- Home
- Cinema
- KGF : ரசிகர்களுக்கு ராக்கி பாய் கொடுத்த சர்ப்ரைஸ்... Beast-க்கு முன்னரே தியேட்டர்களில் ரிலீசானது கே.ஜி.எஃப்
KGF : ரசிகர்களுக்கு ராக்கி பாய் கொடுத்த சர்ப்ரைஸ்... Beast-க்கு முன்னரே தியேட்டர்களில் ரிலீசானது கே.ஜி.எஃப்
KGF : அடுத்தவாரம் பீஸ்ட் மற்றும் கே.ஜி.எஃப் 2 என இரண்டு பிரம்மாண்ட படங்கள் வெளியாக உள்ள காரணத்தால், இந்த வாரம் எந்த புதுப்படங்களும் வெளியிடப்படவில்லை.

கன்னட நடிகர் யாஷ் நடிப்பில் கடந்த 2018-ம் ஆண்டு வெளியாகி பிளாக்பஸ்டர் ஹிட்டான படம் கே.ஜி.எஃப். தற்போது அப்படத்தின் இரண்டாம் பாகம் தயாராகி உள்ளது. பிரசாந்த் நீல் இயக்கி உள்ள இப்படத்தில் யாஷுக்கு ஜோடியாக ஸ்ரீநிதி ஷெட்டி நடித்துள்ளார். மேலும் பிரகாஷ் ராஜ், ரவீனா டண்டன், மாளவிகா அவினாஷ், சரண் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். பிரபல பாலிவுட் நடிகர் சஞ்சய் தத் வில்லனாக நடித்துள்ளார்.
கே.ஜி.எஃப் 2 திரைப்படம் வருகிற ஏப்ரல் 14-ந் தேதி வெளியாக உள்ள நிலையில், அப்படத்துக்கு போட்டியாக விஜய்யின் பீஸ்ட் திரைப்படம் வருகிற ஏப்ரல் 13-ந் தேதியே ரிலீசாக உள்ளது. இந்த இரண்டு படங்களுமே பான் இந்தியா படங்களாக வெளியாக உள்ளதால், இந்தியா முழுவதும் இப்படங்களுக்கான எதிர்பார்ப்பு அதிகரித்த வண்ணம் உள்ளது.
இந்நிலையில், தற்போது கே.ஜி.எஃப் திரைப்படத்தின் முதல் பாகம் தற்போது திரையரங்குகளில் ரீ-ரிலீஸ் செய்யப்பட்டு உள்ளது. அடுத்தவாரம் பீஸ்ட் மற்றும் கே.ஜி.எஃப் 2 என இரண்டு பிரம்மாண்ட படங்கள் வெளியாக உள்ள காரணத்தால், இந்த வாரம் எந்த புதுப்படங்களும் வெளியிடப்படவில்லை. ஆர்.ஆர்.ஆர் படம் தான் பெரும்பாலான திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கிறது.
கே.ஜி.எஃப் முதல் பாகம் வெளியாகி 4 ஆண்டுகளுக்கு பின்னரே அதன் 2-ம் பாகம் வெளியாக உள்ளது. இதனால் முதல் பாகத்தை பார்த்த பின் அதன் இரண்டாம் பாகத்தை பார்க்க சென்றால், மக்களால் அதனை ஈஸியாக கனெக்ட் செய்துகொள்ள முடியும் என்ற காரணத்தால் தற்போது அப்படத்தை திரையரங்குகளில் வெளியிட்டுள்ளார்களாம்.
இதையும் படியுங்கள்... Director Hari : தமிழ் சினிமாவுக்கு ரெஸ்ட் விட்டு... மாஸ் ஹீரோ மூலம் டோலிவுட்டில் அறிமுகமாகிறார் இயக்குனர் ஹரி