நானும் அங்கிருந்து வந்தவன் தான்; கடும் எதிர்ப்பால் மன்னிப்பு கேட்ட இர்பான்!
பிரபல யூடியூபரான இர்பான், உதவி செய்ய சென்ற இடத்தில் ஏழை மக்களிடம் கோபமாக பேசியதற்காக மன்னிப்பு கேட்டு வீடியோ ஒன்றை வெளியிட்டு இருக்கிறார்.

Youtuber Irfan Controversy : தமிழ்நாட்டில் புகழ்பெற்ற யூடியூபர்களில் ஒருவராக வலம் வருபவர் இர்பான். ஃபுட் விலாகரான இவருக்கு யூடியூப்பில் 47 லட்சத்திற்கும் அதிகமான சப்ஸ்கிரைபர்கள் இருக்கிறார்கள். தினசரி வீடியோ வெளியிட்டு அதன் மூலம் லட்சக்கணக்கில் சம்பாதித்து வரும் இர்பான், அடிக்கடி சர்ச்சைகளிலும் சிக்குவது உண்டு. முன்னதாக மூதாட்டி ஒருவர் மீது இர்பான் சென்ற கார் மோதியதில் அந்த மூதாட்டி சம்பவ இடத்திலேயே பலியானார்.
தொடந்து சர்ச்சையில் சிக்கும் இர்பான்
இதையடுத்து தன் மனைவி கர்ப்பமாக இருந்தபோது, அவரது வயிற்றில் இருக்கும் குழந்தை ஆணா, பெண்ணா என்பதை தெரிந்துகொள்வதற்காக அவரை துபாய்க்கு அழைத்து சென்று அங்கு டெஸ்ட் எடுத்து, அதன் ரிசல்ட் வந்ததும் அதை ஒரு விழாவாக கொண்டாடி அறிவித்தார். இந்தியாவில் அது சட்டவிரோதம் என்பதால் துபாய்க்கு சென்று இர்பான் இவ்வாறு செய்திருந்தார். இருந்தாலும் அவர் அதை வீடியோவாக வெளியிட்டது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.
இதையும் படியுங்கள்... புது பணக்காரனின் புத்தி இப்படித்தான் இருக்கும்; இர்பானை கிழித்து தொங்க விட்ட விஜே பார்வதி!
சர்ச்சைக்கு பின் மன்னிப்பு
பின்னர் தன் மனைவிக்கு குழந்தை பிறந்தபோது குழந்தையின் தொப்புள் கொடியை தன் கையால் வெட்டிவிட்டது மட்டுமின்றி அதை வீடியோ எடுத்து வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தினார். இவ்வாறு தொடர்ந்து சர்ச்சையில் சிக்கினாலும் அவர்மீது எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கப்படுவதில்லை. திமுகவின் சப்போர்ட் இருப்பதாலேயே அவர் ஒவ்வொரு முறையும் தப்பி வருவதாக விமர்சனங்களும் முன்வைக்கப்படுவதுண்டு. எத்தனை முறை சர்ச்சையில் சிக்கினாலும் இறுதியாக மன்னிப்பு கேட்டு வீடியோ வெளியிடுவதை வழக்கமாக வைத்துள்ளார் இர்பான்.
லேட்டஸ்ட் சர்ச்சை
அந்த வகையில் அண்மையில் ரம்ஜான் பண்டிகையை ஒட்டி ஏழை எளிய மக்களுக்கு உதவி செய்ய தன்னுடைய மனைவி உடன் காரில் சென்ற இர்பான். நிவாரண பொருட்களை காரில் இருந்தவாரே வழங்கினார். அப்போது அதை வாங்க சாலையோரம் வசிக்கும் மக்கள் குவிந்தனர். அவர்கள் நிவாரண பொருட்கள் தங்களுக்கு கிடைக்குமோ... கிடைக்காதோ என்கிற பதற்றத்தில் அவற்றை வேகமாக வாங்கினர். இதனால் டென்ஷன் ஆன இர்பான், அவர்களிடம் சற்று கோபமாக பேசினார். அவர் பேசியதை வீடியோ பதிவும் செய்திருந்தார்.
நானும் அங்கிருந்து வந்தவன் தான்
அவர்களிடம் கோபமாக பேசிவிட்டு சிறிது தூரம் சென்று அதை காமெடியாக சொல்லி சிரித்த காட்சிகளும் அந்த வீடியோவில் இடம்பெற்றன. இர்பானின் இந்த செயலுக்கு கடும் கண்டனங்கள் எழுந்தன. இந்நிலையில், தனது செயலுக்கு மன்னிப்பு கேட்டுள்ளார் இர்பான். அதில், முன்னேற்பாடுகள் ஏதுமின்றி மனைவியுடன் காரில் சென்று உதவி செய்ததால், அந்த சூழலை தன்னால் கையாள தெரியவில்லை. அதில் திணறியதால் சில விஷயங்களை செய்துவிட்டேன். அது யார் மனதையும் புண்படுத்தி இருந்தால் மன்னித்துவிடுங்கள். கஷ்டப்படுபவர்கள் மீது அக்கறை இல்லை என்று சொல்கிறார்கள். அப்படியெல்லாம் இல்லை. நானும் அங்கிருந்து வந்தவன் தான் எனக்கூறி மன்னிப்பு கேட்டுள்ளார் இர்பான்.
இதையும் படியுங்கள்... யூடியூப்பால் கோடீஸ்வரன் ஆன இர்பான்! அவர் சொத்து மதிப்பு இத்தனை கோடியா?