- Home
- Cinema
- Youth Box Office Day 1 : பாக்ஸ் ஆபிஸ் கிங் ஆக மாறிய கென் கருணாஸ்... யூத் முதல் நாள் வசூலே இத்தனை கோடியா?
Youth Box Office Day 1 : பாக்ஸ் ஆபிஸ் கிங் ஆக மாறிய கென் கருணாஸ்... யூத் முதல் நாள் வசூலே இத்தனை கோடியா?
நடிகர் கருணாஸின் மகன் கென் இயக்கி, ஹீரோவாக நடித்துள்ள யூத் திரைப்படம் யுகாதி பண்டிகையன்று திரையரங்குகளில் ரிலீஸ் ஆன நிலையில், அதன் வசூல் நிலவரத்தை பார்க்கலாம்.

Youth Movie Day 1 Box Office
இயக்குநர் ஆகவேண்டும் என்கிற நடிகர் கென் கருணாஸின் கனவு நனவாகி இருக்கிறது. அசுரன் படத்தில் தனுஷ் உடன் போட்டிபோட்டு நடித்திருந்த இவர், இப்போது யூத் என்ற படத்தை இயக்கியதோடு மட்டுமின்றி அதில் ஹீரோவாகவும் நடித்து, தன்னுடைய மொத்த திறமையையும் இறக்கி இருக்கிறார். மார்ச் 19 அன்று திரையரங்குகளில் ரிலீஸ் ஆன இந்தப் படம் பார்வையாளர்களிடம் அமோக வரவேற்பைப் பெற்றுள்ளது. முதல் பாதி நகைச்சுவையாகவும், இரண்டாம் பாதி செண்டிமெண்டாகவும் சென்றாலும், கடைசி கிளைமாக்ஸ் காட்சி ரசிகர்களை திருப்தியுடன் வெளியேற வைக்கின்றன என பலரும் தெரிவித்துள்ளனர்.
பாசிடிவ் விமர்சனங்களை பெறும் யூத்
படத்தின் தலைப்பு 2002ல் விஜய் நடித்த வெற்றிப்படத்தின் பெயரை ஒத்திருந்தாலும், கதையை பொருத்தவரை கென் கருணாஸ் ஒரு சிம்பு ரசிகராக படம் முழுவதும் வருகிறார். இசையமைப்பாளர் ஜி.வி. பிரகாஷ் குமார் இந்தப் படத்திற்கு எந்த தொகையும் பெறாமல் இசையமைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. நட்பின் பெயரில் செய்த இந்த உதவி படக்குழுவிற்கு பெரும் ஊக்கமளித்துள்ளது. சுராஜ் வெஞ்சரமூடு, வேதவர்ஷினி உள்ளிட்டோர் நடிப்பில் இந்தப் படம் உருவாகியுள்ளது. அவர்களின் அனுபவம் மிக்க நடிப்பு எமோஷனல் காட்சிகளை தூக்கி நிறூத்தி உள்ளது.
யூத் பட வசூல்
யூத் திரைப்படம் நேற்று தமிழ்நாட்டில் சோலோவாக ரிலீஸ் ஆகி உள்ளது. இதற்கு போட்டியாக வந்தது துரந்தர் 2 படம் தான். அதற்கு பெரியளவில் வரவேற்பு இருந்தாலும் அதையெல்லாம் தூக்கி சாப்பிடும் அளவுக்கு வசூலை வாரிக் குவித்து உள்ளது யூத். அப்படம் ரிலீஸ் ஆன முதல் நாளே ரூ.3.5 கோடி வசூலித்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. ஒரு அறிமுக நடிகருக்கு இது மிகப்பெரிய தொகை ஆகும். இதேபோல் தான் லவ் டுடே படம் ரிலீஸ் ஆனபோது வசூலித்திருந்தது. அப்படத்திற்கு பின் பிரதீப் ரங்கநாதன் மிகப்பெரிய ஸ்டார் ஆக உருவெடுத்துவிட்டார். அதேபோல் கென் கருணாஸும் வருவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
யூத் படத்துக்கு ஜாக்பாட்
தாய் கிழவி படத்துக்கு பின்னர் தமிழ் சினிமாவில் கடந்த சில வாரங்களாக வெளிவந்த படங்கள் அனைத்தும் தோல்வியை சந்தித்தன. இதனால் துவண்டு போய் இருந்த தியேட்டர் ஓனர்களுக்கு வரப்பிரசாதமாக யூத் படம் வந்துள்ளது. இப்படம் அமோக வரவேற்பை பெற்று வருவதால், அடுத்த சில வாரங்களுக்கு நல்ல வசூலை வாரிக் குவிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதன்பின் அடுத்த மாதம் தேர்தல் வரை பெரிய படங்கள் எதுவும் ரிலீஸ் ஆகாது என்பதால், யூத் படத்திற்கு இந்த வார வெளியீடு ஒரு ஜாக்பாட் ஆக அமைந்திருக்கிறது. இப்படம் வசூலில் என்னென்ன சாதனை படைக்கப் போகிறது என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

