வந்தாச்சு சென்னை - கோவை வந்தே பாரத் ரயில்.. எங்கெல்லாம் நிற்கும் தெரியுமா.? முழு விபரம்
சென்னை - கோவை வந்தே பாரத் ரயில் 5 ரயில் நிலையங்களில் நின்று செல்லும் என்றும் தகவல் வெளியாகி உள்ளது.
நாடு முழுக்க பல்வேறு ரயில் தடங்களில் வந்தே பாரத் ரயில்களை இயக்க இந்திய ரயில்வே திட்டமிட்டுள்ளது. இதற்கு ஏற்ற வழித்தடங்கள் கண்டறியப்பட்டு வந்தே பாரத் ரயில்கள் இயக்கப்பட்டு வருகிறது.
சென்னை முதல் கோவை வரை வந்தே வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயில் இயக்கப்பட உள்ளது. இதனை வரும் ஏப்ரல் 8 ஆம் தேதி பிரதமர் நரேந்திர மோடி தொடங்கி வைக்க உள்ளார். ஏற்கனவே சென்னை மைசூர் இடையே வந்தே பாரத் உள்ள நிலையில், இது இரண்டாவது வந்தே பாரத் ரயிலாக இருக்கும்.
இதையும் படிங்க..பாலியல் தொல்லை: வசமாக சிக்கிய அடுத்த பாதிரியார்.. தென்காசியில் அதிர்ச்சி சம்பவம்
வந்தே பாரத் ரயில் சென்னையில் இருந்து கோவைக்கு 6 முதல் 6.30 மணி நேரத்தில் சென்றடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த ரயிலில் தானியங்கி கதவுகள், ஏ. சி, வைஃபை, ஜிபிஎஸ், ஆடியோ, வீடியோ தகவல் வசதிகள், பயோ-கழிவறைகள் என பல நவீன வசதிகள் உள்ளது.
சென்னையில் உள்ள ஐசிஎஃப் தொழிற்சாலையில் இந்த வகையான ரயில் பெட்டிகள் தயார் செய்யப்பட்டன என்பது குறிப்பிடத்தக்க வேண்டிய விஷயமாகும். இந்தியா முழுவதும் தற்போது 10 வந்தே பாரத் ரயில்கள் இயக்கப்பட்டுவருகிறது. இதன் முதல் சேவை டெல்லி - வாரணாசி வழித்தடத்தில் தொடங்கப்பட்டது.
வந்தே பாரத் ரயில் சென்னை சென்ட்ரல், காட்பாடி, சேலம், திருப்பூர், கோவை உள்ளிட்ட 5 ரயில் நிலையங்களில் நின்று செல்லும் என்று கூறப்படுகிறது. இந்த ரயிலின் வேகம் மணிக்கு 80 முதல் 90 கி. மீட்ட வரை இருக்க வாய்ப்பு உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்த செய்தி பொதுமக்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
இதையும் படிங்க..இ சேவை மையம் தொடங்கி ஈசியா சம்பாதிக்கலாம்.. எப்படி தெரியுமா? முழு விபரம் உள்ளே !!
இதையும் படிங்க..சாட் ஜிபிடியால் வேலை இழப்பு அபாயம் ஏற்படுமா.? பதறும் இளைஞர்களுக்கு குட் நியூஸ் சொன்ன இந்திய நிறுவனம்