- Home
- Politics
- 'குப்பையை அள்ளுபவனே அள்ளட்டும்..! பணி நிரந்தரம் செய்யக் கூடாது..! திருமாவளவனின் முரட்டு முட்டு..!
'குப்பையை அள்ளுபவனே அள்ளட்டும்..! பணி நிரந்தரம் செய்யக் கூடாது..! திருமாவளவனின் முரட்டு முட்டு..!
ஏன் நிரந்தரம் செய்யாமல், பணி பாதுகாப்பு செய்யாமல் இருக்கிறீர்கள் என்று கேட்பதுதான் ஒரு தொழிலாளர் மனநிலை. நீங்கள் பேசுவது திமுகவிற்கான முட்டு. இந்த ப் பாவச் செயலை உங்கள் பிறந்த நாளிலிருந்து தொடங்காதீர்கள். அது நல்லதல்ல.

தூய்மைப் பணியாளர்கள் பணி நிரந்தரம் கேட்டு 13 நாட்களாக கடும் போராட்டம் நடத்தி வந்தனர். அவர்களை காவல்துறையினர் வலுக்கட்டாயமாக வெளியேற்றினர். இது திமுக அரசின் மீது கடும் அதிருப்தியை ஏற்படுத்தியது. இந்த விவகாரம் குறித்து பேசிய திருமாவளவன், ‘‘தூய்மை பணியாளர்களை பணி நிரந்தரம் செய்யக்கூடாது’’ எனப் பேசியிருப்பது விவாதத்தைக் கிளப்பி இருக்கிறது.
விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவனின் பிறந்த நாளை ஒவ்வொரு ஆண்டும், தமிழர் எழுச்சி நாளாக அக்கட்சியினர் கொண்டாடி வருகின்றனர். சென்னை, காமராஜர் அரங்கில் நடைபெற்றது.அங்கு பேசிய திருமாவளவன், "தூய்மைப் பணியாளர்கள் விவகாரத்தில் திமுக அரசை எதிர்த்து போராடவில்லை என நம்மை விமர்சிக்கிறார்கள். ஆனால், நான் போராட்ட களத்திற்கு சென்று, தொழிலாளர்களின் கோரிக்கைகள் குறித்து முதல்வரை சந்தித்து அவருடைய கவனத்திற்கு கொண்டு சென்றிருந்தேன்.
13 நாட்களும் அமைச்சர்களுடனும், போராட்டக்காரர்களுடனும் நான் பேசிக்கொண்டிருந்தேன். இந்த விஷயத்தில் போராட்டக்காரர்களின் கோரிக்களை ஆதரிக்கிற அதே நேரத்தில், குப்பை அள்ளும் தொழிலை நிரந்தரப்படுத்தி, காலம் முழுவதும் நீங்கள் அதையே செய்துக்கொண்டு இருங்கள் என்று சொல்வது நியாயம் அல்ல. குப்பை அள்ளும் பணியில் இருந்து அவர்களை மீட்க வேண்டும் என்பதே நம்முடைய கோரிக்கை. ஆனால், அவர்களுக்கான பணி நிரந்தரம் என்பது, 'குப்பையை அள்ளுபவர்களே அள்ளட்டும்' என்கிற கருத்திற்கு வலு சேர்ப்பதாக இருக்கிறது. ஆக பணி நிரந்தரம் செய்யக்கூடாது என்பதுதான் சரியான கருத்து. அதிலிருந்து அவர்களை மீட்க வேண்டும் என்பதுதான் சமூகநீதி" என்று கூறியிருக்கிறார்.
இதற்கு கடும் எதிர்ப்புகள் கிளம்பி இருக்கிறது. ‘‘அந்த சமூகத்தைத்தான் மீட்டெடுக்கணுமே தவிர, ஒரு தொழில் செய்பவனை, அவன் எதிர்காலத்தை தவிர்த்துக் கொண்டு, அவனுக்கு வரும் வருமானம் நிரந்தரமாக இருக்கும் பட்சத்தில், அதனை ஏன் நிரந்தரம் செய்யாமல், பணி பாதுகாப்பு செய்யாமல் இருக்கிறீர்கள் என்று கேட்பதுதான் ஒரு தொழிலாளர் மனநிலை. நீங்கள் பேசுவது திமுகவிற்கான முட்டு. இந்த ப் பாவச் செயலை உங்கள் பிறந்த நாளிலிருந்து தொடங்காதீர்கள். அது நல்லதல்ல.
அரசு வேலை அவர்களுக்கு தானே தவிர, அவர்கள் வாரிசுகளுக்கு அல்ல. அரசு வேலையால் அவர்கள் பொருளாதரம் மேம்படும். அதன்மூலம் அவர்கள் வாரிசுகள் நல்ல நிலைமைக்கு வருவார்கள்.
திமுகவின் பாவமூட்டையை நீங்கள் தூக்கிசுமக்கிறீர்கள். என்ன மாதிரியான வாதம்? பணி நிரந்தரம் என்றால், குல தொழில் என நினைத்து கொண்டாரா? தனியாருக்கு போய்ட்டால், அவர்கள் என்ன அடுத்த 3 வருடத்தில் , அனைத்து பணியாளர்களையும், படிக்க வைத்து வேறு உயர் சம்பளத்தில் பதவி கொடுப்போம் என வாக்குறுதி கொடுத்து இருக்கிறார்களா? தலைமுறை, தலைமுறையாக நீங்கள் குப்பை அள்ளுங்கள் என்று யாருமே சொல்லவே இல்லை. செய்யும் வேலைக்கு ஏற்ற கூலியும், சலுகையும்தான் கோரிக்கை. குப்பை அள்ளும் வேலைக்கு நவீன மயமாக்கும் தொழில்நுட்டப்பதுக்கு அரசு எவ்வள்வு முனைப்பு கட்டுகிறது? அதை கேள்வி எழுப்புங்கள்.
திமுக கூட்டணியில் இருப்பதனாலேயே இது போல் பேசித்தான் ஆக வேண்டும் என்பதுதான் அவல நிலை! திமுக கூட்டணி மட்டும் நிரந்தரமாக இருக்க வேண்டுமா? தொழிலாளர்களின் போராட்டம் குப்பை அள்ளுபவர்களின் வேலையை நிரந்தரம் செய்ய கேட்டு தானே தவிர, குப்பை அள்ளும் தொழிலை அல்ல. தூய்மை பணியாளர்கள் நிரந்தர வேலை அவர்களின் குடும்ப நிலையை உயர்த்தும், அவர்களின் குழந்தைகளின் வாழ்க்கையை மேம்படுத்தும். கற்பிக்க வேண்டியது, நீங்கள் செய்யும் தொழிலை உங்கள் பிள்ளைகளையும் செய்யவிடாதீர்கள் என்பதாக இருக்கவேண்டுமே தவிர, பணிநிரந்தரம் செய்ய கூடாது என்பதாக இருக்க கூடாது. கருத்து தவறு, அல்லது திமுகவிற்கு முரட்டு முட்டு’’ என பலரும் கடும் எதிர்ப்புத் தெரிவித்து வருகின்றனர்.
