இ சேவை மையம் தொடங்கி ஈசியா சம்பாதிக்கலாம்.. எப்படி தெரியுமா? முழு விபரம் உள்ளே !!

தமிழக அரசின் இ சேவை மையம் தொடங்கி எவ்வாறு சம்பாதிப்பது என்பதை பற்றி இங்கு காண்போம்.

Do you know how Start an E sevai maiyam Full details here

தமிழ்நாடு மின் ஆளுமை முகமை, அரசு இ-சேவை மையங்கள் மற்றும் பொது மக்களுக்கான பொது இணையதளம் மூலமாக பல்வேறு சேவைகளை வழங்கி வருகிறது. 

இ சேவை மையங்கள் மூலமாக வருவாய்த் துறையின் கீழ் வருமானச் சான்றிதழ், சாதிச் சான்றிதழ் உட்பட 40 சான்றிதழ்கள் வழங்கப்படுகின்றன. அதேபோல சமூக நலன், மகளிர் உரிமைத் துறை உள்ளிட்ட 22 துறைகளின் 130-க்கும் மேற்பட்ட சேவைகள் வழங்கப்படுகின்றன. அனைவருக்கும் இ சேவை மையம் திட்டத்தின் கீழ் இ-சேவை மையம் அமைத்து நடத்த ஆர்வமுள்ள நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன பெரம்பலூர் மாவட்ட ஆட்சித்தலைவர் கற்பகம் தெரிவித்துள்ளார்.

Do you know how Start an E sevai maiyam Full details here

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், தமிழ்நாடு மின் ஆளுமை முகமையானது, “அனைவருக்கும் இ-சேவை மையம்” திட்டத்தின் மூலம் அனைத்து குடிமக்களும் இ சேவை மையங்கள் தொடங்கி பொதுமக்களுக்கான அரசின் இணையவழி சேவைகளை அவர்களின் இருப்பிடத்திற்கு அருகாமையிலேயே வழங்குவதற்கான வழிவகை செய்யப்பட்டுள்ளது.

எனவே, பெரம்பலூர் மாவட்டத்தில் “அனைவருக்கும் இ-சேவை மையம்” திட்டத்தின் கீழ் இ-சேவை மையம் அமைத்து நடத்த ஆர்வமுள்ள நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இணைய முறையில் மட்டுமே விண்ணப்பங்களை பதிவு செய்ய இயலும். இத்திட்டத்தை பற்றிய கூடுதல் தகவல் பெறவும், ஆன்லைனில் விண்ணப்பிக்கவும் www. tnesevai. tn. gov. in/ tnega. tn. gov. in/ என்ற இணையதள முகவரிகளை பயன்படுத்தவும்.

இதையும் படிங்க..பொதுமக்கள் கவனத்திற்கு.! உகாதியை முன்னிட்டு வங்கிகளுக்கு விடுமுறை - முழு விபரம் இதோ

Do you know how Start an E sevai maiyam Full details here

விண்ணப்பங்களை 15. 03. 2023 முதல் 14. 04. 2023 8 pm வரை மட்டுமே பதிவு செய்ய இயலும். கிராமப்புறங்களில் இ சேவை மையம் செயல்படுத்துவதற்கான விண்ணப்பக் கட்டணம் ரூ. 3, 000-ஆகும் மற்றும் நகரப்புறத்திற்கான கட்டணம் ரூ. 6, 000- ஆகும். இவ்விண்ணப்பக் கட்டணத்தை ஆன்லைன் முறையில் மட்டுமே செலுத்த வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

விண்ணப்பதாரருக்குறிய பயனர் பெயர் (User name) மற்றும் கடவுச்சொல் (Password) ஆனது விண்ணப்பத்தில் கொடுக்கப்பட்ட தொலைபேசி எண் மற்றும் மின்னஞ்சல் முகவரி வாயிலாக வழங்கப்படும் என பெரம்பலூர் மாவட்ட ஆட்சித்தலைவர் கற்பகம் தெரிவித்துள்ளார். இதேபோல அறிவிப்பை செங்கல்பட்டு, ஈரோடு, கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சித்தலைவர்கள் அனைவரும் வெளியிட்டுள்ளனர். ஆர்வமுள்ளவர்கள் விண்ணப்பித்து பயன்பெற வேண்டும் என்று அரசுத்தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க..ரேஷன் அட்டைதாரர்களுக்கு தலா 2 கிலோ கேழ்வரகு - வேளாண் பட்ஜெட்டில் அறிவிப்பு

இதையும் படிங்க..சாட் ஜிபிடியால் வேலை இழப்பு அபாயம் ஏற்படுமா.? பதறும் இளைஞர்களுக்கு குட் நியூஸ் சொன்ன இந்திய நிறுவனம்

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios