Ethirneechal: ஜனனிக்கு காத்திருந்த அதிர்ச்சி! மீண்டும் காணாமல் போன குணசேகரன்.. எதிர்நீச்சல் அப்டேட்!
எதிர்நீச்சல் சீரியலின் இன்றைய புதிய புரோமோ புதிரோடு வெளியாகி, பல சந்தேகங்களை எழுப்பியுள்ளது.
Ethirneechal Serial
எதிர்நீச்சல் சீரியலில், மாரிமுத்து மறைவால் ஏற்பட்ட குழப்பங்கள் இன்னும் தீர்ந்த பாடு இல்லை . மாரி முத்து, இறந்த பின்பு கூட, மிகவும் சாமர்த்தியமாக பல ட்விஸ்டுடன் இந்த சீரியலை கொண்டு சென்ற இயக்குனர், ஆதி குணசேகரனின் ரீஎன்ட்ரிக்கு பின்னர் கொஞ்சம் டவுன் ஆகி விட்டார் என ரசிகர்கள் கருதுகின்றனர்.
Vela Ramamoorthy in New Gunasekaran:
ஆதி குணசேகரன் கதாபாத்திரத்தில் நடித்து வந்த மாரி முத்து, எதிர்மறையான வேடத்தில் நடித்தாலும்... ஒரு போதும் யாரையும் அடிக்க மாட்டார். குறிப்பாக பெண்கள் மீது கை ஓங்கியது இல்லை. ஆனால் புதிய குணசேகரனாக அவதாரம் எடுத்துள்ள வேல ராம மூர்த்தி, அவரின் பாணியில் வில்லத்தனத்தை வெளிப்படுத்துவது, பலரால் ஏற்று கொள்ள முடியாத ஒன்றாக உள்ளது.
ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன் Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.
Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D
Janani Father
இப்படி பல்வேறு சர்ச்சைகளுக்கு மத்தியில் ஒளிபரப்பாகி வரும் எதிர்நீச்சல் தொடரின் இன்றிய ப்ரோமோ வெளியாகியுள்ளது. இன்றைய ப்ரோமோவில் "ஜனனியின் தந்தை திடீரென குணசேகரன் வீட்டிற்கு வருகிறார். ஜனனி என்னப்பா திடீர் என்று வந்துருக்கீங்க என கேட்க, எங்க வீட்ல ஒரு முக்கியமான நிகழ்வு அதான் என்னுடைய சம்மந்தியை அழைக்க வந்தேன் என கூறுகிறார். பின்னர் அனைவருமே ஒரு விதமான குழப்பத்தோடு அவரை பார்க்கும் காட்சி இடம்பெறுகிறது.
Gunasekaran abscond
இதைத்தொடர்ந்து போலீசார் குணசேகரன் கைது செய்து அழைத்து சென்ற நிலையில், அவரை காணவில்லை என வக்கீல் கதிர் மற்றும் ஞானத்திடம் கூறுவதால், மீண்டும் குணசேகரன் காணாமல் போய் விட்டாரா? என ரசிகர்கள் தொடர்ந்து கேள்வி எழுப்பி வருகிறார்கள்.
Visalachi Angry Speech:
மற்றொருபுறம் ஈஸ்வரி மிகவும் கோபமாக, உங்க புள்ள பேசுறது தான் மிகவும் முட்டாள் தனமா இருக்கு என கூற, 'விசாலாட்சி' என் புள்ள முட்டாள்னா அப்போ எவன்டி அறிவாளி? அந்த ஜீவானந்தமா என கேட்க அனைவருமே திகைத்து போய் பார்க்கின்றனர். எனவே இன்று என்ன நடக்கும் என்கிற எதிர்பார்ப்பு, ரசிகர்கள் மத்தியில் அதிகரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.