MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • குற்றம்
  • இருட்டு ரூம்.. 3 நாட்கள் சித்ரவதை.. கணவன் - மாமியார் சேர்ந்து செய்த கொடுமை.!!

இருட்டு ரூம்.. 3 நாட்கள் சித்ரவதை.. கணவன் - மாமியார் சேர்ந்து செய்த கொடுமை.!!

கணவனும் மாமியாரும் சேர்ந்து மனைவிக்கு டார்ச்சர் செய்த சம்பவம் வெளிச்சத்துக்கு வந்துள்ளது.

1 Min read
Author : Raghupati R
Published : Mar 24 2023, 12:20 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
15

அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டம் அருகே உள்ள விழப்பள்ளம் கிராமத்தை சேர்ந்தவர் பரமசிவம் மகள் சத்யா(வயது 26). இவரது கணவர் விஜயபாண்டியன்(30). இவர்களுக்கு திருமணமாகி 8 ஆண்டுகள் ஆகிறது.

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred
25

இவர்களுக்கு 7 வயதில் மோனிகா என்ற பெண் குழந்தையும், 5 வயதில் மிருதேஸ்வரன் என்ற ஆண் குழந்தையும் உள்ளது. இந்நிலையில் கணவர் விஜயபாண்டியனும், மாமியார் மனோரஞ்சிதமும் சத்யாவை கொடுமைப்படுத்தியதாக கூறப்படுகிறது.

35

இது சம்பந்தமாக ஜெயங்கொண்டம் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் சத்யா கொடுத்த புகாரின் பேரில், கடந்த 10 ஆம் தேதி இருவரையும் அழைத்து போலீசார் பேச்சுவார்த்தை நடத்தி அனுப்பி வைத்தனர்.

இதையும் படிங்க..வந்தாச்சு சென்னை - கோவை வந்தே பாரத் ரயில்.. எங்கெல்லாம் நிற்கும் தெரியுமா.? முழு விபரம்

45

இதனால் ஆத்திரமடைந்த சத்யாவின் கணவர் விஜயபாண்டியன், அவரது தாயார் மனோரஞ்சிதம் ஆகியோர் சத்யாவை கடந்த 3 நாட்களாக தனிமையில் அடைத்து வைத்து சித்ரவதை செய்துள்ளனர். இதுகுறித்து சத்யா ஜெயங்கொண்டம் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார்.

55

இப்புகாரின் பேரில் ஜெயங்கொண்டம் அனைத்து மகளிர் போலீஸ் இன்ஸ்பெக்டர் சுமதி வழக்குப்பதிவு செய்து சத்யாவின் கணவர் விஜயபாண்டியனை கைது செய்து அவருக்கு உடந்தையாக இருந்த தாயார் மனோரஞ்சிதம், தாய்மாமன் பரமசிவம், தர்மலிங்கம் உள்ளிட்ட 4 பேரையும் தேடி வருகின்றனர்.

இதையும் படிங்க..எனக்கு பாதுகாப்பு வேணும், இல்லைனா.. அதிமுக எம்.பி. சி.வி சண்முகம் கோர்ட்டில் மனு - வெளியான பகீர் தகவல்

About the Author

RR
Raghupati R
இவர் முதுகலை தமிழ் பட்டதாரி. செய்தி எழுதுவதில் 6 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் உள்ளவர். இவர் கடந்த 3 ஆண்டுகளாக ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா பற்றி நன்கு அறிந்தவர் மற்றும் அதில் அனுபவமும் பெற்றவர். வணிகம், டெக், ஆட்டோமொபைல் மற்றும் இந்தியா செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
குற்றம்
கணவன்
மனைவி

Latest Videos
Recommended Stories
Recommended image1
ஏசி வாங்கி தராத காதல் கணவர்.! உயிரை மாய்துகொண்ட 25 வயது இளம்பெண்.! திருவள்ளூரில் நடந்த அதிர்ச்சி சம்பவம்.!
Recommended image2
அப்பா.. என்னை காப்பாத்து.. தந்தையிடம் கதறிய 33 வயது சத்யா.. வெறியாட்டம் ஆடிய சக்திவேல்.. யார் இவர்?
Recommended image3
இரண்டு குழந்தைகளின் தாயான 26 வயது அமிர்தா.. 32 வயது சித்தேஷ்.. 24 மணி நேரத்தில் சிக்கியது எப்படி?
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved