நடிகையை கரம் பிடித்த சூப்பர் ஹிட் பட இயக்குனர்..! குவியும் வாழ்த்து..!
இயக்குநர் தேசிங்கு பெரியசாமிக்கும் நடிகை நிரஞ்சனிக்கும் இன்று மிகப்பிரமாண்டமாக திருமணம் நடந்து முடிந்துள்ளது.
niranjani
தல அஜித்துக்கு, திரையுலகில் மிகப்பெரிய திருப்புமுனையாக அமைந்த, 'காதல் கோட்டை' படத்தின் மூலம், தேசிய விருது உட்பட பல விருதுகளை அள்ளிய இயக்குனர் அகத்தியரின் மூன்றாவது மகள், நிரஞ்சனி தான் இன்று மிக பிரமாண்டமாக திருமணம் நடந்து முடிந்துள்ளது.
கடந்த ஆண்டு எதார்த்தமான கதையை இயக்கி, ஹிட் படத்தை கொடுத்த இயக்குனர் தேசிங்கு பெரியசாமி இயக்கியதில், 'கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்' படத்தில் நடித்தபோது நிரஞ்சனிக்கும் இவருக்கும் காதல் பற்றிக்கொண்டது.
இவர்களது காதலுக்கு இரு வீடு தரப்பினரும் பச்சை கொடி காட்டியதை தொடர்ந்து, இவர்களது திருமணம் குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு நிலையில், பிப்ரவரி 25 ஆம் தேதி, இன்று இவர்கள் திருமணத்தை நடத்த பெற்றோர் முடிவு செய்திருந்தனர்.
அந்த வகையில் இன்று, இவர்களுக்கு திருமணம் நடந்து முடிந்துள்ளது. மேலும் இந்த இளம் ஜோடிகளின் திருமண புகைப்படங்கள் வெளியாகி வைரலாக பார்க்கப்பட்டு வருகிறது. ரசிகர்களும் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.