- Home
- குற்றம்
- ஃபர்ஸ்ட் நைட்டுக்கு பயந்து புதுமாப்பிள்ளை செய்த வேலையை பாருங்களே! ஆர்வத்துடன் காத்திருந்த மணப்பெண் அதிர்ச்சி
ஃபர்ஸ்ட் நைட்டுக்கு பயந்து புதுமாப்பிள்ளை செய்த வேலையை பாருங்களே! ஆர்வத்துடன் காத்திருந்த மணப்பெண் அதிர்ச்சி
உத்தரபிரதேசத்தில், முதலிரவு பதற்றத்தால் புதுமாப்பிள்ளை ஒருவர் வீட்டை விட்டு ஓட்டம் பிடித்தார். நண்பர்கள் கொடுத்த நாட்டு மருந்து சாப்பிட்டும் பயம் தீராததால், விளக்கு வாங்கி வருவதாக கூறிவிட்டு தப்பி ஓடிய அவரை, போலீசார் ஹரித்வாரில் மீட்டனர்.

உத்தரபிரதேச மாநிலம் உஞ்சப்பூரை சேர்ந்தவர் மொஹ்சின் என்ற மோனு (26). இவருக்கு கடந்த நவம்பர் 27ம் அன்று பெற்றோர் மற்றும் உறவினர் முன்னிலையில் திருமணம் நடைபெற்றது. அன்று இரவு அவருக்கு முதலிரவுக்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டது. முதலிரவு என்றால் எல்லோருக்கும் இருப்பது போன்ற பதற்றம் மோனுவுக்கும் இருந்துள்ளது. இதுதொடர்பாக தனது நண்பர்களிடம் ஆலோசனை கேட்டுள்ளார். அவர்கள் விரீயம் மிக்க நாட்டு மருந்தை கொடுத்துள்ளனர்.
அதை சாப்பிட்ட பிறகும் மோனுவுக்கு தன் மீது நம்பிக்கை அச்சத்துடனே இருந்துள்ளார். இதனையடுத்து முதலிரவுக்கு முன்பு வீட்டில் வைக்க விளக்கு வாங்கி வருவதாக கூறிவிட்டு வெளியே சென்ற அவர் யாருக்கும் தெரியாமல் ஓட்டம் பிடித்துள்ளார்.
ஆனால் மணப்பெண்னோ முதலிரவுக்கு ஆர்வத்துடன் காத்திருந்த அவருக்கு ஏமாற்றமே மிஞ்சியது. கணவர் மோனு வராததை கண்டு அதிர்ச்சி அடைந்தார். பின்னர் இரு வீட்டார் உறவினர்களும் மோனுவை பல்வேறு இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை. இதனையடுத்து வேறு வழியில்லாமல் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இந்த புகாரை அடுத்து அப்பகுதியில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி காட்சிகளை போலீசார் ஆய்வு செய்தனர்.
வீட்டை விட்டு ஓடிய மோனு, இரவு நேரத்தில் கங்கை நதி அருகே சுற்றி திரிந்துள்ளார். இந்நிலையில் கடந்த திங்கட்கிழமை ஹரித்வாரில் இருந்து அங்குள்ள ஒருவரின் செல்போன் மூலம் மோனு தனது தந்தையை தொடர்பு கொண்டுள்ளார். இதையடுத்து மீரட் போலீசார் அங்கு சென்று ஹரித்வார் ரயில்நிலைய பகுதியில் சுற்றித்திரிந்த மோனுவை மீட்டு கொண்டு வந்தனர். முதலிரவுக்கு பயந்து புதுமாப்பிள்ளை ஓட்டம் பிடித்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

