட்டனர். அனோஷ்கா பிறந்து 7 ஆண்டுகள் கழித்து கடந்த 2015-ம் ஆண்டு ஆத்விக் என்கிற ஆண் குழந்தையை பெற்றெடுத்தார் நடிகை ஷாலினி. பின்னர் குழந்தைகள், குடும்பம் என நடிகை ஷாலினி பிசியானதால் அவர் சினிமா பக்கம் தலைகாட்டவே இல்லை. நடிகை ஷாலினிக்கு ஷாமிலி என்கிற தங்கச்சியும், ரிச்சர்டு என்கிற தம்பியும் உள்ளனர். இவர்கள் இருவருமே சினிமாவில் ஹீரோ, ஹீரோயினாக நடித்துள்ளனர்.

55
Shalini net worth

Shalini net worth

சினிமாவை விட்டு விலகினாலும் கோடீஸ்வரியாக வாழும் நடிகை ஷாலினியின் சொத்து மதிப்பு குறித்து தற்போது பார்க்கலாம். அதன்படி நடிகை ஷாலினியின் சொத்து மதிப்பு ரூ.50 கோடிக்கு மேல் இருக்கும் என கூறப்படுகிறது. அதேபோல் அஜித் - ஷாலினி ஜோடியின் மொத்த சொத்து மதிப்பு ரூ.300 கோடிக்கு மேல் இருக்குமாம். பிசியான ஹீரோயினாக இருக்கும் போதே சினிமாவை விட்டு விலகிய ஷாலினி தன்னுடைய கடைசி படத்துக்காக ரூ.50 லட்சம் சம்பளமாக வாங்கினாராம். இன்று அவர் நடிக்க ஓகே சொன்னால் கோடி கோடியாய் சம்பளத்தை வாரிவழங்க தயாரிப்பாளர்கள் காத்திருக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படியுங்கள்... மீட்டிங்ல கூட வில்லேஜ் குக்கிங் சேனல் தான் பாக்குறேன்... தமிழக யூடியூபர்களை வியந்து பாராட்டிய சிரஞ்சீவி

About the Author

GA
Ganesh A
இவர் பொறியியல் பட்டதாரி. செய்தி எழுதுவதில் 7 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் உள்ளவர். இவர் கடந்த 3 ஆண்டுகளாக ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா பற்றி நன்கு அறிந்தவர் மற்றும் அதில் அனுபவமும் பெற்றவர். சினிமா மற்றும் பொழுதுபோக்கு செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.

Latest Videos
Recommended Stories
Recommended image1
தளபதி விஜய்யிடம் இந்த கெட்ட பழக்கம் இருக்கு; இயக்குனர் கூறிய சீக்ரெட்..!
Recommended image2
சங்கீதாவோடு தளபதி 'GOAT' படம் பார்த்தார் என சொல்வது பொய்யா; உண்மையில் நைட் ஷோ யாருடன் பார்த்தார் தெரியுமா?
Recommended image3
குளிக்கும் நீரில் 'இத' கலந்து குளிங்க.. பருவகால நோய்கள் உங்கள தாக்காது!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved