Aadi Amavasai 2024: ஆடி அமாவாசை; வீடு தேடி வரும் முன்னோர்கள்; எள்ளும் தண்ணீரும் கொடுத்தால் தோஷங்கள் நீங்குமா?
ஆடி அமாவாசை நாள் முன்னோர்களை வணங்க மிகச்சிறப்பான நாள். தட்சிணாயன புண்ணிய காலத்தில் வரும் ஆடி அமாவாசை பித்ரு தர்ப்பணத்துக்கு மிகவும் விசேஷமான நாளாகும். இந்த ஆண்டு ஆடி அமாவாசை வரும் ஆகஸ்ட் 4ஆம் தேதி கடைபிடிக்கப்படுகிறது. அமாவாசை நாளில் நம் முன்னோர்களை நினைத்து, எள்ளும் தண்ணீரும் கொடுப்பதன் மூலமும் அன்னதானம் செய்வதன் மூலமும் முன்னோர்களின் ஆசி பரிபூரணமாகக் கிடைக்கும். நம்முடைய தோஷங்கள் அனைத்தும் நீங்கும் என்பது நம்பிக்கை.
எள்ளும் தண்ணீரும்:
அமாவாசை என்பது மிகவும் சிறந்த நாள். அமாவாசை என்பது முழுமை பெற்ற நாள். எனவே, `நல்ல காரியங்கள் எல்லாவற்றையும் எள்ளும் தண்ணீரும் கொடுத்த பிறகே செய்யலாம்' என்று கூறுவார்கள். ஒரு மனிதன் தன் வாழ்வில் ஐந்து பேரைக் காக்க வேண்டும் என்று வள்ளுவர் திருக்குறளில் கூறியுள்ளார். தென்புலத்தார், தெய்வம், விருந்தினன், உறவினர்கள் மற்றும் தன் குடும்பம் ஆகிய ஐவரையும் காக்க வேண்டிய கடமை ஒரு மனிதனைச் சேர்கிறது. இந்த ஐவரில் முதலாவதாகத் திருவள்ளுவர் குறிப்பிடுவது தென்புலத்தார் எனப்படும் பித்ருக்களையே.
பித்ருக்கள் வழிபாடு:
பித்ரு என்பது, இறந்துபோன நமது தந்தை, தாய், உள்ளிட்ட முன்னோர்களைக் குறிக்கும். தந்தை வழி மற்றும் தாய் வழி சொந்தம் என இறந்துபோன நம்முடைய அனைத்து முன்னோர்களுமே நமது பித்ருக்கள் தான். நமது தந்தை வழியில் இருந்து போன முன்னோர்கள் அனைவரும் நமது பிதுர் வழி பித்ருக்கள் என்றும், தாய் வழியில் இறந்த முன்னோர்கள் அனைவரும் மாத்ரு வழி பித்ருக்கள் என்றும் அழைக்கப்படுகின்றனர். சுருக்கமாக சொல்வதென்றால், நமது ரத்த சொந்தத்தில் இறந்து முன்னோர்கள் அனைவருமே பித்ருக்கள் தான்.
திருவண்ணாமலை கோவிலில் அம்மனுக்கு ரேஷன் சேலை அணிவிப்பு! வைரலான போட்டோ! பக்தர்கள் அதிர்ச்சி!
அமாவாசையில் நீத்தார் கடன்:
அமாவாசை திதியன்று நாம் முறையாக பித்ருக்களை வழிபட்டு அவர்களின் பசியை போக்கவேண்டும். இல்லாவிட்டால், பசியோடும் வருத்தத்துடன் பிதுர்லோகம் சென்று விடுவார்கள். இது பித்ரு கடனாக மாறும். பித்ரு கடன் இருந்தால் நமக்கு நிறைய தடைகள் ஏற்படும். நம்மை படைத்த கடவுளால் கூட நமக்கு கருணை காட்ட முடியாது. அவ்வளவு வலிமையானவர்கள் நம்முடைய பித்ருக்கள் தான்.
பித்ரு தோஷம்:
ஒருவருடைய ஜாதகத்தில் உள்ள தோஷத்திலேயே மிகக் கடுமையான தோஷமே பித்ரு தோஷம் தான். பித்ரு தோஷம் உள்ளவர்களின் வாழ்க்கையில் படிப்பு முதல், வேலை, தாம்பத்ய வாழ்க்கை, குழந்தை என இவற்றில் ஏதாவது ஒன்றில் தீராத பிரச்சனையும் சிக்கலும் இருந்து வரும். நாம் முறையாக பித்ரு கடன் செய்து அவர்களின் பசியை போக்கி அவர்களை சாந்தப்படுத்த வேண்டும்.
தர்ப்பணம் தருவதன் அவசியம்:
பித்ரு தோஷத்தை நிவர்த்தி செய்யாமல் நாம் செய்யும் எந்த ஒரு பூஜையோ பரிகாரமும் வேலைக்கு உதவாது, பலனும் தராது. ஆகவே தான், நாம் முதலில் பிதுர் தோஷத்தை போக்கிட வேண்டியது அவசியமாகும். பித்ரு தோஷம் நீங்கினால்தான் தடைகள் நீங்கி வீட்டில் எந்த நல்லதும் நடைபெறும். அமாவாசை நாட்களில் நம்மை தேடி வரும் நமது முன்னோர்களுக்கு நாம் முறையாக செய்யும் வழிபாடு தான் பித்ருகடன் அல்லது தர்ப்பணம் என கூறப்படுகிறது.
Sopna Sasthiram: ஆடி மாதத்தில் கனவில் வரும் முன்னோர்கள் உணர்த்தும் உண்மை என்ன? கனவு சாஸ்திர பலன்கள்!!
பசியை போக்குவோம்:
நம் மீதும் நம்முடைய சந்ததிகள் மீதும் அதிக அக்கறை கொண்ட நமது பித்ருக்களை நாம் வழிபாடு செய்து அவரிகளின் பசியைப் போக்க வேண்டியது நமது கடமையாகும். பசியால் வாடும் பித்ருக்கள் ஒவ்வொரு அமாவாசை திதியிலும் நமது வீட்டில் உள்ள நீர் நிலைகளில் வந்து தங்குவார்கள். சிலர் காக வடிவத்திலும் நம்மை தேடி வருவார்கள். ஆடி அமாவாசை தினமான இந்த நாளில் நாம் முன்னோர்களுக்கு உணவிட்டு எள்ளும் தண்ணீரும் இறைத்து வணங்குவதன் மூலம் முன்னோர்களின் ஆசி கிடைக்கும்.