- Home
- குற்றம்
- கல்யாணம் பண்ணாலும் உன்னை என்னால் மறக்க முடியல.. லாட்ஜில் ரூம் போட்ட ஜோடிகள்.. இறுதியில் காத்திருந்த அதிர்ச்சி
கல்யாணம் பண்ணாலும் உன்னை என்னால் மறக்க முடியல.. லாட்ஜில் ரூம் போட்ட ஜோடிகள்.. இறுதியில் காத்திருந்த அதிர்ச்சி
திருவனந்தபுரம் அருகே விதுரா கிராமத்தில் உள்ள லாட்ஜ் ஒன்றில், திருமணமான கள்ளக்காதல் ஜோடி தற்கொலை செய்து கொண்டது. வீட்டை விட்டு வெளியேறிய சுபின் மற்றும் மஞ்சு ஆகிய இருவரும், அறையில் சடலமாக மீட்கப்பட்டனர். இந்த சம்பவம் குறித்து போலீசார் தீவிர விசாரணை.

கேரள மாநிலம் திருவனந்தபுரம் அடுத்துள்ள விதுரா கிராமம் உள்ளது. இந்த கிராமம் இயற்கை அழகு நிறைந்தது. அமைதியான சூழ்நிலை, பசுமையான மலைகள் குளு குளு காற்று நிலவுவதால் சுற்றுலா பயணிகள் அதிகளவில் வந்து செல்கின்றனர். சுற்றுலா பயணிகள் தங்குதற்காக அதிகளவில் லாட்ஜ்கள், காட்டேஜ்கள் உள்ளன. இங்குள்ள விடுதி ஒன்றில் கடந்த சில நாட்களுக்கு முன்பு வாலிபர் மற்றும் இளம்பெண் ஆகிய இருவரும் ரூம் எடுத்து தங்கியுள்ளனர்.
இந்நிலையில் நீண்ட நேரமாகியும் இவர்களது ரூம் திறக்கப்படவில்லை. இதனால் சந்தேகம் அடைந்த ஊழியர் ரூம் அறையை நீண்ட தட்டியும் திறக்காததால் அதிர்ச்சி அடைந்த ஊழியர்கள் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். உடனே சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் அறையின் கதவை உடைத்து பார்த்தபோது போலீசாருக்கும், ஊழியர்களுக்கும் அதிர்ச்சி காத்திருந்தது. அதாவது இருவரும் சடலமாக கிடந்தனர். இதனையடுத்து இருவரின் உடலை கைப்பற்றிய போலீசார் பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீசார் தற்கொலை செய்து கொண்டவர்கள் யார் என்பது குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டனர்.
அதில் இறந்து கிடந்த வாலிபர் மறைமுட்டம் பகுதியை சேர்ந்த சுபின் (28). இளம்பெண் ஆரியங்கோடு பகுதியை சேர்ந்த மஞ்சு(31) என்பதும் தெரியவந்தது. இருவரும் காதலர்கள் என்பதும், வெவ்வேறு நபர்களை திருமணம் செய்த பிறகும் தொடர்ந்து பழகி வந்ததும் தெரியவந்தது. இருவரும் ஒருவரையோருவர் மறக்க முடியாமல் இருவரும் அவ்வபோது தனிமையில் சந்தித்து பேசி வந்தனர். இந்த விவகாரம் இரு வீட்டாருக்கும் தெரியவந்தது. இதனால் இருவரும் வீட்டை வீட்டு வெளியேறினர். இதுதொடர்பாக இருவரின் குடும்பத்தினரும் காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தனர்.
அதன்பேரில் மறைமுட்டம் மற்றும் ஆரியன்கோடு போலீசார் வழக்குப்பதிவு செய்து இருவரையும் தேடி வந்தனர். இந்நிலையில் இருவரும் வீட்டை விட்டு வெளியேறி லாட்ஜில் தற்கொலை செய்து கொண்டது விசாரணையில் தெரியவந்தது.

