- Home
- குற்றம்
- ஐயய்யோ..! கேட்கவே அருவருப்பா இருக்கே..! பெற்ற தாயையே பா**யல் பலாத்காரம் செய்த காமக் கொடூர மகன்..!
ஐயய்யோ..! கேட்கவே அருவருப்பா இருக்கே..! பெற்ற தாயையே பா**யல் பலாத்காரம் செய்த காமக் கொடூர மகன்..!
குற்றம் சாட்டப்பட்ட இளைஞர் தனது தாயுடன் தனியாகப் பேச விரும்புவதாக குடும்பத்தினரிடம் தெரிவித்துள்ளார். அதன்பிறகு அவர் தனது தாயை அறையில் அடைத்து வைத்து பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். அப்போது தன் தாய் என்று கெஞ்சி கதறியபோதும்..

தனது தாயை இரண்டு முறை பாலியல் பலாத்காரம் செய்ததற்காக டெல்லி போலீசார் அந்த இளைஞனை கைது செய்துள்ளனர். தனது மகன் தனது புர்காவை கழற்றுமாறு கட்டாயப்படுத்தியதாகவும், அவன் தன்னை ஒரு அறையில் அடைத்து வைத்து அடித்தார். வலுக்கட்டாயமாக பாலியல் பலாத்காரம் செய்தார்’’ என பாதிக்கப்பட்ட பெண் போலீசாரிடம் தெரிவித்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து குற்றவாளியை கைது செய்துள்ளனர். இது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
மத்திய டெல்லியின், ஹவுஸ் காசி பகுதியில் உள்ள அந்த இளைஞர், புனித யாத்திரை முடிந்து சவுதி அரேபியாவில் இருந்து திரும்பிய தனது தாயை 'நடத்தையற்றவர்' என்று குற்றம் சாட்டி , பாலியல் பலாத்காரம் செய்ததாகக் கூறப்படுகிறது. இதுகுறித்து காவல்துறையினர் கூறுகையில், ‘‘பாதிக்கப்பட்ட அந்தப் பெண்மணி, தனது 25 வயது மகளுடன் ஹவுஸ் காசி காவல் நிலையத்திற்கு வந்து தனது மகன் இந்த மாதம் பல சந்தர்ப்பங்களில் தன்னைத் தாக்கி பாலியல் துஷ்பிரயோகம் செய்ததாக புகார் அளித்தார்’’ எனக் கூறினர்.
மேலும் போலீஸார் கூறுகையில், 'அந்தப் பெண் ஜூலை 25 அன்று தனது 72 வயது கணவர், மகளுடன் சவுதி அரேபியாவுக்குச் சென்றனர். பயணத்தின் போது, அவரது மகன் தனது கணவரின் தொலைபேசியில் அழைத்து, தன் தாய் 'நடத்தையற்றவர்' என்று குற்றம் சாட்டியுள்ளார். அவரது தந்தை உடனடியாக டெல்லிக்குத் திரும்பி வந்து விவாகரத்து செய்ய வேண்டும் என்று வற்புறுத்தி உள்ளார். இந்திய நீதிச் சட்டத்தின் தொடர்புடைய பிரிவின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டு விசாரணை தொடங்கப்பட்டுள்ளது.
ஆகஸ்ட் 11 ஆம் தேதி, குற்றம் சாட்டப்பட்ட இளைஞர் தனது தாயுடன் தனியாகப் பேச விரும்புவதாக குடும்பத்தினரிடம் தெரிவித்துள்ளார். அதன்பிறகு அவர் தனது தாயை அறையில் அடைத்து வைத்து பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். அப்போது தன் தாய் என்று கெஞ்சி கதறியபோதும், அவருடைய கடந்தகால நடத்தைக்கான தண்டனை இது’’ எனக்கூறி அந்த இளைஞன் மிருகத்தனமாக நடந்து கொண்டுள்ளார். குற்றம் சாட்டப்பட்ட இளைஞர் தனது தாயிடம் செய்தது அருவருப்பானது. அந்தப் பெண் மிகவும் பயந்து போனார். அவர் இந்த சம்பவம் நடந்த பிறகு முதலில் சென்று தனது மூத்த மகளின் வீட்டிற்கு சென்று தங்கியுள்ளார். அங்கும் நிலைமை மோசமடைந்தபோது தனது வீட்டிற்கு திரும்பி வந்துள்ளார்.
ஆகஸ்ட் 14 ஆம் தேதி, குற்றம் சாட்ட அந்த இளைஞர், தனது தாயார் தூங்கிக் கொண்டிருந்த அறைக்குள் நுழைந்து மீண்டும் பாலியல் பலாத்காரம் செய்ததாகக் கூறப்படுகிறது. அந்த இளைஞர் தனது தாயை பாலியல் பலாத்காரம் செய்தது இது இரண்டாவது முறை. மறுநாள், அந்தப் பெண் தனது இளைய மகளிடம் எல்லாவற்றையும் கூறி அழுதுள்ளார். இதனை அடுத்தே அவரது மகள் காவல்துறையில் புகாரளிக்குமாறு கேட்டுக் கொண்டுள்ளார். காவல்துறையினர் உடனடியாக நடவடிக்கை எடுத்தனர். குற்றம் சாட்டப்பட்டவர் கைது செய்யப்பட்டுள்ளார். காவல்துறையினர் இந்த வழக்கை விசாரித்து வருகின்றனர்.