- Home
- Cinema
- 299 கி.மீ வேகம்; அதுவும் புல்லட்ல... எப்புட்ரா! TTF வாசனின் முதல் பட பர்ஸ்ட் லுக் பார்த்து ஷாக் ஆன ரசிகர்கள்
299 கி.மீ வேகம்; அதுவும் புல்லட்ல... எப்புட்ரா! TTF வாசனின் முதல் பட பர்ஸ்ட் லுக் பார்த்து ஷாக் ஆன ரசிகர்கள்
சர்ச்சைக்குரிய யூடியூப்பரான டிடிஎப் வாசன் தமிழ் சினிமாவில் ஹீரோவாக அறிமுகமாகி இருக்கும் நிலையில், அவர் நடித்துள்ள முதல் படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி உள்ளது.

TTF Vasan
சினிமாவை போல் யூடியூப் பிரபலங்களுக்கும் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. யூடியூப் சேனல் மூலம் பிரபலமடைந்தவர்களில் டிடிஎப் வாசனும் ஒருவர். பைக் ரைடு செய்யும் வீடியோக்களை பதிவிட்டு 2கே கிட்ஸின் பேவரைட் யூடியூபர் ஆனவர் தான் டிடிஎப் வாசன். யூடியூப் மூலம் எந்த அளவுக்கு பேமஸ் ஆனாரோ, அதே அளவு சர்ச்சையிலும் சிக்கி உள்ளார் வாசன். சர்ச்சைக்குரிய யூடியூப் வீடியோக்களால் இவர் மீது போலீஸ் வழக்குப்பதிவு செய்த சம்பவங்களும் அரங்கேறின.
TTF Vasan
அதுமட்டுமின்றி கடை திறப்பு விழாவுக்கு சென்றபோது இவரது ரசிகர்கள் மீது போலீசார் தடியடி நடத்தியதற்கு எதிர்ப்பு தெரிவித்ததோடு, அவர்களுக்கே சவால் விட்டு பரபரப்பை ஏற்படுத்தினார். இப்படி தொடர் சர்ச்சைகளில் சிக்கி வந்த டிடிஎப் வாசன் தற்போது அதிரடியாக சினிமாவில் காலடி எடுத்து வைத்துள்ளார். அதன்படி அவர் சினிமாவில் ஹீரோவாக அறிமுகமாகும் முதல் படத்தின் டைட்டில் மற்றும் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி உள்ளது.
இதையும் படியுங்கள்... ஹீரோயின்களே தோத்துடுவாங்க.. ட்ரான்ஸ்பரண்ட் சேலையில் விதவிதமாக போஸ்! தேவதர்ஷினி மகள் நியாத்தியின் போட்டோஸ்!
Manjal Veeran
டிடிஎப் வாசனின் பிறந்தநாளான இன்று இந்த போஸ்டர் வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி அவர் நாயகனாக அறிமுகமாகும் படத்திற்கு மஞ்சள் வீரன் என பெயரிட்டு உள்ளனர். இந்த படத்தை செல்அம் என்பவர் இயக்கி வருகிறார். இப்படத்தை தி பட்ஜெட் பிலிம் கம்பேனி என்கிற நிறுவனம் தயாரித்து வருகிறதாம். இந்த பர்ஸ்ட் லுக் போஸ்டரில் கையில் சூலாயுதத்துடன் புல்லட்டில் வீலிங் செய்தவாரு டிடிஎப் வாசன் இருக்கிறார்.
TTF Vasan
இந்த பர்ஸ்ட் லுக் போஸ்டரின் ஹைலைட்டே, 299 கிலோமீட்டர் வேகத்தில் படப்பிடிப்பு ஆரம்பம் என்று குறிப்பிடப்பட்டுள்ளது தான். இந்த பர்ஸ்ட் லுக் போஸ்டரை பார்த்த நெட்டிசன்கள் ட்ரோல் செய்து வருகின்றனர். புல்லட்ல 299 கி.மீ வேகமா எப்புட்ரா என கமெண்ட் செய்து வருகின்றனர். அதுமட்டுமின்றி இந்த போஸ்டர் ரஜினியின் அண்ணாத்த படத்தின் போஸ்டரை பட்டி டிங்கரிங் பார்த்து எடிட் செய்தது போல் உள்ளதாகவும் குறிப்பிட்டு வருகின்றனர். அண்ணாத்த பட போஸ்டரில் ரஜினி இடது கையில் அருவாள் உடன் பைக்கில் வருவார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படியுங்கள்... துல்கர் சல்மான் நடிப்பில் “கிங் ஆஃப் கோதா” படத்தின் பரபரக்க வைக்கும்.. அட்டகாசமான டீசர் வெளியானது !