MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Business
  • கோவை–பெங்களூரு ரயிலில் முக்கிய மாற்றம்.. மார்ச் 15 முதல் அமல்.. வந்தே பாரத் பயணிகள் கவனத்திற்கு

கோவை–பெங்களூரு ரயிலில் முக்கிய மாற்றம்.. மார்ச் 15 முதல் அமல்.. வந்தே பாரத் பயணிகள் கவனத்திற்கு

கோவை – பெங்களூரு வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயிலின் பயண நேரத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. மார்ச் 15, 2026 முதல் மாற்றியமைக்கப்படுவதாக தென்மேற்கு ரயில்வே அறிவித்துள்ளது. மற்ற நிலையங்களின் நேரங்களில் எந்த மாற்றமும் இல்லை.

2 Min read
Author : Raghupati R
Published : Mar 10 2026, 09:02 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
15
கோவை–பெங்களூரு வந்தே பாரத் ரயில்
Image Credit : wikimedia

கோவை–பெங்களூரு வந்தே பாரத் ரயில்

இந்தியாவில் ரயில் போக்குவரத்து மிகவும் முக்கியமான பொதுப் போக்குவரத்து சேவையாக உள்ளது. தினமும் சுமார் 13,000 ரயில்கள் இயக்கப்படுகின்றன. இதில் சராசரியாக 4 கோடி மக்கள் பயணம் செய்கிறார்கள். சாதாரண பயணிகள் ரயில்கள், விரைவு ரயில்கள், வந்தே பாரத் ரயில்கள் மற்றும் சரக்கு ரயில்கள் என பல்வேறு வகை சேவைகள் மூலம் இந்திய ரயில்வே மக்களுக்கு பயண வசதி வழங்கப்படுகிறது.

25
ரயில்வே அறிவிப்பு
Image Credit : Indan Railways/X

ரயில்வே அறிவிப்பு

பேருந்து அல்லது கார் பயணத்துடன் ஒப்பிடும்போது, ​​ரயில் பயணம் பலருக்கும் சௌகரியமானதாகக் கருதப்படுகிறது. பாதுகாப்பு, வசதி மற்றும் குறைந்த செலவு ஆகிய காரணங்களால் பெரும்பாலானோர் ரயில் சேவையைத் தேர்வு செய்கிறார்கள். அதனால் பயணிகளின் வசதியை அதிகரிக்கும் நோக்கில் இந்திய ரயில்வே தொடர்ந்து புதிய சேவைகள் மற்றும் மேம்படுத்தப்பட்ட ரயில்களை அறிமுகப்படுத்தி வருகிறது.

Related Articles

Related image1
உஷார்.. ரயில் டிக்கெட் விதிகளில் மாற்றம்.. ரயில்வே அதிரடி முடிவு
Related image2
இந்தியாவின் 5 மர்மமான‌ ரயில் நிலையங்கள்.. இரவில் யாரும் எட்டிக்கூட பார்க்க மாட்டாங்களாம்!
35
வந்தே பாரத் ரயில் பயணிகள் கவனம்
Image Credit : Indian Railways

வந்தே பாரத் ரயில் பயணிகள் கவனம்

அந்த வகையில் கோவை – பெங்களூரு வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் (ரயில் எண் 20642/20641) முக்கிய சேவையாக இருந்து வருகிறது. 377 கிலோமீட்டர் தூரத்தை சுமார் 6 மணி 20 நிமிடங்களில் கடக்கும் இந்த அதிவேக ரயில், திருப்பூர், ஈரோடு, சேலம், தருமபுரி மற்றும் ஓசூர் ஆகிய ஐந்து நிலையங்களில் நின்று செல்கிறது. வியாழக்கிழமை தவிர வாரத்தின் மற்ற அனைத்து நாட்களிலும் இந்த ரயில் இயக்கப்படுகிறது.

45
கோவை – பெங்களூரு வழித்தடம்
Image Credit : Asianet News

கோவை – பெங்களூரு வழித்தடம்

கோவை – பெங்களூரு வழித்தடத்தில் இயங்கும் பாரத் எக்ஸ்பிரஸ் ரயிலின் பயண நேரத்தில் சிறிய மாற்றம் அறிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக ஓசூர் நிலையத்தில் ரயில் வரும் நேரம் மாற்றப்பட்டுள்ளது, அந்த பகுதி பயணிகள் கவனமாக இருக்க வேண்டும் என்று தென்மேற்கு ரயில்வே அறிவித்துள்ளது. இந்த புதிய நேர அட்டவணை மார்ச் 15, 2026 முதல் அமலுக்கு வருகிறது.

55
வந்தே பாரத் ரயில் கட்டணம்
Image Credit : Asianet News

வந்தே பாரத் ரயில் கட்டணம்

கோவையிலிருந்து காலை 7.25 மணிக்கு புறப்படும் ரயில், பெங்களூரு கேண்ட்டை மதியம் 1.45 மணிக்கு சென்றடைகிறது. தற்போது ஓசூர் நிலையத்தில் இந்த ரயில் வருகை நேரம் மாற்றப்பட்டுள்ளது. இதுவரை மதியம் 12.03 மணிக்கு வந்த இந்த ரயில், மார்ச் 15 முதல் மதியம் 12.13 மணிக்கு ஓசூர் சென்றடையும். புறப்படும் நேரமும் 12.05 மணியிலிருந்து 12.15 மணியாக மாற்றப்பட்டுள்ளது. மற்ற நிலையங்களின் நேரங்களில் எந்த மாற்றமும் இல்லை. கோவை - பெங்களூரு இடையே ஏசி சேர் கார் கட்டணம் ரூ.1,260 ஆகவும், எக்ஸிகியூட்டிவ் சேர் கார் கட்டணம் ரூ.2,190 ஆகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

வணிகம் (Business Ideas in Tamil), வங்கிகள் (Banking News), நிதி, இந்திய பொருளாதாரம் , உலக சந்தை, பங்கு சந்தை, முதலீடு உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் மற்றும் சமீபத்திய நிதி செய்திகள் அனைத்தையும் ஏஷ்யாநெட் தமிழ் நியூஸில் படிக்கலாம்.

About the Author

RR
Raghupati R
இவர் முதுகலை தமிழ் பட்டதாரி. செய்தி எழுதுவதில் 6 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் உள்ளவர். இவர் கடந்த 3 ஆண்டுகளாக ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா பற்றி நன்கு அறிந்தவர் மற்றும் அதில் அனுபவமும் பெற்றவர். வணிகம், டெக், ஆட்டோமொபைல் மற்றும் இந்தியா செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
இந்திய இரயில்வே
ரயில்
கோயம்புத்தூர்
பெங்களூரு
தொடர்வண்டிப் போக்குவரத்து

Latest Videos
Recommended Stories
Recommended image1
UPI, இன்டர்நெட் பேங்கிங்கில் பணத்தை இழந்துட்டீங்களா..? இனி ரீபண்ட் கண்பார்ம்..
Recommended image2
இந்தியாவின் 5 மர்மமான‌ ரயில் நிலையங்கள்.. இரவில் யாரும் எட்டிக்கூட பார்க்க மாட்டாங்களாம்!
Recommended image3
இனி கழுதை வளர்த்தே கோடீஸ்வரராகலாம்.! ரூ.50 லட்சம் வரை மானியம்.! எப்படி விண்ணப்பிப்பது? முழு விவரம் இதோ.!
Related Stories
Recommended image1
உஷார்.. ரயில் டிக்கெட் விதிகளில் மாற்றம்.. ரயில்வே அதிரடி முடிவு
Recommended image2
இந்தியாவின் 5 மர்மமான‌ ரயில் நிலையங்கள்.. இரவில் யாரும் எட்டிக்கூட பார்க்க மாட்டாங்களாம்!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved