கில்லி படம் முதல் லியோ வரை இணைந்து நடித்ததால் விஜய் - த்ரிஷா இடையே காதல் வதந்திகள் பல ஆண்டுகளாக பரவி வருகின்றன. விஜய்-த்ரிஷா இடையேயான காதல் வதந்திகள் அவ்வப்போது வரும், ஆனால் இருவரும் அதை ஒருபோதும் உறுதி செய்ததில்லை.

நடிகர் விஜய் மற்றும் த்ரிஷா இடையேயான உறவு குறித்த வதந்தி தமிழ் சினிமாவில் பல ஆண்டுகளாக பரவி வரும் ஒன்று. 2024 டிசம்பர் 12-ம் தேதி கீர்த்தி சுரேஷ் தனது காதலர் ஆண்டனி தட்டிலை திருமணம் செய்துகொண்டார்.

இந்த திருமணத்திற்கு விஜய் மற்றும் த்ரிஷா ஆகியோர் தனி சார்ட்டர்டு விமானத்தில் சென்னையிலிருந்து கோவாவுக்கு ஒன்றாக சென்றதாக கூறப்படுகிறது. விமான நிலையத்தில் அவர்கள் செக்யூரிட்டி செக் செய்யும் வீடியோக்கள் மற்றும் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகின. விஜய், த்ரிஷா மற்றும் அவர்களது உதவியாளர்கள் உட்பட 6 பேர் கொண்ட பேசஞ்சர் லிஸ்ட் புகைப்படம் பரவியது.

இதனையடுத்து சமூக வலைதளங்களில் #JusticeForSangeetha என விஜயின் மனைவி சங்கீதாவுக்கு நீதி என்ற ஹேஷ்டேக் ட்ரெண்ட் ஆனது.பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை கூட இந்த புகைப்படங்கள் எப்படி கசிந்தன என்று கேள்வி எழுப்பி, மத்திய அமைச்சருக்கு கடிதம் எழுதியதாக தகவல் வெளியானது. 2024 டிசம்பரில் உச்சத்தில் இந்த விவகாரம் பரபரப்பாக பேசப்பட்டது.

தற்போது பரவும் பேசஞ்சர் லிஸ்ட்

உண்மை நிலை என்ன?

2024 டிசம்பர் 12 அன்று நடிகை கீர்த்தி சுரேஷின் கோவா திருமணத்திற்கு இருவரும் ஒரே தனி விமானத்தில் சென்றதாக பேசஞ்சர் லிஸ்ட் வெளியானது. சரியாக ஒராண்டுக்குப்பிறகு தற்போது அதே பேசஞ்சர் லிஸ்ட் வெளியாகி மீண்டும் த்ரிஷாவுடன் விஜய் விமானப்பயணம் எனக்கூறி சமூக வலைதள பதிவுகளில் த்ரிஷாவுடன் விஜய் இருக்கும் விமானத்தில் எடுக்கப்பட்ட புகைப்படங்கள் பரப்பப்பட்டு வருகின்றன. அதே பேசஞ்சர் லிஸ்டை போட்டோ ஷாப் செய்து 2024க்கு பதிலாக 2025 என மாற்றி மீண்டும் சமூக வலைதளங்களில் வதந்தி பரப்பப்பட்டு வருகிறது. சமூகவலைதளங்களில் இப்போது பரவும் தகவல்களில் உண்மை இல்லை.

ஒரிஜினல் பேசஞ்சர் லிஸ்ட்

விஜய் தவெகவை தொடங்கிய பிறகு, இது அவரது இமேஜுக்கு பாதிப்பு ஏற்படுத்த சிலர் முயன்று வருகின்றனர். விஜயோ, த்ரிஷாவோ இதுவரை இந்த வதந்திகளுக்கு அதிகாரப்பூர்வமாக பதிலளித்ததில்லை. பலரும் இது நட்பு மட்டுமே என்று கூறுகின்றனர்.

கில்லி படம் முதல் லியோ வரை இணைந்து நடித்ததால் விஜய் - த்ரிஷா இடையே காதல் வதந்திகள் பல ஆண்டுகளாக பரவி வருகின்றன. விஜய்-த்ரிஷா இடையேயான காதல் வதந்திகள் அவ்வப்போது வரும், ஆனால் இருவரும் அதை ஒருபோதும் உறுதி செய்ததில்லை. த்ரிஷா சில சமயம் இதுகுறித்து மறைமுகமாக பதிலளித்திருக்கிறார். விஜய் தற்போது அரசியலில் கவனம் செலுத்தி வருகிறார். இது போன்ற வதந்திகள் சினிமா உலகில் சகஜம், என்றாலும் தனிப்பட்ட விஷயங்கள் மதிக்கப்பட வேண்டும் என்பதே பலரது கருத்தாக உள்ளது.