Yashika Aannand : எக்குத்தப்பாக கிழிந்த உடையில் மனதை மயக்கும் யாஷிகா ஆனந்த்
அவரது ஹிட் புகைப்படங்கள் வரிசையில் தற்போது வெளியாகியுள்ள புகைப்படமும் சேர்ந்துள்ளது.
Yashika Aannand
யாஷிகா ஆனந்த் தனது 14 வயதில் இனிமே இப்படித்தான் என்னும் படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானார். இதில் சந்தானம் நாயகனாக தோன்றியிருந்தார். ஒரு பாடலுக்கு மட்டும் நடனம் ஆடி இருந்தார் யாஷிகா ஆனந்த்.
Yashika Aannand
பின்னர் கவலை வேண்டாம் என்னும் படத்தில் நீச்சல் பயிற்றுவளராக நடித்திருந்தார் யாஷிகா ஆனந்த். துருவங்கள் பதினாறு, தம்பி ராமையாவின் மணியார் குடும்பம் உள்ளிட்ட படங்களிலும் நடித்துள்ளார் யாஷிகா.
மேலும் செய்திகளுக்கு...Priya Bhavani Shankar : சேலை அழகில் ஜொலிக்கும் பிரியா பவானி சங்கர்...சூப்பர் கூல் போட்டோஸ் இதோ
அடல்ட் காமெடி படமான இருட்டு அறையில் முரட்டு குத்து என்னும் படத்தில் கவர்ச்சியை அள்ளித்தூவி இருந்தார். இந்தப் படம் தாய்லாந்தில் படமாக்கப்பட்டது. பாக்ஸ் ஆபிஸிலும் நல்ல வெற்றியைப் பெற்ற இதைத்தொடர்ந்து பிக் பாஸ் தமிழ் ரியாலிட்டி ஷோவின் இரண்டாவது சீசனில் பங்கேற்றார். இதன்மூலம் பட்டி தொட்டி எல்லாம் ரசிகர்கள் கிடைத்தனர்.
குட்டி டவுசர் உடன் வலம் வந்த இவருக்கு அதிக ரசிகர் பட்டாளமும் உண்டு. 98 வது நாளில் வெளியேற்றப்பட்டு ஐந்தாவது இடத்தில் பிடித்திருந்தார் யாஷிகா ஆனந்த். ஆனால் வெளியேறுவதற்கு முன்ராகவே பரிசு தொகையை எடுத்துக்கொண்டு தானாக வெளியேறினார் யாஷிகா.
ஜோம்பி திரைப்படத்தில் முக்கிய வேடத்தில் நடித்திருந்தார். இந்த படத்தில் யோகி பாபு உள்ளிட்டோரும் நடித்திருந்தனர். 2018 ஆம் ஆண்டு சென்னை டான்ஸ், பின்னர் மூக்குத்தி அம்மன், பெஸ்டி, மேதை கடமையை செய் உள்ளிட்ட படங்களிலும் நடித்துள்ளார் யாஷிகா.
இதற்கிடையே தனது நண்பர்களுடன் பார்ட்டிக்கு சென்று திரும்பி யாஷிகாவிற்கு மிகப்பெரிய விபத்து ஏற்பட்டது. தடுப்பு சுவரில் தனது காரை மோதினார் யாஷிகா. இதனால் அவரது தோழி சம்பவ இடத்திலேயே உயிரிழக்க இவருக்கு காலில் எலும்பு முறிவு ஏற்பட்டது. இதன் காரணமாக எட்டு மாதங்கள் சிகிச்சைக்குப் பிறகு தற்போது பழைய நிலைக்கு வந்துள்ளார்.
yashika aannand
பழைய நிலைக்கு திரும்பிய யாஷிகா ஆனந்த் முன்பை விட கடுமையான கவர்ச்சியை கொட்டி தீர்த்து வருகிறார். அவரது புகைப்படங்கள் அனைத்துமே ட்ரெண்டாவது வழக்கமாகிவிட்டது.
yashika aannand
சமீபத்தில் இவன்தான் உத்தமன், ராஜ பீமா, பாம்பாட்டம், கந்தகம், சிறுத்தை சிவா உள்ளிட்ட அரை டெஜனுக்கும் மேற்பட்ட படங்களை தன் கைவசம் வைத்துள்ளார் யாஷிகா ஆனந்த். அவரது ஹிட் புகைப்படங்கள் வரிசையில் தற்போது வெளியாகியுள்ள புகைப்படமும் சேர்ந்துள்ளது.