கதறியும் விடாமல் கோவை கல்லூரி மாணவியை சீரழித்த கொடூரர்களின் போட்டோ வெளியானது!
கோவை விமான நிலையம் அருகே கல்லூரி மாணவி கூட்டு பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட வழக்கில் குற்றவாளிகள் கைது செய்யப்பட்டனர். விசாரணையில், அவர்கள் அதே நாளில் ஆடு மேய்க்கும் தொழிலாளி ஒருவரையும் கொலை செய்தது தெரியவந்துள்ளது.

கோவை விமான நிலையம் அருகே பிருந்தாவன் நகரில் கடந்த மாதம் 2ம் தேதி ஞாயிற்றுக்கிழமை இரவு காரில் தனது ஆண் நண்பருடன் தனியார் கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வந்த மாணவி பேசிக்கொண்டிருந்தார். அப்போது அவ்வழியாக மதுபோதையில் வந்த மூன்று இளைஞர்கள் ஆண் நண்பரை அரிவாளால் தாக்கிவிட்டு கல்லூரி மாணவியை புதருக்கு தூக்கிச் சென்று மாறி மாறி கூட்டு பாலியல் பலாத்காரம் செய்துவிட்டு அங்கிருந்து தப்பித்தனர்.
இந்த சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதனையடுத்து குற்றவாளிகளை பிடிக்க 7 தனிப்படை அமைக்கப்பட்டு தீவிரமாக தேடிவந்தனர். இந்நிலையில், கூட்டு பாலியல் பலாத்காரத்தில் ஈடுபட்ட குற்றவாளிகள் 3 பேர் கோவை துடியலூர் அருகே உள்ள வெள்ளக்கிணறு பகுதியில் பதுங்கியிருந்த சதீஷ் (30), இவரது சகோதரர் கார்த்தி (21), உறவினர் குணா (20) ஆகியோரை சுட்டு பிடித்தனர். இதனையடுத்து காயம் குணமடைந்த பிறகு அவர்கள் 3 பேரும் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர். மூன்று பேரை காவலில் எடுத்த விசாரித்த போது பல்வேறு அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.
மாணவி பலாத்கார சம்பவம் நடந்ததற்கு முன்பு 3 பேரும் மாலையில், அன்னூர் செராயம்பாளையம் பகுதியில் காட்டில் ஒதுக்குப்புறமான இடத்தில் அமர்ந்து மது அருந்தி உள்ளனர். அப்போது, அங்கு வந்த முத்துக்கவுண்டன்புதூர் குரும்பபாளையத்தை சேர்ந்த ஆடு மேய்க்கும் தொழிலாளி தேவராஜ்(55) என்பவரை கொலை செய்தது தெரியவந்துள்ளது. அன்றைய தினம் இரவில்தான் மாணவி பலாத்கார சம்பவமும் நடந்தது விசாரணையில் தெரியவந்துள்ளது.
இந்நிலையில் கல்லூரி மாணவி கூட்டு பாலியல் பலாத்கார வழக்கில் 50 பக்க குற்றப்பத்திரிக்கையை கோவை மகளிர் கூடுதல் நீதிமன்ற நீதிபதி சிந்து முன்னிலையில் காவல் துறையினர் தாக்கல் செய்தனர். அத்துடன் 400 பக்க ஆவணங்களும் இணைக்கப்பட்டுள்ளன. மேலும் 13 சட்டப் பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. குற்றப்பத்திரிக்கையில் முதல் குற்றவாளியாக கருப்புசாமியும், இரண்டாவது குற்றவாளியாக அவரது தம்பி கார்த்திக்கையும், மூன்றாவது குற்றவாளியாக தவசியையும் சேர்க்கப்பட்டுள்ளனர். தற்போது குற்றவாளிகளின் புகைப்படம் வெளியாகியுள்ளது.

