Priya Bhavani Shankar : சேலை அழகில் ஜொலிக்கும் பிரியா பவானி சங்கர்...சூப்பர் கூல் போட்டோஸ் இதோ
ஒவ்வொரு முறையும் இவர் வெளியிடும் புகைப்படங்கள் வைரல் ஆவது வழக்கம். தற்போது ஸ்லீவ் லெஸ் சேலை அழகில் ஜொலித்திருக்கிறார் பிரியா பவானி சங்கர்.
priya bhavani shankar
சின்னத்திரையில் இருந்து வெள்ளித்துறைக்கு வந்த நாயகிகளில் ஒருவர் தான் பிரியா பவானி சங்கர். புதிய தலைமுறையில் செய்தி தொகுப்பாளராக இருந்து ஸ்டார் தொலைக்காட்சிகள் சீரியல் நடிகையாக மாறியவர் பிரியா பவானி சங்கர்.
priya bhavani shankar
கல்யாண முதல் காதல் வரை என்னும் தொடரில் நாயகியாக நடித்திருந்தார். இந்த தொடர் மூலம் பட்டிதொட்டி எல்லாம் பிரபலமாகிவிட்டார் பிரியா பவானி. இதையடுத்து வைபவ் நாயகனாக நடித்த மேயாத மான் என்னும் படத்தில் இவருக்கு நாயகியாகவும் வாய்ப்பு கிடைத்தது. அந்தப் படத்திற்காக சிறந்த பெண் அறிமுகத்திற்கான விருதையும் பெற்றுவிட்டார் பிரியா பவானி சங்கர்.
priya bhavani shankar
இதை தொடர்ந்து கார்த்திக்கு ஜோடியாக கடைக்குட்டி சிங்கத்தில் மூன்று நாயகிகளில் ஒருவராக நடித்திருந்தார். பின்னர் எஸ் ஜே சூர்யாவுடன் மான்ஸ்டர் படத்தில் ஹீரோயினியாக வந்த இவருக்கு மிகுந்த பாராட்டுக்கள் குவிந்திருந்தது.
பின்னர் அத்தியாயம் ஒன்று என்னும் வெப் தொடரிலும் இவர் நடித்தார். அதை தொடர்ந்து டைம் என்ன பாஸ் என்கிற தொடரிலும் தோன்றியிருந்தார். 2021 ஆம் ஆண்டு ஜீவா மற்றும் அருள்நிதியுடன் களத்தில் சந்திப்போம், சந்திப் கிருஷ்ணன் உடன் கசடதபற, ஓ மணப்பெண்ணே உள்ளிட்ட படங்களில் நடித்திருக்கிறார் பிரியா பவானி சங்கர்.
Priya Bhavani Shankar
2002 ஆம் ஆண்டு அதாவது இந்த ஆண்டு துவக்கத்தில் அருண் விஜயுடன் யானை படத்திலும், அதர்வாவுக்கு ஜோடியாக குருதியாட்டம், இரண்டாவது முறையாக எஸ் ஜே சூர்யா உடன் பொம்மை, அசோக் செல்வனுக்கு ஜோடியாக ஹாஸ்டல் ஆகிய படங்களில் நடித்து முடித்துள்ளார்.
Priya Bhavani Shankar
யானை படத்தில் இவரது நடிப்பு ரசிகர்களை வெகுவாகவே கவர்ந்தது. மேலும் தனுஷின் திருச்சிற்றம்பலம் படத்திலும் மூன்று நாயகிகளில் ஒருவராக ரஞ்சனி வேடத்தில் தோன்றி, சிறிது நேரத்திலேயே ரசிகர்களின் பார்வையை தன் பக்கம் திருப்பி இருந்தார்.
Priya Bhavani Shankar
அதோடு ஜெயம் ரவியின் அகிலன் படத்திலும் நாயகியாக நடித்துள்ளார் பிரியா பவானி சங்கர். தனுஷின் பத்து தல, கமலஹாசனின் இந்தியன் 2 உள்ளிட்ட படங்களிலும் ஒப்பந்தமாகியுள்ளார். தொலைக்காட்சியிலிருந்து திரைத்துறைக்கு வந்து பிரபலமான இவர் அவ்வப்போது தனது அழகான புகைப்படங்களையும் சமூக வலைத்தளத்தில் வெளியிட்டு வருகிறார்.
Priya Bhavani Shankar
முன்னதாக சேலை அழகில் தோன்றியவர் தற்போதெல்லாம் கொஞ்சம் கவர்ச்சியை கூட்டித்தான் விட்டுவிட்டார். அந்த வகையில் ஒவ்வொரு முறையும் இவர் வெளியிடும் புகைப்படங்கள் வைரல் ஆவது வழக்கம். தற்போது ஸ்லீவ் லெஸ் சேலை அழகில் ஜொலித்திருக்கிறார் பிரியா பவானி சங்கர்.