Aadi Amavasai : ஆடி அமாவாசைக்கு ராமேஸ்வரத்திற்கு போகனுமா.? சிறப்பு பேருந்து அறிவிப்பு- எங்கிருந்து தெரியுமா.?
ஆடி அமாவசையையொட்டி ராமேஸ்வரத்திற்கு தமிழகம் மட்டுமின்றி வெளிமாநிலங்களில் இருந்தும் ஏராளமான மக்கள் செல்வார்கள் என்பதால் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் பயணிகள் முன்பதிவு செய்யவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
ஆடி அமாவாசை-ராமேஸ்வரம்
ஆடி அமாவாசை அன்று புண்ணியஸ்தலமான இராமேஸ்வரத்திற்கு சென்று தங்களது முன்னோர்களுக்கு தர்ப்பணம் மற்றும் திதி வழங்குவதை வாடிக்கையாக கொண்டுள்ளனர். இதற்காக ராமேஸ்வரத்திற்கு ஆயிரக்கணக்கான மக்கள் செல்வார்கள். பொதுமக்களின் வசதிக்காக தமிழகத்தின் பல்வேறு ஊர்களில் இருந்து ராமேஸ்வரத்திற்கு சிறப்பு பேருந்து இயக்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
rameswaram temple
3ஆம் தேதி சிறப்பு பேருந்து
இது தொடர்பாக அரசு விரைவுப் போக்குவரத்துக் கழக மேலாண் இயக்குனர் வெளியிட்டுள்ள அறிவிப்பில், 04/08/2024 (ஞாயிற்றுக்கிழமை) ஆடி அமாவாசையை முன்னிட்டு 03/08/2024 அன்று சென்னையிலிருந்தும் மற்றும் பிற இடங்களிலிருந்தும் இராமேஸ்வரத்திற்கு சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகிறது.
முன்னோர்களுக்கு தர்ப்பணம்
தமிழகத்திலும் மற்றும் அண்டை மாநிலமான பெங்களூரிலிருந்தும் பொது மக்கள் ஆடி அமாவாசை அன்று புண்ணியஸ்தலமான இராமேஸ்வரத்திற்கு சென்று தங்களது முன்னோர்களுக்கு தர்ப்பணம் மற்றும் திதி வழங்குவதை வாடிக்கையாக கொண்டுள்ளனர். இதன்படி வருகின்ற 04/08/2024 அன்று ஆடி அமாவாசை வருவதால் இராமேஸ்வரத்திற்கு அதிகளவில் மக்கள் பயணிப்பார்கள் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.
முன் பதிவு செய்யுங்கள்
இதனடிப்படையில் வருகின்ற 03/08/2024 சனிக்கிழமை அன்று சென்னை சேலம் கோயம்புத்தூர் மற்றும் பெங்களூரு ஆகிய இடங்களிலிருந்து இராமேஸ்வரத்திற்கும் மற்றும் 04/08/2024 இராமேஸ்வரத்திலிருந்து சென்னை, சேலம், கோயம்புத்தூர் மற்றும் பெங்களூரு ஆகிய இடங்களுக்கும் கூடுதல் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகிறது. மேற்கூறிய இடங்களிருந்து www.tnstc.in மற்றும் tnstc official app மூலம் முன்பதிவு செய்து பயணிக்க வழிவகை செய்யப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது.