MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Cinema
  • Youth Ken Karunas: 'முட்ட கலக்கி' பாடலின் அசுர சாதனை! திரையுலகை அதிரவைத்த 'யூத்'! கென் கருணாஸின் விஸ்வரூப வெற்றி!

Youth Ken Karunas: 'முட்ட கலக்கி' பாடலின் அசுர சாதனை! திரையுலகை அதிரவைத்த 'யூத்'! கென் கருணாஸின் விஸ்வரூப வெற்றி!

கென் கருணாஸ் இயக்கி நடித்த 'யூத்' திரைப்படத்தின் "முட்ட கலக்கி" பாடல், 100 நாட்களில் 10 கோடி பார்வைகளை கடந்து சாதனை படைத்துள்ளது. இந்த அபார வெற்றி, ஒரு அறிமுக ஹீரோவின் படத்திற்கு கிடைத்திருப்பது மிகப்பெரிய சாதனையாகும்.

2 Min read
Author : Vedarethinam Ramalingam
Published : Apr 15 2026, 10:56 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
17
எல்லோரையும் கவரந்த கென் கருணாஸ்.!
Image Credit : X

எல்லோரையும் கவரந்த கென் கருணாஸ்.!

திரை உலகில் சில நேரங்களில் எதிர்பாராத வெற்றிகள் வரலாறாக மாறும். பெரிய நட்சத்திரங்கள் இல்லாமலேயே, ஒரு புதிய முகம் வந்து ரசிகர்களின் மனதை கவர்ந்து சாதனை படைக்கும் போது அது பேசுபொருளாக மாறுவது உறுதி. அப்படிப்பட்ட ஒரு அதிரடி தருணத்தையே உருவாக்கியுள்ளது Ken Karunas இயக்கி நடித்த Youth திரைப்படம்.

27
விஜிட்டேரியனுக்கும் பிடித்த முட்டக்கலக்கி
Image Credit : X

விஜிட்டேரியனுக்கும் பிடித்த முட்டக்கலக்கி

இந்த படத்தின் உண்மையான ஹைலைட் “முட்ட கலக்கி” பாடல் தான். இசையமைப்பாளர் G. V. Prakash Kumar இசையில் உருவான இந்த பாடல், வெளியான முதல் நாளிலிருந்தே இளைஞர்களின் மனதை கவர்ந்தது. கேட்கும் தருணத்தில் உடனே “லூப் மோட்” போட வைக்கும் இந்த பாடல், சமூக வலைதளங்களில் வைரலாக பரவியது.

Related Articles

Related image1
Youth Box Office Day 1 : பாக்ஸ் ஆபிஸ் கிங் ஆக மாறிய கென் கருணாஸ்... யூத் முதல் நாள் வசூலே இத்தனை கோடியா?
Related image2
Now Playing
Youth movie Review | யூத் திரைப்படம் எப்படி இருக்கு ?! | Ken Karunaas | Suraj Venjaramoodu
37
டாப் ஹிரோக்களை முந்திய கென் கருணாஸ்.!
Image Credit : X

டாப் ஹிரோக்களை முந்திய கென் கருணாஸ்.!

இதன் விளைவாக, வெறும் 100 நாட்களுக்குள் 10 கோடி பார்வைகளை கடந்தது “முட்ட கலக்கி”. இந்த சாதனை சாதாரண விஷயம் அல்ல. பொதுவாக பெரிய ஹீரோக்களின் பட பாடல்களுக்கே இந்த அளவிலான பார்வைகளை எட்ட சிரமமாக இருக்கும் நிலையில், ஒரு அறிமுக ஹீரோவின் பாடல் இவ்வளவு வேகத்தில் இந்த மைல்கல்லை எட்டியது திரையுலகையே ஆச்சரியப்படுத்தியுள்ளது.

47
உண்மையில் கென் செய்தது மிகப்பெரிய சாதனை
Image Credit : X

உண்மையில் கென் செய்தது மிகப்பெரிய சாதனை

தமிழ் சினிமாவில் இதற்கு முன் Anirudh Ravichander இசையில் உருவான “Why This Kolaveri Di” பாடல் உலகளவில் பெரிய சாதனை படைத்திருந்தது. ஆனால் அது இசையமைப்பாளரின் அறிமுக வெற்றி. இங்கு கென் கருணாஸ் நடிகர், இயக்குநர், பாடலாசிரியர் எனப் பல பொறுப்புகளை ஏற்று, அதிலும் வெற்றி கண்டிருக்கிறார் என்பது இந்த சாதனையை இன்னும் உயர்த்துகிறது.

57
 100 நாட்களில் 10 கோடி பார்வைகள்
Image Credit : X

100 நாட்களில் 10 கோடி பார்வைகள்

மேலும், HipHop Tamizha Adhi நடித்த “Meesaya Murukku” போன்ற படங்களின் பாடல்களும் இளைஞர்களிடையே வைரலாக இருந்தாலும், “முட்ட கலக்கி” பாடலின் வேகம் தனித்துவமானது. 100 நாட்களில் 10 கோடி பார்வைகள் என்பது புதிய அளவுகோலாக மாறியுள்ளது.

67
ஒரு அறிமுக ஹீரோவுக்கு கிடைக்கும் மிகப்பெரிய அங்கிகாரம்.!
Image Credit : X

ஒரு அறிமுக ஹீரோவுக்கு கிடைக்கும் மிகப்பெரிய அங்கிகாரம்.!

பாக்ஸ் ஆபீஸிலும் Youth திரைப்படம் சுமார் 70 கோடி ரூபாய் வரை வசூல் செய்ததாக கூறப்படுகிறது. இது ஒரு அறிமுக ஹீரோவுக்கு கிடைக்கும் மிகப்பெரிய வெற்றிகளில் ஒன்றாக பார்க்கப்படுகிறது. கார்த்திக் அறிமுகமான அலைகள் ஓய்வதில்லை படத்திற்கும் பாடல்களுக்கும் இதே வரவேற்பு கிடைத்ததாம்.

77
இது வெறும் வெற்றி அல்ல… ஒரு விஸ்வரூபம்!
Image Credit : X

இது வெறும் வெற்றி அல்ல… ஒரு விஸ்வரூபம்!

மொத்தத்தில், “முட்ட கலக்கி” பாடலின் அசுர சாதனையும், Youth படத்தின் வெற்றியும் சேர்ந்து, கென் கருணாஸை தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத ஒரு புதிய சக்தியாக மாற்றியிருக்கிறது. இது வெறும் வெற்றி அல்ல… ஒரு விஸ்வரூபம்!

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

About the Author

VR
Vedarethinam Ramalingam
இவர் பொறியியல் பட்டதாரி. செய்தி எழுதுவதில் 17 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் உள்ளவர். சன் தொலைக்காட்சி, தந்தி டிவி பணியாற்றியுள்ள இவர், ஏசியாநெட் நியூஸ் தமிழில் இணைந்துள்ளார். வணிகம், முதலீடுகள் தொடர்பான செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர். எதிர்கால தேவைகளுக்குக்கு முதலீடு அவசியம் என்பதை அடித்தட்டு மக்களும் புரிந்துகொள்ளும் வகையில் எழுதி வருகிறார். இயற்கை விவசாயம் குறித்த படைப்புகளை படைப்பதிலும் கைதேர்ந்தவர்.
சினிமா
சினிமா காட்சியகம்
திரைப்படம்
திரைப்பட விமர்சனம்
இசை

Latest Videos
Recommended Stories
Recommended image1
பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியலில் மெகா ட்விஸ்ட்! தங்கமயில் கர்ப்பமாக இருக்கும் ரகசியத்தை உடைத்த மீனா - கதிகலங்கிய குடும்பம்!
Recommended image2
ஹாலிவுட் ரேஞ்சுக்கு ரிஸ்க் எடுத்த நடிகர்: உறைபனி நீரில் 90 நிமிடம் சண்டை - சினிமாவுக்காக ஆர்யா செய்த மிரட்டலான செயல்!
Recommended image3
விநியோகஸ்தர்களுடன் தயாரிப்பாளர் திடீர் சந்திப்பு - 'ஜன நாயகன்' படக்குழுவின் அதிரடி மூவ்
Related Stories
Recommended image1
Youth Box Office Day 1 : பாக்ஸ் ஆபிஸ் கிங் ஆக மாறிய கென் கருணாஸ்... யூத் முதல் நாள் வசூலே இத்தனை கோடியா?
Recommended image2
Now Playing
Youth movie Review | யூத் திரைப்படம் எப்படி இருக்கு ?! | Ken Karunaas | Suraj Venjaramoodu
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved